இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

நீர்பிரம்மி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நீர்பிரம்மி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 24 மே, 2021

நீர்பிரம்மி

 

            மூலிகைப் பெயர்..........................................நீர் பிரம்மி

            மாற்றுப் பெயர்கள்.........................பிரமிய வழுக்கை,

            ..................................சாம்பிராணிப் பூண்டு, சப்தலை,

            .............................................. வாடிகம்,, சருமம், விவிதம்

            தாவரவியல் பெயர்........................BACOPA  MONNIERI

            ஆங்கிலப் பெயர்..................................WATER HYSSOP

 

 

==================================================

 

 

01.   பிரமிய வழுக்கை, சதைப்பற்றான இலைகளுடன் பல கிளைகளாக அடர்த்தியாக வளர்ந்து இருக்கும். இலைகள் நீண்டு உருண்டவை. செடியில் வெள்ளை நிற மலர்கள் காணப்படும். மலர்கள் விரைவாக வாடிவிடும் தன்மை கொண்டவை.

 

02.   நீர்நிலையை ஒட்டியுள்ள பகுதிகள், வயல்கள், தாழ்வான சதுப்பு நிலங்கள், கடற்கரை ஓரங்களில், பிரமிய வழுக்கை வளர்ந்து இருக்கும்.

 

03.   சாம்பிராணிப் பூண்டு, பிரமிய வழுக்கை, சப்தலை, வாடிகம், சருமம், விவிதம் ஆகிய மாற்றுப் பெயர்களில் இது அழைக்கப்படுகிறது.

 

04.   நீர் பிரம்மி முழு தாவரமும் மருத்துவப் பயன் கொண்டவை. இனிப்பு மற்றும் துவர்ப்புச் சுவை கொண்டவை. குளிர்ச்சித் தன்மை உடையது.

 

05.   நீர் பிரம்மி முழுத் தாவரத்தையும் ஆமணக்கு எண்ணெயில் வதக்கி வீக்கம், கட்டிகள் உள்ள இட்த்தில் ஒற்றடம் இட்டு பொறுக்கும் சூட்டில் வைத்துக் கட்டினால் வீக்கம், கட்டிகள் கரைந்து போகும்.

 

06.   பிரமிய வழுக்கை முழுத் தாவரத்தையும் சுத்தம் செய்து அரைத்து சாறு பிழிந்து நான்கு தேக்கரண்டி அளவுக்குக் குடித்தால் தொண்டை கரகரப்பு சரியாகும்.


07.   ஒரு பிடி பிரமிய வழுக்கை தாவரத்தை வெண்ணெயில் பொரித்து தினசரி ஒரு வேளை வீதம் ஐந்து நாட்கள் சாப்பிட்டாலும் தொண்டை கரகரப்பு சரியாகும்.

 

08.   பிரமிய வழுக்கை முழு தாவரத்தையும் அரைத்து பசையாக்கி நெஞ்சுப்பகுதியில் பூசினால் கோழைக்கட்டு குணமாகும்

 

09.   பிரமிச் சாற்றை ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி உள்ளுக்குக் கொடுத்தால் மலக் கட்டு நீங்கும். (Harish)

 

10.   பிரமிச் சாற்றுடன் தேங்காயெண்ணெய் சேர்த்துக் காய்ச்சி தலையில் தடவி வந்தால் முடி உதிர்தல் நீங்கும். (Harish)

 

11.   பிரமிப் பூண்டை விழுதாக அரைத்து 50 முதல் 100 கிராம் எடுத்து 100 மி.லி. தேங்காய் எண்ணெயுடன் சேர்த்துக் கொதிக்க வைத்து, மூட்டில் தடவி வந்தால் மூட்டு வலி குறையும். (Harish)

 

12.   பிரமிப் பூண்டினை விழுதாக அரைத்து மூட்டின் மீது பற்றுப் போட்டு வந்தால் மூட்டு வீக்கம் குறையும். (Harish)

 

13.   பிரமிப் பூண்டு பிடுங்கி வந்து சுத்தம் செய்து,   சாறு எடுத்து  30 மி.லி அளவுக்குக் குடித்தால் சிறுநீர் எரிச்சல் நீங்கும். (Harish)

 

14.   பிரமிப் பூண்டுச் சாற்றை நெய்யுடன் சேர்த்துக் காய்ச்சி, ஒரு தேக்கரண்டி எடுத்து வெந்நீருடன் சாப்பிட்டு வந்தால் மூளை பலம் பெறும். (Harish)

 

15.   பிரமிப் பூண்டு இலைப் பொடியை தினம் 2 வேளை தண்ணீருடன் கலந்து அருந்தி வந்தால் இரத்த அழுத்தம் சீர்பெறும். (Harish)

 

16.   பிரமிப் பூண்டு இலைச் சாறு ஒரு தேக்கரண்டி எடுத்து தேன் சேர்த்து அருந்தி வந்தால் இருமல் தணியும். (Harish)

 

17.   பிரமிப் பூண்டு இலைப் பொடியை ஒன்று முதல் இரண்டு கிராம் அளவு தேனுடன் இரண்டு  வேளை சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும். (Harish)

 

18.   (ஆதாரம்:தொ.எண்; 9 – 17 வரை, வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்  மருத்துவ மனை, முதன்மை மருத்துவ அதிகாரி டாக்டர். வெ. அன்புச் செல்வன் M.D (s),அவர்கள் 06-01-2018 நாளிட்ட தினமலர் நாளிதழின் இணைப்பான பெண்கள் மலரில் எழுதிய கட்டுரை.)

 =======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,விடை(வைகாசி )10]

{24-05-2021}

==================================================


நீர்பிரம்மி

நீர்பிரம்மி