இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

புதன், 2 ஜூன், 2021

விராலி

       மூலிகைப் பெயர்....................................................விராலி

       மாற்றுப் பெயர்கள்.......................................விராலிமாறு

       தாவரவியல் பெயர்..........HYMENODICTYON EXCELSUM

       ஆங்கிலப் பெயர்.................................... Dodonaea viscosa

       சுவை..............................................................................................

       தன்மை...........................................................................................

===================================================


1)    விராலி தமிழகமெங்கும் புதர் காடுகளில் வளர்கிறது. இது வறட்சியைத் தாங்கி வளரக் கூடியது.

 

2)    விரலியை விவசாயிகள் விராலிமாறு என்று சொல்வர். இது காம்புள்ள சாறற்ற மேல் நோக்கிய இலைகளையும் சிறகுள்ள விதைகளையும் கசப்பான பட்டையும் கொண்ட குறுஞ்செடி. விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

 

3)    விராலி, காய்ச்சல் தணித்தல், உடல் உரமாக்கல், வீக்கம் கட்டிகளைக் கரைத்தல் சதை நரம்புகளைச் சுருங்கச் செய்தல் ஆகிய பயன்களையுடையது.

 

4)    விராலி இலை இருபது கிராம் எடுத்து  இடித்துக் கால் லிட்டர் நீரிலிட்டு ஒரு நாள் ஊறவைத்து வடிகட்டி அதில் 20 மில்லியைச் சிறிது பால் கலந்து சாப்பிட்டு வர நுரையீரல் நோய்கள், கணச்சூடு, இருமல், சளி ஆகியவை தீரும்.

 

5)    விராலி இலையை வதக்கிக் கட்டிகள் மீது கனமாக வைத்துக்கட்டி வரக் கட்டி அமுங்கி விடும் அல்லது உடைந்து விரைவில் ஆறும். வீக்கம் கரையும்.

 

6)    விராலிப் பட்டையை உலர்த்திப் பொடித்து ஒரு தேக்கரண்டி தேனில் குழைத்து உண்டுவரச் சளி, சளிக் காய்ச்சல், முறைக்காய்ச்சல், மலேரியா முதலிய நோய்கள் தீரும்.

 

7)    விராலிப் பட்டையை அரைத்துப் பற்றிட வீக்கங்கள் விரைவில் கரையும்

 

8)    விராலி இலையை நரம்புகள் நீக்கி விட்டு வதக்கி, வீக்கத்தின் மீது வேப்ப எண்ணெய் தடவி, வதக்கிய இலையைக் கட்டி வந்தால் சில நாட்களில் மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆறும்.  (452) (1942)


=======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !


 

================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை,

[தி.பி:2052,விடை(வைகாசி )19]

{02-06-2021} 

================================================


விராலி


விராலி

விராலி


விராலி

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக