இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

வெள்ளி, 21 மே, 2021

தகரை (பொன்னாவிரை)

 

            மூலிகைப் பெயர்........................பொன்னாவாரை

            மாற்றுப் பெயர்கள்..........................................தகரை

            தாவரவியல் பெயர்....................CAESALPINIACEAE

            ஆங்கிலப்பெயர்..................................CASSIA SENNA

 

     =================================================

 

01.     பொன்னாவாரை குறுஞ் செடி வகையைச் சேர்ந்தது .எதிர் அடுக்கில் அமைந்த இலைக் கொத்துகளை உடைய செடி. இலைகள் நடுவில் அகலமாகவும், நுனியில் கூர்மையாகவும் இருக்கும்.

 

02.     பொன்னாவாரையில் பூக்கள் மஞ்சள் நிறமாக இருக்கும். இப்பூக்கள் ஆவாரம்  பூக்கள் போன்றே மஞ்சள் நிறத்தில் இருப்பதால் பொன்னாவாரை என்ற பெயரைப் பெற்று உள்ளது இச்செடி. .

 

03.     பொன்னாவாரைக் காய்கள் சுமார் 15 செ.மீ நீளம் இருக்கும். காய்களுக்குள் விதைகள் வரிசையாக அடுக்கி வைக்கப் பட்டது போல் அமைந்திருக்கும்.

 

04.     பொன்னாவாரை வேரை எடுத்து எலுமிச்சம் பழச் சாறு விட்டு அரைத்துப் பூசி வந்தால் தோல் நோய்கள் குணமாகும். (993)

 

05.     பொன்னாவாரை வேர், சுக்கு, மிளகு, சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து கசாயம் வைத்துக் குடித்து வந்தால் பித்த பாண்டு குணமாகும். (1507)

 

06.     பொன்னாவாரை இலை, பொன்னாவாரை விதை சம அளவு எடுத்து அரைத்து ஒரு நெல்லிக் காயளவு வெந்நீரில் சாப்பிட்டால் (சிரமமின்றி) சுகபேதியாகும். வயிறும் சுத்தமாகும். (386)(1500)

 

07.     பொன்னாவாரை இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து உடலில் பூசிக் குளித்து வந்தால் சொறி சிரங்கு மறையும். (456)

 

08.     பொன்னாவாரைக் கீரையை சமைத்து உணவுடன் சேர்த்து உண்டு வந்தால் அளவுக்கு அதிகமாக இருக்கும் உடம்பு குறைந்து (எடை குறைந்து) நலம் பெறலாம். (1058) (1306)

 

09.     பொன்னாவாரை விதையை பசும்பால் விட்டு மைய அரைத்து குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் கக்குவான் இருமல் குணமாகும். ((146) (153)

 

10.     பொன்னாவாரை விதைகளை எடுத்து மைய அரைத்து, சிறு நெல்லிக் காயளவு குளிர்ந்த நீருடன் கலந்து உள்ளுக்கு அருந்தினால் அசதி நீங்கி உடல் புத்துணர்ச்சி பெறும். (785)

=======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !


===================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,விடை(வைகாசி )07]

{21-05-2021}

===================================================

தகரை

தகரை

தகரை

தகரை

செம்பருத்தி

 

       மூலிகைப் பெயர்.......................................செம்பருத்தி

       

       மாற்றுப் பெயர்கள்............சப்பாத்து, செம்பரத்தை

        

       .....................................................................ஜாபா (சமஸ்)

       

       தாவரவியல் பெயர்............HIBISCUS ROSA SINENSIS

       

       சுவை........................................................................துவர்ப்பு

       

       தன்மை...................................................................குளிர்ச்சி

            


===================================================

 

01.    கூர் நுனியுடன் ஈட்டி வடிவ இலைகளையும் செந்நிற மலர்களையும் உடைய செடியினம். பல நிறங்களில் பூக்கக் கூடிய செடி வகைகளும் உள்ளன. ஒற்றை அடுக்கில் செந்நிறப் பூக்களைக் கொண்டதே மருத்துவத்திற்குப் பயன்படுகிறது.

 

02.    செம்பருத்தி இலை, பூ, வேர் ஆகியவை மருத்துவப் பயன் உடையவை. வெப்பு அகற்றி, சிறுநீர் பெருக்கி, காமம் பெருக்கும் செய்கையுடையது.

 

03.    இலையை நீரிலிட்டுக் காய்ச்சி, வடிகட்டி, கற்கண்டு சேர்த்துப் பருகினால் நீர் எரிச்சல் தீரும்

 

04.    பூவை நீரிலிட்டுக் காய்ச்சி வடிகட்டி, பாலும் சர்க்கரையும் சேர்த்து, காலை, மாலை பருக மார்பு வலி, இதய பலவீனம் தீரும். காபி, தேநீர், புகையிலை நீக்க வேண்டும்.

 

05.    செம்பருத்திப் பூவை நல்லெண்ணையில் இட்டுக் காய்ச்சி தலைக்குத் தடவி வந்தால், முடி கறுத்து  அடர்ந்து வளரும்.

 

06.    செம்பருத்திச் செடியின் வேரைக் குடிநீர் செய்து நாட்பட்ட சுரங்களுக்குக் கொடுத்துவர குணமாகும்.

 

07.    செம்பரத்தை வேர்ப் பட்டை, இலந்தை மரப் பட்டை, மாதுளம் பட்டை சமனளவு சூரணம் செய்து 4 சிட்டிகை காலை,மாலை சாப்பிடப் பெரும்பாடு தீரும்.

 

08.    செம்பரத்தம் பூ 500 கிராம் அம்மியில் இட்டு நெகிழ அரைத்து அதில் ஒரு கிலோ சர்க்கரையைப் போதிய நீருடன் சேர்த்து, சிறுதீயில் காய்ச்சி குழம்புப் பதமாக்கி (செம்பரத்தை மணப் பாகு) வைத்துக்கொண்டு 15 மி.லி. வீதம் காலை மாலை சாப்பிட்டு வர, உட்சூடு, நீரெரிச்சல், உள்ளுறுப்புகளில் உள்ள புண், ஈரல் வீக்கம், நீர்க்கட்டு ஆகியவை தீரும்.

 

09.    செம்பருத்தி பூக்கள் மற்றும் இலைகள், தலை முடி வளர்ச்சிக்கும் தலையில் பொடுகு உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் தீர்வாகும்.

 

10.    தேங்காய் எண்ணையில் செம்பருத்தியின்  காய்ந்த மொட்டுக்களை போட்டு ஊற வைத்து தொடர்ந்து தடவி வந்தால் கூந்தலின் கருமை நிறம் பாதுகாக்கப்படும்.

 

11.    உணவில் செம்பருத்தி பூவை சேர்த்துக் கொள்வதால் சோர்வு நீங்கும். இதன் இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து டீயாக அருந்தினால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும். உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.

 

12.    தொடர்ந்து இதை பயன்படுத்தும் போது ரத்தத்தில் உள்ள கொழுப்பு கரையும். அதிகப்படியான கொழுப்பு சேர்வதை தடுக்கும்.

 

13.    உடலுக்கு குளிர்ச்சி அளிக்க வல்லது. சருமத்தை பளபளப்பாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

 

14.    இதனுடைய  பூக்கள் இரண்டு வகையாக இருக்கும். ஒரு வகைப் பூக்கள் அடுக்கு அடுக்காகக் காட்சியளிக்கும். இன்னொரு வகை, தனித்தனியாக அகலமாகக் காட்சி அளிக்கும். இதுதான் மருத்துவ ரீதியில் சிறந்தது.  

 

15.    இத்தாவரத்தில் அமிலங்கள், குளுக்கோசைடுகள், ரிபோபிளேவின், கரோட்டின் என பல வேதிப் பொருட்கள் காணப்படுகின்றன.

 

16.    இலைகள் தசைவலியைப் போக்குவதோடு தசையை மிருதுவாக்கும் தன்மையும் கொண்டவை. இலையின் சாறு தலைவழுக்கை மற்றும் கூந்தலைக் கறுப்பாகவும் உதவுகிறது. மலர்கள் குளிர்ச்சி பொருந்தியவை. சருமத்திற்கு இதமும், சுகமும் அளிப்பவை.

 

17.    மாதவிடாயைத் தூண்டக் கூடியது. இலைகளை அரைத்து  குளிக்கும் பொது ஷாம்பூ மாதிரி உபயோகிக்கலாம் .உடலுக்கு குளிர்ச்சி .முடிக்கு நல்லது

 

18.    .இதழ்களின் வடிசாறு .சிறுநீர்ப் போக்கு வலியை நீக்கும்.  இனப்பெருக்க உறுப்பு நோய்களுக்கும் மருந்தாகிறது.

 

19.    கூந்தல் வளாச்சிக்கான தைல தயாரிப்பில் இலைகளும், பூக்களும் பெரும் பங்கு வகிக்கிறது.

 

20.    காலை எழுந்ததும் 5 முதல் 6 பூக்களின் இதழ்களை மென்று தின்று சிறிது நீர் அருந்தி வர வயிற்றுப்புண் ஆறும். வெள்ளைப் படுதல் நிற்கும். இரத்தம் சுத்தமாகும். இதயம் வலுப்பெறும்.

 

21.    400 மில்லி நல்ல எண்ணெயில் 100 கிராம் செம்பருத்தி இதழ்களைப் போட்டு கலந்து பாத்திரத்தை மெல்லிய துணியால் மூடிக் கட்டி பத்து நாட்கள் வெயிலில் வைத்து காலை - மாலை எண்ணெயை கலக்கிவிட்டு மூடவும். பிறகு எண்ணெயை வடிகட்டி சம அளவு தேங்காய் எண்ணெய் கலந்து பத்திரப்படுத்திக் கொண்டு தைலத்தை தினமும் தலையில் தேய்த்து தலை வாரி வரவும். இது ஒரு சிறந்த கூந்தல் தைலம்

.

22.    செம்பருத்திப் பூக்கள் இதயக் கோளாறையும், கர்ப்பக் கோளாறையும் நீக்க வல்லது. செம்பருத்திச் செடி வீட்டில் மருத்துவர் இருப்பதற்குச் சமம். பெண்கள் வீட்டுக்கு விலக்காகும் காலத்தில் அதிக உதிரப் போக்கு இருந்தால் இரண்டு, மூன்று மலர்களை நெய்யில் வதக்கிக் தின்பது குணப்படுத்தும்

 

23.    .காய்ந்த மலர் இதழ்கள், வெட்டி வேர், துளசி விதைகளை, சுத்தமான தேங்காயெண்ணெயில் ஊறவைத்து தலைக்குத் தேய்த்து வர பேன், பொடுகு அகலும்

 

24.    ஐந்து செம்பருத்திப் பூவைக் கொண்டு வந்து ஒரு லிட்டர் நீர் விட்டுப் பாதியாகச் சுண்டக் காய்ச்சி எடுத்துவைத்துக் கொண்டு குடிநீருக்குப் பதிலாக, இதனைப் பயன்படுத்தலாம். இதனால் உடல் உஷ்ணம் குறையும். சாதாரண காய்ச்சலுக்கும் இந்த நீரைக் குடித்து நிவாரணம் பெறலாம்.

 

25.    பூவினை அதிகாலையில் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவிட்டு ஒரு டம்ளர் பசுவின் பால் சாப்பிட வேண்டும். இதுபோன்று நாற்பது நாட்கள் அதிகாலையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் கடுமையான வெட்டை நோய் இருந்தாலும் குணமாகும்.

 

26.    செம்பருத்திப் பூவை 250 கிராம் கொண்டு வந்து துண்டு துண்டாக நறுக்கி, ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் போட்டு 50 கிராம் எலுமிச்சம் பழத்தின் சாறை அதில் பிழிந்துவிட்டு கலக்கி, காலையில் வெயிலில் வைக்கவும். பின்னர் மாலையில் எடுத்துப் பிசையவும். அப்போது சிவப்பான சாறு வரும். அந்தச் சாறை ஒரு சட்டியில் ஊற்றி சேர்க்க வேண்டிய சர்க்கரையைச் சேர்த்துக் காய்ச்சி சர்பத் (செம்பருத்தி மணப்பாகு) செய்து வடிகட்டி ஒரு பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொள்ளவும். இதிலிருந்து காலை மாலை இரு வேளைகளிலும் ஒரு ஸ்பூன் எடுத்து 2 அவுன்ஸ் நீரில் கலந்து குடிக்கவும். இதுபோன்று தொடர்ந்து குடித்து வந்தால் இரத்தம் சீரான முறையில் பரவும். இருதயமும் பலம் பெறும்.

 

27.    செம்பருத்திப் பூக்களைப் பறித்துத் தலையில் வைத்துக் கட்டிக்கொண்டு இரவு படுத்துக் கொள்ளவும். இதுபோன்று மூன்று_நான்கு தடவைகள் செய்தால் தலையிலுள்ள பேன்கள் ஒழிந்துவிடும்.

 

28.    செம்பருத்திப் பூவை காயவைத்து பொடி செய்து காபி, டீ போல காலை மாலை  அருந்தி வந்தால் இரத்தம் தூய்மையடையும், உடல் பளபளப்பாகும்.

 

29.    நீர் சுருக்கைப் போக்கி சிறுநீரைப் பெருக்கி உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதற்கு செம்பருத்திப் பூவின் கஷாயம் மருந்தாகிறது. தஙகச்சத்து இப்பூவில் இருப்பதால் தாதுவிருத்திக்கு மிகவும் சிறந்ததாகும். தினமும் 10 பூவினை மென்று தின்று பால் அருந்தினால் நாற்பது நாளில் தாது விருத்தி ஏற்படும்

30.    .இப்பூவில் தங்கச்சத்து உள்ளது. . இரத்த சிவப்பணுக்களுக்கு இது பெரும் துணை புரிவதாகும்.

 

31.    இம்மலர் தின்பதற்கு சற்று வழவழப்பாக இருக்கும் தினமும் ஐந்து செம்பருத்திப் பூக்களை 48 நாட்கள் ஓர் ஆண் தின்று வந்தால், இழந்த சக்தியையும் பலத்தையும் பெறுவான்.

 

32.    பெண்கள் இம்மலரை உண்டுவந்தால் வெள்ளை ,வெட்டை ,இரத்தக்குறைவு, பலவீனம் ,மூட்டு வலி ,இடுப்புவலி ,மாதவிடாய் கோளாறுகள்  நீங்குவதுடன் கண்களுக்கு நல்ல ஒளியும் தரும்.

33.    பிள்ளைகள் இம்மலரை உண்டு வந்தால் ஞாபக சக்தி நினைவாற்றல், புத்திக்கூர்மை, மூளை பலம் ஏற்படும். சிறுவர்கள் சாப்பிடும்பொழுது இப்பூவிலுள்ள மகரந்தக்காம்பை நீக்கி விட வேண்டும்

 

34.    செம்பருத்திப் பூவின் இதழ்களை அரைத்து மோரில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் வெகுவிரைவில் கருப்பையில் உள்ள நோய்கள் குணமாகும். பூப்பெய்தாத பெண்களும் பூப்பெய்துவார்கள்.

 

35.    செம்பருத்தியின் இலை, பூ, வெந்தயம், வெட்டிவேர், ஆகியவற்றைத் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்துக் காய்ச்சி, தினமும் தடவிவர  உச்சியில் ஏற்படும் வெப்பம் தணிந்து முடி செழுமையாக வளரும்.(Harish)

 

36.    கூந்தல் கருமையாகவும் பளபளப்புடனும் இருக்க, இதனுடைய பூவின் சாற்றில் ஒரு பங்கும், கறி வேப்பிலைச் சாற்றின் ஒரு பங்கும், இவற்றுக்குச் சமமாகத் தேங்காய் எண்ணெயும் சேர்த்துக் காய்ச்சி வடித்துத் தடவி வர வேண்டும்.(Harish)

 

37.    கைப்பிடி அளவு செம்பருத்தி இலைகளை எடுத்து, பத்து மருதாணி இலையும் தண்ணீரும் சேர்த்து மை போல அரைத்துக் கொள்ளவும். மேலும் இதனுடன் ஒரு தேக்கரண்டி அளவு எலுமிச்சம் பழச் சாற்றைச் சேர்த்து, தலையில் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பிறகு  குளித்து வர, பொடுகுத் தொல்லை நீங்கும். வாரத்திற்கு 2 அல்லது 3 முறை இவ்வாறு செய்க ! (Harish)

 

38.    பத்து அல்லது 15 செம்பருத்தி இலைகளுடன் ஏழெட்டுப் பூக்களையும் சேர்த்து 200 மி.லி தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். அவை ஆறியதும், அந்தக் கலவையில் 2 அல்லது 3 தேக்கரண்டி கடலை மாவினைச் சேர்க்கவும். இதுவே செம்பருத்தி ஷாம்பு. இதைப் பயன்படுத்தி வந்தால் தலைமுடி செழுமையுடன் கருமையாக வளரும்.(Harish)

 

39.    ஐந்து செம்பருத்தி இதழ்களை மட்டும் எடுத்து 200 மி.லி தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டிக் கொள்ளவும். இதனுடன் அரைத் தேக்கரண்டி சீரகப் பொடியும் தேவையான அளவு பனங்கற்கண்டும் சேர்த்துத் தினமும் பருகி வந்தால் இதயத்திற்குப் பலம் உண்டாகும். இரத்தக் கொதிப்பும் குறையும்.(Harish)

 

40.    கோடை காலத்தில் ஏற்படும் சிறு நீர் எரிச்சலைத் தணிக்க, செம்பருத்தி இலை அல்லது மொட்டுகள் ஐந்தினை எடுத்து, கசாயம் செய்து, அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்துப் பருகினால் குணமாகும்.(Harish)

 

41.    ஐந்து செம்பருத்திப் பூக்களை எடுத்து மைய அரைத்து, மோரில் கலக்கி வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மாதவிடாய் பிரச்சினைகள் சரியாகும். மேலும் வயதாகியும் பூப்பெய்தாத பெண்கள் விரைவில் பூப்பு எய்துவார்கள்.(Harish)

 

42.    செம்பருத்திப் பூக்களைப் பொடி செய்து வைத்துக் கொண்டு, மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் தலைவலி, இடுப்பு வலி, மயக்கம், வெள்ளை படுதல் ஆகியவற்றிற்கு ஒரு தேக்கரண்டி அளவு பாலுடன் அருந்த நல்ல பலன் தரும்.(Harish)

 

43.    செம்பருத்திப் பூக்கள் 20 எடுத்து, இதழ்களை மட்டும் அலசி, 500 மி.லி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி, 200 கிராம் சர்க்கரை சேர்த்துக் காய்ச்சி பாகு பதத்தில் இறக்கவும். இதுவே செம்பருத்தி சர்பத். (Harish)

 

44.    ஒரு தம்ளர் தண்ணீருடன் ஒரு தேக்கரண்டி செம்பருத்தி சர்பத்தும், ஒரு எலுமிச்சம் பாழச் சாறும் கலந்து அருந்தினால், உடலுக்குக் குளிர்ச்சியும், புத்துணர்ச்சியும் ஏற்படும்.(Harish)

 

45.    (ஆதாரம்: வேலூர் ஸ்ரீ.சேஷா சாய் ஹெர்பல்ஸ் முதன்மை மருத்துவ அதிகாரி டாக்டர். வெ. ஹரிஷ் அன்புச் செல்வன் M.D.(s) அவர்கள் 25-03-2017 நாளிட்ட தினமலர் நாளிதழின் இணைப்பான பெண்கள் மலரில் எழுதிய கட்டுரை.)

 

46.    செம்பருத்திப் பூவை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இரத்தம் விருத்தி ஆகும்.  (592)

 

47.    செம்பருத்திப் பூக்களை நெய்யில் வதக்கிச் சாப்பிட்டு வந்தால் உதிரப் போக்கு நிற்கும். (600)

 

48.    செம்பருத்திப் பூவை சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி இடித்து தூள் செய்து வைத்துக் கொண்டு இரவில் ஒரு சிட்டிகை தூளை வாயில் போட்டுக் கொண்டு  பசும்பால் பருகி வந்தால் தாம்பத்திய நேரம் நீடிக்கும்.(971)

 

49.    செம்பருத்திப் பூவை எடுத்து சுத்தம் செய்து மைய அரைத்து உருண்டை உருட்டி நிழலில் உலர்த்தி வைத்துக் கொண்டு காலையில் எழுந்ததும் ஒரு உருண்டையை எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் காசநோய் குணமாகும். (1079)

 

50.    செம்பருத்திப் பூ, கருந்துளசி இலை இரண்டும் சேர்ந்த கசாயம் இதயத்தில் ஏற்படும் குத்துவது போன்ற வலியைக் குணப்படுத்தும். (1393)

 

51.    செம்பருத்திப் பூ, மருதம் பட்டை இரண்டும் சேர்ந்த கசாயம் 48 நாள் சாப்பிட்டு வந்தால் இதயநோய் குணமாகும்.(1464)

 

52.    செம்பருத்திப் பூச் சாறு பூசனிக் காய்ச் சாறு இரண்டும் சேர்த்து சாப்பிட்டு வந்தால்  நீர்த்தாரை எரிச்சல், வயிற்றுப் புண், சீதபேதி ஆகியவை தீரும். (1498)

 

53.    செம்பருத்தி இலைகளை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொண்டு தினசரி இரு வேளை வெந்நீரில் சாப்பிட்டு வந்தால் மலச் சிக்கல் அகலும்.(359)

 

54.    செம்பருத்தி இலைகளைத் தலையணை மீது பர்ப்பி, மெல்லிய துணி கொண்டு மூடி, இரவில் அதன்மீது தலைவைத்து உறங்கி வந்தால், பேன்கள் அகலும். (913)

 

55.    செம்பருத்திப் பூ, ஆலமரத்தின் இளம் பிஞ்சு, ஆலங்காய், ஆலமர வேர் ஆகியவற்றை எடுத்து இடித்து தூளாகி, தேங்காய் எண்ணெயில் போட்டு, காய்ச்சி, ஆறவைத்து, தலைக்குத் தேய்த்து வந்தால், முடி கறுப்பாக வளரும். (918)

 

 

56.    கூர் நுனியுடன் ஈட்டி வடிவ இலைகளையும் செந்நிற மலர்களையும் உடைய செடியினம். பல நிறங்களில் பூக்கக் கூடிய செடி வகைகளும் உள்ளன. ஒற்றை அடுக்கில் செந்நிறப் பூக்களைக் கொண்டதே மருத்துவத்திற்குப் பயன்படுகிறது.

 

57.    செம்பருத்தி இலை, பூ, வேர் ஆகியவை மருத்துவப் பயன் உடையவை. வெப்பு அகற்றி, சிறுநீர் பெருக்கி, காமம் பெருக்கும் செய்கையுடையது.

 

58.    இலையை நீரிலிட்டுக் காய்ச்சி, வடிகட்டி, கற்கண்டு சேர்த்துப் பருகினால் நீர் எரிச்சல் தீரும்

 

59.    பூவை நீரிலிட்டுக் காய்ச்சி வடிகட்டி, பாலும் சர்க்கரையும் சேர்த்து, காலை, மாலை பருக மார்பு வலி, இதய பலவீனம் தீரும். காபி, தேநீர், புகையிலை நீக்க வேண்டும்.

 

60.    செம்பருத்திப் பூவை நல்லெண்ணையில் இட்டுக் காய்ச்சி தலைக்குத் தடவி வந்தால், முடி கறுத்து  அடர்ந்து வளரும்.

 

61.    செம்பருத்திச் செடியின் வேரைக் குடிநீர் செய்து நாட்பட்ட சுரங்களுக்குக் கொடுத்துவர குணமாகும்.

 

62.    செம்பரத்தை வேர்ப் பட்டை, இலந்தை மரப் பட்டை, மாதுளம் பட்டை சமனளவு சூரணம் செய்து 4 சிட்டிகை காலை,மாலை சாப்பிடப் பெரும்பாடு தீரும்.

 

63.    செம்பரத்தம் பூ 500 கிராம் அம்மியில் இட்டு நெகிழ அரைத்து அதில் ஒரு கிலோ சர்க்கரையைப் போதிய நீருடன் சேர்த்து, சிறுதீயில் காய்ச்சி குழம்புப் பதமாக்கி (செம்பரத்தை மணப் பாகு) வைத்துக்கொண்டு 15 மி.லி. வீதம் காலை மாலை சாப்பிட்டு வர, உட்சூடு, நீரெரிச்சல், உள்ளுறுப்புகளில் உள்ள புண், ஈரல் வீக்கம், நீர்க்கட்டு ஆகியவை தீரும்.

 

64.    செம்பருத்தி பூக்கள் மற்றும் இலைகள், தலை முடி வளர்ச்சிக்கும் தலையில் பொடுகு உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் தீர்வாகும்.

 

65.    தேங்காய் எண்ணையில் செம்பருத்தியின்  காய்ந்த மொட்டுக்களை போட்டு ஊற வைத்து தொடர்ந்து தடவி வந்தால் கூந்தலின் கருமை நிறம் பாதுகாக்கப்படும்.

 

66.    உணவில் செம்பருத்தி பூவை சேர்த்துக் கொள்வதால் சோர்வு நீங்கும். இதன் இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து டீயாக அருந்தினால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும். உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.

 

67.    தொடர்ந்து இதை பயன்படுத்தும் போது ரத்தத்தில் உள்ள கொழுப்பு கரையும். அதிகப்படியான கொழுப்பு சேர்வதை தடுக்கும்.

 

68.    உடலுக்கு குளிர்ச்சி அளிக்க வல்லது. சருமத்தை பளபளப்பாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

 

69.    இதனுடைய  பூக்கள் இரண்டு வகையாக இருக்கும். ஒரு வகைப் பூக்கள் அடுக்கு அடுக்காகக் காட்சியளிக்கும். இன்னொரு வகை, தனித்தனியாக அகலமாகக் காட்சி அளிக்கும். இதுதான் மருத்துவ ரீதியில் சிறந்தது.  

 

70.    இத்தாவரத்தில் அமிலங்கள், குளுக்கோசைடுகள், ரிபோபிளேவின், கரோட்டின் என பல வேதிப் பொருட்கள் காணப்படுகின்றன.

 

71.    இலைகள் தசைவலியைப் போக்குவதோடு தசையை மிருதுவாக்கும் தன்மையும் கொண்டவை. இலையின் சாறு தலைவழுக்கை மற்றும் கூந்தலைக் கறுப்பாகவும் உதவுகிறது. மலர்கள் குளிர்ச்சி பொருந்தியவை. சருமத்திற்கு இதமும், சுகமும் அளிப்பவை.

 

72.    மாதவிடாயைத் தூண்டக் கூடியது. இலைகளை அரைத்து  குளிக்கும் பொது ஷாம்பூ மாதிரி உபயோகிக்கலாம் .உடலுக்கு குளிர்ச்சி .முடிக்கு நல்லது

 

73.    .இதழ்களின் வடிசாறு .சிறுநீர்ப் போக்கு வலியை நீக்கும்.  இனப்பெருக்க உறுப்பு நோய்களுக்கும் மருந்தாகிறது.

 

74.    கூந்தல் வளாச்சிக்கான தைல தயாரிப்பில் இலைகளும், பூக்களும் பெரும் பங்கு வகிக்கிறது.

 

75.    காலை எழுந்ததும் 5 முதல் 6 பூக்களின் இதழ்களை மென்று தின்று சிறிது நீர் அருந்தி வர வயிற்றுப்புண் ஆறும். வெள்ளைப் படுதல் நிற்கும். இரத்தம் சுத்தமாகும். இதயம் வலுப்பெறும்.

 

76.    400 மில்லி நல்ல எண்ணெயில் 100 கிராம் செம்பருத்தி இதழ்களைப் போட்டு கலந்து பாத்திரத்தை மெல்லிய துணியால் மூடிக் கட்டி பத்து நாட்கள் வெயிலில் வைத்து காலை - மாலை எண்ணெயை கலக்கிவிட்டு மூடவும். பிறகு எண்ணெயை வடிகட்டி சம அளவு தேங்காய் எண்ணெய் கலந்து பத்திரப்படுத்திக் கொண்டு தைலத்தை தினமும் தலையில் தேய்த்து தலை வாரி வரவும். இது ஒரு சிறந்த கூந்தல் தைலம்

.

77.    செம்பருத்திப் பூக்கள் இதயக் கோளாறையும், கர்ப்பக் கோளாறையும் நீக்க வல்லது. செம்பருத்திச் செடி வீட்டில் மருத்துவர் இருப்பதற்குச் சமம். பெண்கள் வீட்டுக்கு விலக்காகும் காலத்தில் அதிக உதிரப் போக்கு இருந்தால் இரண்டு, மூன்று மலர்களை நெய்யில் வதக்கிக் தின்பது குணப்படுத்தும்

 

78.    .காய்ந்த மலர் இதழ்கள், வெட்டி வேர், துளசி விதைகளை, சுத்தமான தேங்காயெண்ணெயில் ஊறவைத்து தலைக்குத் தேய்த்து வர பேன், பொடுகு அகலும்

 

79.    ஐந்து செம்பருத்திப் பூவைக் கொண்டு வந்து ஒரு லிட்டர் நீர் விட்டுப் பாதியாகச் சுண்டக் காய்ச்சி எடுத்துவைத்துக் கொண்டு குடிநீருக்குப் பதிலாக, இதனைப் பயன்படுத்தலாம். இதனால் உடல் உஷ்ணம் குறையும். சாதாரண காய்ச்சலுக்கும் இந்த நீரைக் குடித்து நிவாரணம் பெறலாம்.

 

80.    பூவினை அதிகாலையில் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவிட்டு ஒரு டம்ளர் பசுவின் பால் சாப்பிட வேண்டும். இதுபோன்று நாற்பது நாட்கள் அதிகாலையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் கடுமையான வெட்டை நோய் இருந்தாலும் குணமாகும்.

 

81.    செம்பருத்திப் பூவை 250 கிராம் கொண்டு வந்து துண்டு துண்டாக நறுக்கி, ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் போட்டு 50 கிராம் எலுமிச்சம் பழத்தின் சாறை அதில் பிழிந்துவிட்டு கலக்கி, காலையில் வெயிலில் வைக்கவும். பின்னர் மாலையில் எடுத்துப் பிசையவும். அப்போது சிவப்பான சாறு வரும். அந்தச் சாறை ஒரு சட்டியில் ஊற்றி சேர்க்க வேண்டிய சர்க்கரையைச் சேர்த்துக் காய்ச்சி சர்பத் (செம்பருத்தி மணப்பாகு) செய்து வடிகட்டி ஒரு பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொள்ளவும். இதிலிருந்து காலை மாலை இரு வேளைகளிலும் ஒரு ஸ்பூன் எடுத்து 2 அவுன்ஸ் நீரில் கலந்து குடிக்கவும். இதுபோன்று தொடர்ந்து குடித்து வந்தால் இரத்தம் சீரான முறையில் பரவும். இருதயமும் பலம் பெறும்.

 

82.    செம்பருத்திப் பூக்களைப் பறித்துத் தலையில் வைத்துக் கட்டிக்கொண்டு இரவு படுத்துக் கொள்ளவும். இதுபோன்று மூன்று_நான்கு தடவைகள் செய்தால் தலையிலுள்ள பேன்கள் ஒழிந்துவிடும்.

 

83.    செம்பருத்திப் பூவை காயவைத்து பொடி செய்து காபி, டீ போல காலை மாலை  அருந்தி வந்தால் இரத்தம் தூய்மையடையும், உடல் பளபளப்பாகும்.

 

84.    நீர் சுருக்கைப் போக்கி சிறுநீரைப் பெருக்கி உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதற்கு செம்பருத்திப் பூவின் கஷாயம் மருந்தாகிறது. தஙகச்சத்து இப்பூவில் இருப்பதால் தாதுவிருத்திக்கு மிகவும் சிறந்ததாகும். தினமும் 10 பூவினை மென்று தின்று பால் அருந்தினால் நாற்பது நாளில் தாது விருத்தி ஏற்படும்

85.    .இப்பூவில் தங்கச்சத்து உள்ளது. . இரத்த சிவப்பணுக்களுக்கு இது பெரும் துணை புரிவதாகும்.

 

86.    இம்மலர் தின்பதற்கு சற்று வழவழப்பாக இருக்கும் தினமும் ஐந்து செம்பருத்திப் பூக்களை 48 நாட்கள் ஓர் ஆண் தின்று வந்தால், இழந்த சக்தியையும் பலத்தையும் பெறுவான்.

 

87.    பெண்கள் இம்மலரை உண்டுவந்தால் வெள்ளை ,வெட்டை ,இரத்தக்குறைவு, பலவீனம் ,மூட்டு வலி ,இடுப்புவலி ,மாதவிடாய் கோளாறுகள்  நீங்குவதுடன் கண்களுக்கு நல்ல ஒளியும் தரும்.

88.    பிள்ளைகள் இம்மலரை உண்டு வந்தால் ஞாபக சக்தி நினைவாற்றல், புத்திக்கூர்மை, மூளை பலம் ஏற்படும். சிறுவர்கள் சாப்பிடும்பொழுது இப்பூவிலுள்ள மகரந்தக்காம்பை நீக்கி விட வேண்டும்

 

89.    செம்பருத்திப் பூவின் இதழ்களை அரைத்து மோரில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் வெகுவிரைவில் கருப்பையில் உள்ள நோய்கள் குணமாகும். பூப்பெய்தாத பெண்களும் பூப்பெய்துவார்கள்.

 

90.    செம்பருத்தியின் இலை, பூ, வெந்தயம், வெட்டிவேர், ஆகியவற்றைத் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்துக் காய்ச்சி, தினமும் தடவிவர  உச்சியில் ஏற்படும் வெப்பம் தணிந்து முடி செழுமையாக வளரும்.(Harish)

 

91.    கூந்தல் கருமையாகவும் பளபளப்புடனும் இருக்க, இதனுடைய பூவின் சாற்றில் ஒரு பங்கும், கறி வேப்பிலைச் சாற்றின் ஒரு பங்கும், இவற்றுக்குச் சமமாகத் தேங்காய் எண்ணெயும் சேர்த்துக் காய்ச்சி வடித்துத் தடவி வர வேண்டும்.(Harish)

 

92.    கைப்பிடி அளவு செம்பருத்தி இலைகளை எடுத்து, பத்து மருதாணி இலையும் தண்ணீரும் சேர்த்து மை போல அரைத்துக் கொள்ளவும். மேலும் இதனுடன் ஒரு தேக்கரண்டி அளவு எலுமிச்சம் பழச் சாற்றைச் சேர்த்து, தலையில் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பிறகு  குளித்து வர, பொடுகுத் தொல்லை நீங்கும். வாரத்திற்கு 2 அல்லது 3 முறை இவ்வாறு செய்க ! (Harish)

 

93.    பத்து அல்லது 15 செம்பருத்தி இலைகளுடன் ஏழெட்டுப் பூக்களையும் சேர்த்து 200 மி.லி தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். அவை ஆறியதும், அந்தக் கலவையில் 2 அல்லது 3 தேக்கரண்டி கடலை மாவினைச் சேர்க்கவும். இதுவே செம்பருத்தி ஷாம்பு. இதைப் பயன்படுத்தி வந்தால் தலைமுடி செழுமையுடன் கருமையாக வளரும்.(Harish)

 

94.    ஐந்து செம்பருத்தி இதழ்களை மட்டும் எடுத்து 200 மி.லி தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டிக் கொள்ளவும். இதனுடன் அரைத் தேக்கரண்டி சீரகப் பொடியும் தேவையான அளவு பனங்கற்கண்டும் சேர்த்துத் தினமும் பருகி வந்தால் இதயத்திற்குப் பலம் உண்டாகும். இரத்தக் கொதிப்பும் குறையும்.(Harish)

 

95.    கோடை காலத்தில் ஏற்படும் சிறு நீர் எரிச்சலைத் தணிக்க, செம்பருத்தி இலை அல்லது மொட்டுகள் ஐந்தினை எடுத்து, கசாயம் செய்து, அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்துப் பருகினால் குணமாகும்.(Harish)

 

96.    ஐந்து செம்பருத்திப் பூக்களை எடுத்து மைய அரைத்து, மோரில் கலக்கி வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மாதவிடாய் பிரச்சினைகள் சரியாகும். மேலும் வயதாகியும் பூப்பெய்தாத பெண்கள் விரைவில் பூப்பு எய்துவார்கள்.(Harish)

 

97.    செம்பருத்திப் பூக்களைப் பொடி செய்து வைத்துக் கொண்டு, மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் தலைவலி, இடுப்பு வலி, மயக்கம், வெள்ளை படுதல் ஆகியவற்றிற்கு ஒரு தேக்கரண்டி அளவு பாலுடன் அருந்த நல்ல பலன் தரும்.(Harish)

 

98.    செம்பருத்திப் பூக்கள் 20 எடுத்து, இதழ்களை மட்டும் அலசி, 500 மி.லி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி, 200 கிராம் சர்க்கரை சேர்த்துக் காய்ச்சி பாகு பதத்தில் இறக்கவும். இதுவே செம்பருத்தி சர்பத். (Harish)

 

99.    ஒரு தம்ளர் தண்ணீருடன் ஒரு தேக்கரண்டி செம்பருத்தி சர்பத்தும், ஒரு எலுமிச்சம் பாழச் சாறும் கலந்து அருந்தினால், உடலுக்குக் குளிர்ச்சியும், புத்துணர்ச்சியும் ஏற்படும்.(Harish)

 

100.  (ஆதாரம்: வேலூர் ஸ்ரீ.சேஷா சாய் ஹெர்பல்ஸ் முதன்மை மருத்துவ அதிகாரி டாக்டர். வெ. ஹரிஷ் அன்புச் செல்வன் M.D.(s) அவர்கள் 25-03-2017 நாளிட்ட தினமலர் நாளிதழின் இணைப்பான பெண்கள் மலரில் எழுதிய கட்டுரை.)

 

101.  செம்பருத்திப் பூவை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இரத்தம் விருத்தி ஆகும்.  (592)

 

102.  செம்பருத்திப் பூக்களை நெய்யில் வதக்கிச் சாப்பிட்டு வந்தால் உதிரப் போக்கு நிற்கும். (600)

 

103.  செம்பருத்திப் பூவை சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி இடித்து தூள் செய்து வைத்துக் கொண்டு இரவில் ஒரு சிட்டிகை தூளை வாயில் போட்டுக் கொண்டு  பசும்பால் பருகி வந்தால் தாம்பத்திய நேரம் நீடிக்கும்.(971)

 

104.  செம்பருத்திப் பூவை எடுத்து சுத்தம் செய்து மைய அரைத்து உருண்டை உருட்டி நிழலில் உலர்த்தி வைத்துக் கொண்டு காலையில் எழுந்ததும் ஒரு உருண்டையை எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் காசநோய் குணமாகும். (1079)

 

105.  செம்பருத்திப் பூ, கருந்துளசி இலை இரண்டும் சேர்ந்த கசாயம் இதயத்தில் ஏற்படும் குத்துவது போன்ற வலியைக் குணப்படுத்தும். (1393)

 

106.  செம்பருத்திப் பூ, மருதம் பட்டை இரண்டும் சேர்ந்த கசாயம் 48 நாள் சாப்பிட்டு வந்தால் இதயநோய் குணமாகும்.(1464)

 

107.  செம்பருத்திப் பூச் சாறு பூசனிக் காய்ச் சாறு இரண்டும் சேர்த்து சாப்பிட்டு வந்தால்  நீர்த்தாரை எரிச்சல், வயிற்றுப் புண், சீதபேதி ஆகியவை தீரும். (1498)

 

108.  செம்பருத்தி இலைகளை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொண்டு தினசரி இரு வேளை வெந்நீரில் சாப்பிட்டு வந்தால் மலச் சிக்கல் அகலும்.(359)

 

109.  செம்பருத்தி இலைகளைத் தலையணை மீது பர்ப்பி, மெல்லிய துணி கொண்டு மூடி, இரவில் அதன்மீது தலைவைத்து உறங்கி வந்தால், பேன்கள் அகலும். (913)

 

110.  செம்பருத்திப் பூ, ஆலமரத்தின் இளம் பிஞ்சு, ஆலங்காய், ஆலமர வேர் ஆகியவற்றை எடுத்து இடித்து தூளாகி, தேங்காய் எண்ணெயில் போட்டு, காய்ச்சி, ஆறவைத்து, தலைக்குத் தேய்த்து வந்தால், முடி கறுப்பாக வளரும். (918)


=======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

 

===================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,விடை(வைகாசி )07]

{21-05-2021}

===================================================


செம்பருத்தி

செம்பருத்தி

செம்பருத்தி

செம்பருத்தி

செம்பருத்தி