இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

புதன், 2 ஜூன், 2021

வில்வம்

 

          மூலிகைப் பெயர்...........................................வில்வம்

          மாற்றுப் பெயர்...............................................................

          தாவரவியல் பெயர்........................................................

          ஆங்கிலப் பெயர்........................................BAEL TREE

     ================================================

 

01.   வில்வ இலைகளைப் பறித்து வந்து நிழலில் உலர்த்திப்பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். அரைத்  தேக்கரண்டி வில்வ இலைப் பொடியுடன்  திப்பிலிப் பொடி அரைத் தேக்கரண்டி சேர்த்து தேனில் குழைத்து இருவேளை உள்ளுக்குச் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா எனப்படும் மூச்சிரைப்பு நோய் குணமாகும்.

 

02.   வில்வம் தளிரை வதக்கி இளஞ்சூட்டில் கண்களின் மீது ஒற்றடம் கொடுத்தால், கண் வலி, கண் சிவப்பு, கண் அரிப்பு ஆகியவை மாறும்.  (039)  (049) (1523)

 

03.   வில்வ இலைக் கொழுந்து அரைத்து ஒரு கிராம் அளவு உள்ளுக்குச் சாப்பிட்டால் பெரும்பாடு தீரும்.  (1522)

 

04.   வில்வ இலைப் பொடியை தினசரி ஒரு  தேக்கரண்டி அளவுக்கு எடுத்து வெந்நீரில் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா குணமாகும்.  (138) (1070)

 

05.   வில்வ இலையைத் தினமும் காலையில் வாயில் இட்டு மென்று தின்று வந்தால் திக்கு வாய் சரியாகும்.  (215) (1913)

 

06.   வில்வ இலைச் சாறும், அறுகம்புல் சாறும் கலந்து தினசரி காலை, மாலை ஒரு அவுன்ஸ் ( 30 மி.லி ) சாப்பிட்டு வந்தால் உடல்வலி குணமாகும்.  (738)

 

07.   வில்வ இலையுடன் மிளகு சேர்த்து மென்று தின்று சுடுநீர் பருகி வந்தால் ஆஸ்துமா குணமாகும்.  (1066)

 

08.   வில்வ இலை, சுக்கு, மிளகு, சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து கசாயம் செய்து அருந்தி வந்தால் எல்லா விதமான சுரமும் குணமாகும்.  (1530) (1684)

 

09.   வில்வ இலைப் பொடி  அரைத் தேக்கரண்டி எடுத்து  தேனில் கலந்து சாப்பிட்டால் மண்டைக் குடைச்சல் குணமாகும்.  (1531)

 

10.   வில்வ இலைப் பொடி அரைத் தேக்கரண்டி எடுத்து வெண்ணெயில் கலந்து சப்பிட்டால் நீர்த் தாரை எரிச்சல் தீரும்.  (1532)

 

11.   வில்வ இலைப் பொடியும் கரிசலாங்கண்ணிச் சாறும் கலந்து ஒரு தேக்கரண்டி கொடுத்து வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.  (1533)

 

12.   வில்வ இலைப் பொடி அரைத் தேக்கரண்டி எடுத்து தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் தொண்டைக் கட்டு குணமாகும்.  (1585) நீர்க் கோவை தீரும். (1733)

 

13.   வில்வ இலைப் பொடி அரைத் தேக்கரண்டி எடுத்து 50 மி.லி தண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் தலைவலி, பித்தம், தொண்டைக் கட்டு ஆகியவை குணமாகும்.  (1666)

 

14.   வில்வ இலைகளை மாலை வேளையில் தண்ணீரில் போட்டு ஊற வைக்க வேண்டும். மறு நாள் காலையில் அந்த நீரை எடுத்துப் பருகி வந்தால் வயிற்றுப் புண்கள் ஆறும்.  (1714)

 

15.   வில்வ மரத்தின் வேர்த் தூள் இரண்டு சிட்டிகை எடுத்து தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் உடல் சூட்டின் காரணமாக உருவாகிய  பேதி குணமாகும்.  (102)

 

16.   வில்வ வேரை மை போல் அரைத்து பாலுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் நீர்க்கடுப்பு, வயிற்றுவலி, வாந்தி ஆகியவை குணமாகும்.  (709)

 

17.   வில்வ மரத்தின் வேர்ப் பட்டையை எடுத்து  தூள் செய்து பாலுடன் கலந்து அருந்தி வந்தால் நீண்ட நாள் நலமாக வாழலாம்.  (778)

 

18.   வில்வ வேர்ப் பொடியைப் பாலுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் நீர்க்கடுப்பு குணமாகும்.  (957)

 

19.   வில்வ வேர்ப் பட்டை 10 கிராம், சீரகம் 1 கிராம் எடுத்து அரைத்து பாலில் கலந்து சாப்பிட்டால் தாது பலப்படும்.  (1534)

 

20.   வில்வ மரப் பட்டை, சீரகம் இரண்டையும் பொடியாக்கி நெய்யில் குழப்பி சாப்பிட்டு வந்தால் தாது வீரியம் உண்டாகும்.  (487)

 

21.   வில்வ மரத்தின் பூவுடன் புளி சேர்க்காமல் இரசம் வைத்துச் சாப்பிட்டால் குடல் வலிமை பெறும்.  (544) (649) (712)

 

22.   வில்வப் பழத்தின் சதைப் பகுதியைச் சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டால் குடல் சுத்தமாகும்.  (687)

 

23.   வில்வப் பழத்தைப் பொடி செய்து கால் கிராம் சாப்பிட்டு வந்தால் குடல் புண்கள் குணமாகும்.  (1747)


=======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !


==================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை,

[தி.பி:2052,விடை(வைகாசி )19]

{02-06-2021} 

==================================================


வில்வம்

வில்வம்

வில்வம்

வில்வம்

வில்வம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக