மூலிகையின் பெயர் .................... அந்தரத்தாமரை
தாவரவியல் பெயர் ............. -..: PISTIA STRATEUTES
தாவரக்குடும்பம்.........................................-: ARACEAE
ஆங்கிலப்பெயர்...............................WATER CABBAGE
பயன் தரும் பாகங்கள் ............:.. இலைகள் மட்டும்
====================================================
01. அந்தரத்தாரமரை
நீரில் மிதக்கக் கூடிய கூட்டம் கூட்டமாக வளரும் சிறு செடிகள். சுத்தமான
தண்ணீரில் வளரக்கூடியது.
02. இலைகள்
நீளம் சுமார் 13 செ.மீ. இருக்கும். இலைகள்
எதிர் அடுக்கில் ஜோடியாக இருக்கும். இதற்கு
காம்புகள் )ஸ்டெம்( கிடையாது. கூடை
வடிவ இலை இளம்பச்சை
நிறமாக இருக்கும். அதில்
மொசு மொசுப்பான முடிகள் இருக்கும்.
03. இதை
ஆங்கிலத்தில் ‘Water Cabbage’ மற்றும் ‘Water Lettuce’ என்றும்
கூறுவார்கள். இதன்
வேர்கள் குஞ்சம் போல் இருக்கும். தமிழகமெங்கும்
குளம் குட்டைகளில் வளர்வது. பூக்கள்
செடி நடுவில் மிகச் சிறிதாகத் தென்படும். இது
இன விருத்திக்கு தாய் செடியுடன் சிறு குட்டிச் செடிகள் நூல் இழை போன்று தொடர்ந்து
பெருகிக் கொண்டே போகும்.
04. இது
வெப்பு தணித்து தாகங் குறைக்கும் மருந்தாகவும் தாதுக்களின் எரிச்சலைத் தணித்து அவற்றை துவளச்
செய்யும் மருந்தாகவும் பயன் படுத்தலாம்.
05. அந்தரத் தாமரை இலையை அரைத்துக் கரப்பான், தொழு நோய்ப்புண் ஆகியவற்றின் மீது வைத்துக்
கட்டி வர விரைவில் ஆறும். ஆசனவாயில்
வைத்துக் கட்டி வர வெளி மூலம், ஆசனக் குத்தல் ஆகியவை தீரும்.
06. அந்தரத் தாமரை இலைச்சாற்றை 25 மி.லி எடுத்து தேனுடன் கலந்து காலை, மாலை
5 நாட்கள்
கொடுத்து வந்தால் நீர்சுருக்கு, மூலம், சீதபேதி, இருமல் ஆகியவை தீரும்.
07. அந்தரத்தாமரை
இலையை நீரிலிட்டுக் கொதிக்க
வைத்து அந்த ஆவியை 10 நிமிடம் ஆசன வாயில் பிடித்து, வெந்த இலைகளை ஆசனவாயிலும் கட்டி வந்தால் மூல
மூளை அகலும் (350) (1808)
08. அந்தரத் தாமரை இலைச்சாறு அரை லிட்டர், நல்லெண்ணைய் 1 லிட்டர் ஆகியவற்றைக் கலந்து சிறு தீயில் காய்ச்சி வண்டல் மெழுகுப் பதமான நிலையில் கிச்சிலிக் கிழங்கு, சந்தனத்தூள், வெட்டி வேர், கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி வகைக்கு 10 கிராம் பொடித்துப் போட்டு இறக்கி வடித்து )ஆகாயத்தாமரைத் தைலம்( வாரம் ஒரு முறை தலைக்கிட்டுக் குளித்து வர உட்சூடு, கண்ணெரிச்சல், மூல நோய் ஆகியவை தீரும்.
===========================================================
மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்” என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ் அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள் மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
=================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam77@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்மூலிகை வலைப்பூ,
[தி.பி:2052,மேழம்(சித்திரை)17]
{30-04-2021}
=================================================
![]() |
அந்தரத்தாமரை |
![]() |
அந்தரத்தாமரை |