மூலிகைப்பெயர்....................................................விழுதி
மாற்றுப் பெயர்.................................வைட்டமின் கீரை
தாவரவியல் பெயர்...........................................................
ஆங்கிலப் பெயர்..................................................LYCHEE
====================================================
01.
விழுதி
என்பது குத்துச் செடி வகையைச் சேர்ந்தது.
ஐந்தடி
உயரம் வரை வளரக் கூடியது.
02.
விழுதிக்
கீரையை சமைத்து உணவாக உட்கொள்ளலாம்.
03.
விழுதிக்
கீரையை அரைத்துப் பற்றுப் போட்டு வந்தால் மூட்டுவலி கட்டுப்படும்.
04.
விழுதி
இலை, மிளகு, சீரகம், பூண்டு, ஆகியவற்றை சிறிது விளக்கெண்ணெய் விட்டுத் தாளித்து இரசம் வைத்துச் சாப்பிட்டால் மலத்தில் உள்ள புழுக்கள் நீங்கும். (1586)
வாதநீர்
வெளியேறி குத்தல்
வலி போகும். (1643)
05.
விழுதி
இலைச் சாறினை நல்லெண்ணெயில் கலந்து காய்ச்சி இரண்டு துளி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வெண்மேகம் தீரும். (1597)
06.
விழுதி
இலைச் சாறுடன் நல்லெண்ணெய் கலந்து 25 மி.லி உள்ளுக்குச் சாப்பிட்டால் பேதி ஆகும். குடல்
சுத்தமாகும். (1600) மூன்று நாள்
சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி குணமாகும். (1617)
07.
விழுதி
இலைச் சாறுடன் நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி தலை முழுகி வந்தால் சகல பிணி ரோகமும் தீரும். (1644)
=======================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
===================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam77@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்
மூலிகை,
[தி.பி:2052,விடை(வைகாசி )19]
{02-06-2021}
===================================================
விழுதி |
விழுதி |
விழுதி |
விழுதி |
விழுதி |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக