மூலிகைப் பெயர்...................................................விளா
மாற்றுப் பெயர்கள்.....................கடிபகை, கபித்தம்
...............................................பித்தம், விளவு, தந்தசடம்
..................................................... , கவித்தம் , வெள்ளில்
தாவரவியல் பெயர்..............FERONIA
ELEPHANTUM
ஆங்கிலப் பெயர்......................................WOOD
APPLE
01. விளா மரம் எங்கும் வளரும். காடுகளில் அதிகம் காணப்படும். 30 அடி உயரம் வரை வளரக்கூடிய இம்மரத்தின் இலைகள் கூட்டிலைகளாக இருக்கும். நல்ல மணத்தைக் கொண்டது.
02. விளா மரம் முட்கள் உள்ள உறுதியான பெரிய மரம். இதை எந்தப் பூச்சியும் தாக்காது.
03. விளாங் காய்கள் பார்ப்பதற்கு விலவக் காய் போன்று இருக்கும். உருண்டை வடிவிலானது. காயின் குறுக்களவு 5 முதல் 9 செ,மீ வரை இருக்கும்.
04. விளாம் பழத்தின் ஓடு அதிகக் கெட்டியாகவும், உள் சதை (சோறு) மர நிறத்திலும், விதைகள் வெள்ளையாகவும் இருக்கும். (Asan)
05. விளாங் காய்கள் காயாக இருக்கும் போது அதன் சதை துவர்க்கும். பழுத்த பின் துவர்ப்பும் புளிப்பும் கலந்த கலவைச் சுவையாக இருக்கும். (Asan)
06. விளா மரத்தின் கொழுந்து, இலை, காய், பட்டை, பழத்தின் ஓடு, பழத்தின் சோறு, பிசின் ஆகியவை பயன் தரும் பாகங்களாகும். (Asan)
07. விளாம் பழத்தில் வைட்டமின் “பி-2”, “ஏ”, சுண்ணாம்புச் சத்து (கால்சியம்) ஆகியவை அதிகமாக இருப்பதால் பல், எலும்பு ஆகியவற்றை வலு அடையச் செய்கிறது. (Asan)
08. விளா மரத்தின் பிசினைத் தொட்ர்ந்து சாப்பிட்டு வந்தால், பெண்களுக்கு ஏற்படும் அதிக இரத்தப் போக்கு, வெள்ளை படுதல், ஆகியவை குணமாகும். (Asan)
09. விளாங் காயைத் தயிருடன் சேர்த்து பச்சடி செய்து சாப்பிட்டால், வாய்ப் புண், குடற் புண் (அல்சர்) ஆகியவை குணமாகும். (Asan)
10. விளாம் பழத்தின் சதையை வெல்லத்துடன் பிசறிச் சாப்பிட்டு வந்தால், நரம்புத் தளர்ச்சி விரைவில் குணமாகும். (Asan)
11. விளாம் பழத்துடன் பனங்கற் கண்டைச் சேர்த்து சாப்பிட்டு வந்தால், பித்தக் கோளாறுகளால் ஏற்படும் வாந்தி, தலை சுற்றல் ஆகியவை நிற்கும். (Asan)
12. விளாம் பழத்தினை குழந்தைகள் தினமும் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். (asan)
13. விளாமர இலைகளைத் தண்ணீரில் போட்டு, கொதிக்க வைத்துக் குடித்து வந்தால், வாயுத் தொல்லை நீங்கும். (Asan)
14. விளாங் காயை அரைத்து மோரில் கலக்கிக் குடித்து வந்தால், நாள்பட்ட பேதி சரியாகும். (Asan)
15. விளாமர விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் சிறந்த மலமிளக்கியாகச் செயல்படுகிறது. (Asan)
16. விளாமரப் பட்டையை இடித்து, தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைக்கவும். இந்தக் கசாயத்தை வடிகட்டிக் குடித்து வந்தால் வறட்டு இருமல், மூச்சு இழுப்பு, வாய்க் கசப்பு போன்றவை மாறும். பிரசவித்த பெண்களின் வயிற்று உள்ளுறுப்புகளுக்கு அதிக சக்தி கிடைக்கும். (Asan)
17. விளாம் பழத்தைப் சர்க்கரையுடன் சேர்த்துப் பிசைந்து, “ஜாம்” போல் சாப்பிட்டு வந்தால் செரிமான ஆற்றல் அதிகரிக்கும். நன்கு பசிக்கும். ஒவ்வாமை நோய், இரத்தப் போக்கு ஆகியவை கட்டுப்படும். (Asan)
18. விளாம் பழம் பெண்களுக்கு மார்பகம், கருப்பை ஆகியவற்றில் புற்று நோய் வராமல் தடுக்கும். விளாம் பழம் நல்ல வலி நிவாரணியாகச் செயல்படுகிறது. பித்த நோய்களைக் கட்டுப்படுத்துகிறது. (Asan)
19. விளாம் பழத்தை வெல்லத்துடன் கலந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால், பித்த சம்பந்தமான அனைத்துக் கோளாறுகளும் குணமாகும். பித்தத்தால் ஏற்படும் தலைவலி, கண் பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா நேரமும் வாயில் கசப்பு, பித்தக் கிறுகிறுப்பு, கை-கால்களில் அதிக வியர்வை, பித்தம் காரணமாக ஏற்படும் இளநரை, நாவில் ருசியின்மை, போன்றவற்றை விளாம் பழம் போக்குகிறது. (Asan)
20. விளாந்தளிர், நாரத்தைத் தளிர், கறிவேப்பிலை, எலுமிச்சை இலை ஆகியவற்றைச் சம அளவு எடுத்து, நிழலில் உலர்த்தி, பொடி செய்து கொள்ளவும். கடலைப் பருப்பை வறுத்து அதையும் பொடி செய்து கொள்ளவும். கடலைப் பருப்புப் பொடி 100 கிராம், உப்பு 20 கிராம், மிளகுப் பொடி, வெந்தயப் பொடி தலா 10 கிராம், எல்லவற்றையும் இலைப்பொடிகளுடன் கலந்து, உணவில் சேர்த்து உட்கொண்டு வந்தால், பித்தம் குணமாகும். நல்ல பசி எடுக்கும். வாந்தி குணமாகும். உடலுக்கு ஊட்டமும் கிடைக்கும். (Asan)
21. விளாம் பிசினை உலர்த்தி, தூள் செய்து, காலை மாலை தலா ஒரு சிட்டிகை வெண்ணெயுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் போக்கு, மங்கையருக்கு வெள்ளைப் படுதல், நீர் எரிச்சல், மேக நோய், உள்ளுறுப்பு இரணம், மாதவிடாய் இம்சை ஆகியவை தீரும். உப்பு இல்லாப் பத்தியம் தேவை. (Asan)
22. விளாம் பழத்தின் ஓட்டை அம்மியில் வைத்து நசுக்கி, சிறிது நீர் விட்டு விழுதாக அரைத்து, ஒரு எலுமிச்சம் பழமளவு எடுத்து காலையில் வாயில் போட்டு விழுங்கி வெந்நீர் குடிக்கவும். தொடர்ந்து 21 நாட்கள் இப்படிச் செய்தால், பெண் ஆசையே போய்விடும். (Asan)
23. விளாமர வேர், ஆவாரை வேர், பூலா வேர், காட்டு மல்லி வேர், இலவங்கம் ஆகியவற்றை சம அளவு எடுத்து, எருமை மோரில் நன்கு வேக வைத்து, குறிப்பிட்ட அளவு தயிருடன் கலந்து அருந்தி வர, நீரிழிவு விரைவில் குணமாகும்.. (Asan)
24. விளாம் பழங்களைக் குரங்குகள் விரும்பிச் சாப்பிடுவதால், இம்மரத்திற்கு வடமொழியில் “கபி பிரியா” என்றும், ஆங்கிலத்தில் ”மங்கி டிரீ” (Monkey Tree ) என்றும் பெயர் உண்டு. (Asan)
25. (ஆதாரம், நாகர்கோயில், எஸ். மகாலிங்க ஆசான், 10-01-2016 நாளிட்ட இராணி வார இதழில் எழுதிய கட்டுரை.)
26. விளாம் பிசினை உலர்த்தி இடித்து தூள் செய்து காலை, மாலை ஒரு சிட்டிகை வெண்ணெயுடன் உண்டு வந்தால் விந்து ஒழுக்கு நிற்கும்.
(523) பெரும்பாடு தீரும்.
(1548) நீர் எரிச்சல் குணமாகும்.
(1647) உள் உறுப்பு இரணம் தீரும். (1661)
27. விளா மரத்தின் பூக்களைச் சுத்தம் செய்து ஒரு தம்ளர் நீரில் இட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தினால் எலிக் கடி விஷம் நீங்கும்.
(881)
28. விளாமரக் கொழுந்து பறித்து வந்து அரைத்து ஒரு கிராம் எடுத்து பாலில் கலந்து அருந்தினால் பசியின்மை தீரும்.
(1645) இளைப்பு தீரும். (1601)
29. விளாமரத்தின் இலைகளை எடுத்து நீர் விட்டுக் கொதிக்க வைத்து கசாயம் செய்து அருந்தினால் பித்த சுரம் குணமாகும்.
(1646)
30. விளாமரக் கொழுந்தினைப் பறித்து வந்து நீர் விட்டுக் கொதிக்க வைத்துக் கசாயம் செய்து அருந்தினால் வாயுத் தொல்லை நீங்கும்.
(1312)
31. விளாமரக் கொழுந்தினைப் பறித்து வந்து அரைத்து புன்னைக் காயளவு எடுத்து பால், கற்கண்டு கலந்து சாப்பிட்டால் பித்த கணச் சூடு தணியும். (770)
32. விளா மரத்தின் கொழுந்து இலைகளைப் பறித்து கசாயம் வைத்துச் சாப்பிட்டால் வாயு நீங்கி நல்ல பசி எடுக்கும்.
(669)
33. விளாம் பழத்தை அடிக்கடிச் சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் நீங்கும்.
(540)
34. விளாம் பழம் சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.
(720) (1867)
35. விளாம் பழத்தை ஓட்டுடன் அரைத்து காலையில் மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் மருந்து விஷம் முறியும்.
(902)
=======================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam77@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்
மூலிகை,
[தி.பி:2052,விடை(வைகாசி )19]
{02-06-2021}
=============================================
விளாமரம் |
விளாமரம் |
விளாமரம் |
விளாமரம் |
விளாம் பழம் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக