இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

செவ்வாய், 1 ஜூன், 2021

வாழை

 

       மூலிகைப் பெயர்....................................................வாழை

       மாற்றுப் பெயர்கள்.............நவரை, கதலி, அம்பணம்

       ..........................................அரம்பை, ஓசை, கவர், சேகிலி

       ..................................................................................திரணபதி

       தாவரவியல் பெயர்...........................MUSA PARADISIACA

       ஆங்கிலப் பெயர்..........................................BANANA TREE

       சுவை.........................................................................துவர்ப்பு

       தன்மை.....................................................................வெப்பம்

 

==================================================

 

1)      நீள் சதுர வடிவிலான மிகப் பெரிய இலைகளையும், குலையாக வளரும் காய்களையும் உடைய மரம். தாவரவியலின்படி இது புல் வகையைச் சேர்ந்தது.

    

2)      குருத்து, பூ, பிஞ்சு, தண்டு, பட்டை, காய், கனி ,இலை அனைத்துமே மருத்துவப் பயன் உடையவை.

 

3)      வாழையில் பல வகைகள் உள்ளன. அடுக்கு வாழை, இரசதாளி வாழை, கருவாழை, கொட்டை வாழை, செவ்வாழை, நவரை வாழை, நாட்டு வாழை, பசு வாழை, பேயன் வாழை, மலை வாழை, மொந்தன் வாழை, வெள் வாழை, பூவன் வாழை, இலச்சி வாழை எனப் பல வகைகள் உள்ளன.

 

4)      வாழைக் கிழங்கின் நீர் குருதிப் போக்கு அடக்கும். (Harish). வாழைத் தண்டு பித்தமடக்கும்; சிறுநீர் பெருக்கும்; கல்லடைப்பு நீக்கும் (Harish)

 

5)      வாழைப் பழம் உள் அழல் ஆற்றும்; மலமிளக்கும்; உடல் உரமாக்கும்.(Harish)வாழைக் கிழங்கு (கட்டை) சூட்டைத் தரும்; (Harish)

 

6)      தண்டு குடலில் சிக்கிய மயிர், தோல், நஞ்சு இவைகளை விடுவிக்கும்; (Harish)

 

7)      வாழைப் பூ வெள்ளையைப் போக்கும்; (Harish). வாழைப் பிஞ்சு மூலக் கடுப்பை நீக்கும்; (Harish). வாழைக் காயால் உடல் முற்றும்; வாயு உண்டாகும்.(Harish)

 

8)      செவ்வாழை, வெள்வாழை, இரசதாளி வாழை, மொந்தன் வாழை நான்கும் நோய்வாய்ப் பட்டோர் உண்ணலாம். கரு வாழை  நன்மை தரும். (Harish)

 

9)      வாழைப்பழத்தை வாத நோய் வசப்பட்டோர் உண்ணலாகாது. ஆனால் வாழைக்கு எதிர்ப் பொருளோடு சேர்த்து உண்டால் குற்றமாகாது. (Harish)

 

10)     வாழைப்பழம் மந்தப் பிணிகளை விளைவிக்கும். ஆனாலும், உடலைப் பொன் போலக் காத்து, உரமாக்கி, விந்துவைப் பெருக்கும்.(Harish)

 

11)     வாழைக்காய் பிஞ்சாயிராமல் அரைக்காயாக இருந்தால் வளிக்குற்றத்தை ( வாய்வு ) உண்டாக்கும்(Harish)

 

12)     வாழைப்பூ வெள்ளை, வெறி, உடல் கொதிப்பு, சீதபேதி, ஆசன வாய்க் கடுப்பு, இருமல், கை கால் எரிச்சல் ஆகியவற்றைத் தீர்க்கும். ஆண்மை தரும்.(Harish)

 

13)     வாழைக் கிழங்கில் ஊறுகின்ற நீரை காலை மாலை 200 மி.லி வீதம் சாப்பிட்டு வர குளிர்ச்சியையும் உடல் வலிமையையும் உண்டாக்கும். பெரு வயிறு, சிறு நீர் எரிச்சல், குருதியுடன் சிறு நீர் போதல், வயிற்றுப் புண், உடல் வெளுத்து கழிச்சலை உண்டாக்கும் நோய், உளைச்சல், அழலை  இவைகளை  வராமல் தடுக்கும். பாண்டு எலும்புருக்கி ஆகியவை நீங்கும்(Harish)

 

14)     வாழைக் குருத்தைப் பிரித்து தீயினால் ஏற்பட்ட புண்களின் மீது கட்டினால், கொப்பளங்கள் தோன்றாமல் ஆறும்  (Harish)

 

15)     வாழைப் பட்டைச் சாற்றினைத் தீக்காயங்களுக்குப் பிழியலாம் புண்கள் விரைவில் குணமாகும்.(Harish)

 

16)     வாழைத் தண்டினைச் சமைத்து உண்டு வந்தால் சிறுநீரகக் கற்கள் கரையும். .(Harish)

 

17)     வாழை இலை ஒரு சிறந்த நஞ்சு முறிப்பான்.  தீக்காயம் பட்ட இடத்தில் வாழை இலையை வைத்துக் கட்டுவதால், காயம் சீக்கிரத்தில் ஆறும்.(Harish)

 

18)     வாழை இலையில் பரிமாறிய உணவை உண்பதால், தோல் பள பளப்பாகும்; உடல் நலம் பெறும்; பித்தம் தணியும்.(Harish)

 

19)     வாழைத் தண்டின் சாற்றை 60 மி.லி தினசரி குடித்துவந்தால் சிறுநீரகக் கற்கள் கரையும். தேவையற்ற கொழுப்புகள் குறையும். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். வறட்டு இருமல் நீங்கும்.(Harish)

 

20)     வாழைப் பட்டைச் சாற்றை அருந்த வைத்தால் பாம்பு விஷம் முறியும்.(Harish)

 

21)     காய்ந்த வாழைப் பட்டையின் எரித்த சாம்பலை நீரிலிட்டுக் கலக்கித் தெளிய வைக்க வேண்டும்.  இந்தத் தெளிவை எடுத்துக் காய்ச்சினால் இறுதியில் உப்பு கிடைக்கும். இந்த உப்புக்கு சிறுநீரைப் பெருக்கும் தன்மையுண்டு.(Harish)

 

22)     வாழைக் கிழங்கில் இரவில் சிறிது துவாரம் செய்து காலையில் அதில் ஊறியுள்ள நீரை எடுத்து 80 – 150 மி.லி  வீதம் குடித்து வந்தால் உடலுக்குக் குளிர்ச்சி தரும்; சிறுநீர் எரிச்சல் நீக்கும்; பெருவயிறு நோய் தீரும்; கல்லடைப்பு விலகும்.(Harish)

 

23)     வாழைப் பூவை வாரத்திற்கு 2 அல்லது 3 முறை சமைத்து உண்பதால் இரத்தம் தூய்மையாகும்; இரத்தத்தில் உள்ள கொழுப்புகள் குறையும்; வயிற்றில் உள்ள புண்களை ஆற்றும்.(Harish)

 

24)     உள்மூலம், வெளிமூலம், இரத்த மூலம் உள்ளவர்களுக்கு வாழைப் பூ  ஒரு சிறந்த உணவாகும். வாழைப்பூ மலத்துடன் வெளியேறும் இரத்தத்தை தடுக்கும். மூலக் கடுப்பைப்போக்கும்.(Harish)

 

25)     வாழைப்பூ பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை படுதலுக்கு மிகச் சிறந்த நிவாரணியாகும்.(Harish)

 

26)     வாழைப் பூவுக்குத் தசையை உறுதிப் படுத்தும் தன்மை உள்ளதால், இது மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் அதிக இரத்தப் போக்கைத் தடுக்கும்.(Harish)

 

27)     வாழை மரத்தின் இளம் பூவைப் புட்டிட்டுச் சாறெடுத்து பனங்கற்கண்டு சேர்த்துக் கொடுக்க பெரும் பாடு தீரும்; வெள்ளைப் படுதலும் நீங்கும்.(Harish)

 

28)     வாழைப் பிஞ்சு சிறந்த பத்திய உணவாகும். இதனைச் சமைத்து உண்ண, உள்மூலத்தில் உள்ள முளைகளின் அளவு குறையும்.(Harish)

 

29)     வாழைப் பிஞ்சு சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல துணையாகும். (Harish). வாழைப் பிஞ்சுடன் அத்திக் காய் சேர்த்து உண்டு வந்தால் அதிகமாக வெளியேறும் மூத்திரம் கட்டுப்படும்.(Harish)

 

30)     வாழைக் காயில் உப்புச் சத்துக் குறைவாகவும் பொட்டாசியம் சத்து அதிகமாகவும் இருப்பதால், வாழைக் காய் உணவு இரத்த அழுத்தத்தைச் சமப்படுத்தும். ஆனால் சர்க்கரை நோயாளிகள் இதைத் தவிர்க்க வேண்டும்.(Harish)

 

31)     வாழைப் பழத்தில் வைட்டமின்  A, B-1, B-2, B-6, C ஆகியவற்றுடன்  பொட்டாசியம், மெக்னீஷியம், நார்ச்சத்து ஆகியவையும் உள்ளன.(Harish)

 

32)     செவ்வாழைப் பழத்தை 48 நாட்கள்தினசரி எடுத்துக் கொள்வதால், விந்து அணுக்களின் எண்ணிக்கை கூடும். உடல் பலத்தை அதிகரிக்கும்.(Harish)

 

33)     பச்சை வாழைப்பழம் உடல் வெப்பத்தைத் தணிக்கும். (Harish). மொந்தன் வாழைப்பழம் அம்மை நோய் வந்தவருக்கும், காமாலை நோய் உள்ளவருக்கும் சிறந்த உணவாகும்.(Harish)

 

34)     மலை வாழையை உண்பதால் சோகை நீங்கும்.(Harish). பேயன் வாழைப்பழம் குடற் புண்ணைத் தீர்க்கும்.(Harish)

 

35)     வாழைப் பழத்தில் நார்ச் சத்து உள்ளதால் மலச் சிக்கல் நீங்கும். குடற்புண் குணமாகும். பித்தம் சமப்படும். இரத்த அழுத்தம் நிதானப்படும்.(Harish)

 

36)     (தொ.எண்15 – முதல் 35 வரை ஆதாரம்:- வேலூர், ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ் மருத்துவ மனை முதன்மை மருத்துவ அதிகாரி டாக்டர். வெ. ஹரிஷ் அன்புச் செல்வன் M.D.(s) அவர்கள் 08-04-2017 நாளிட்ட தினமலர் நாளிதழின் இணைப்பான பெண்கள் மலரில் எழுதிய கட்டுரை.)

 

37)     வாழைத் தண்டுப் பொரியல் செய்து சாப்பிட்டால், குடலில் தங்கி இருக்கும் முடி, நஞ்சு ஆகியவை வெளியேறும்.  (690)

 

38)     வாழைத் தண்டு ( முற்றிய வாழை மரத்திலிருந்து எடுத்து ), சாறு பிழிந்து, 100 மி.லி எடுத்து அதனுடன் தும்பைச் சாறு 100 மி.லி. சேர்த்து இரண்டையும் ஒன்றாகக் கலக்கிச் சாப்பிட்டால் பாம்பு விஷம் முறியும்.    (899)

 

39)     வாழைத் தண்டுச் சாறு 200 மி.லி, சோற்றுக் கற்றாழையின் நன்கு கழுவிப் பிசைந்த சோறு 50 மி.லி, சீரகப்பொடி 25 கிராம், பச்சரிசி 10 கிராம் சேர்த்து கலக்கிக் குடித்தால் சிறுநீர்க் கடுப்பு நீங்கும். (961)

 

40)     வாழைத்தண்டுச் சாறு 25 மி.லி., முள்ளங்கிச் சாறு 25 மி.லி எடுத்து இரண்டையும் ஒன்றாகக் கலந்து அருந்தி வந்தால் கல்லடைப்பு நிங்கும்.  (1052) (1197)

 

41)     வாழைத் தண்டுச் சாறு, பூசனிச் சாறு, அறுகம்புல் சாறு , எதையாவது ஒன்றைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடம்பில் சதை போடுவதைத் தடுக்கலாம்.  (106)

 

42)     வாழைத் தண்டைச் சமைத்துச் சாப்பிடு வந்தால் சிறுநீர்க் கற்கள் கரையும். (1630) 

 

43)     வாழைப்பூ, கடுக்காய்ப் பொடி சாப்பிட்டு வந்தால் மூலநோய் குணமாகும்.   (373) (1076)

 

44)     வாழைப் பூவைப் பருப்புடன் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால், பிரமேகம், வெள்ளை, மூலக்கடுப்பு ,கை,காலெரிச்சல் குணமாகும்.  (379) (1029) (1632)

 

45)     வாழைப் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் வயிற்றுப் புண் சரியாகும்.  (701)

 

46)     வாழைப் பூவை அடிக்கடி சமைத்து உண்டு வந்தால் விந்து உற்பத்தி அதிகரிக்கும்.  (1227) (1291) (1642)

 

47)     வாழைப்பூவை அனலில்வாடி சாறு பிழிந்து ஒரு முடக்கு குடித்து வந்தால் சீதபேதி, இரத்த மூலம் கட்டுப்படும். (1264)

 

48)     வாழைக் காய் பிஞ்சாக இருக்கும் போதே பறித்து சமைத்து சாப்பிட்டு வந்தால் குடல் புண் குணமாகும்.  (710)

 

49)     வாழைக்காய் சமைத்து உண்பதால் இரத்தம் பெருகும். ஆனால் அதிகமாகச் சாப்பிட்டால் வாயுத் தொல்லை ஏற்படும்.  (735)

 

50)     வாழைப் பழத்தில் ஏலக்காய்ப் பொடியைத் தூவி அல்லது ஏலக்காய் பொடி சேர்த்துப்  பிசைந்து சாப்பிட்டு வந்தால் பெரும்பாடு கட்டுப்படும்.  (596)  (1921) (2025)

 

51)     வாழைப் பழத் தோலைக் கண்ணாடி குத்திய இடத்தில் வைத்துக் கட்டினால் இரத்தப் போக்கு நின்று விரைவில் குணமாகும்.  (535)

 

52)     வாழைப்பழத்தின்  தோல் மீது சுண்ணாம்பு தடவி இரவு முழுதும் பனியில் வைத்திருந்து காலையில் சுளையைச் சாப்பிட்டால் மஞ்சள் காமாலை குணமாகும்.  (1094)

 

53)     தீப்புண் ஏற்பட்டால், கொப்புளங்கள் உருவாகாமல்  குணமாக வாழை இலைக் குருத்தை விரித்து தீப்புண்கள் மீது கட்டலாம்.  (1041) (1628)

 

54)     வாழைப் பட்டையை அனலில் காட்டி சூடேற்றிப் பிழிந்து, அந்தச் சாறில் ஓரிரு துளிகள் காதில் விட்டால் காது வலி சரியாகும்.  (054)

 

55)     வாழைப் பட்டைச் சாறினைத் தீக்காயங்கள் மீது பிழிந்து விட்டால், அவை கொப்புளங்கள் உருவாகாமல் விரைவில் ஆற்றும்.  (1629)

 

56)     வாழை மரத்தில் ஒரு குச்சியைச் செருகி வைத்தால், அதிலிருந்து சாறு சொட்டும். அந்தச் சாறினைச் சேகரித்து அருந்தி வந்தால் சிறுநீரகக் கற்கள் கரையும்.  (1631)

 

57)     செவ்வாழைப் பழம் கல்லீரல் வீக்கம், மூத்திர நோய்களை நீக்கும்.   (1204)

 

58)     பச்சை வாழைப் பழம் உடலுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கும்.   (1205)

 

59)     இரஸ்தாளிப் பழம் கண்ணிற்கும், உடல் வலுவிற்கும் மிக நல்லது.  (1206)

 

60)     பேயன் வாழைப் பழம் உடல் வெப்பத்தைக் குறைக்கும்.   (1207)

 

61)     கற்பூரவள்ளி வாழைப் பழம் கண்ணிற்குக் குளிர்ச்சியைத் தரும்.   (1208)

 

62)     நேந்திரம் பழம்  இரும்புச் சத்தினை உடலுக்குத் தரும்.    (1209)

 

63)     மலை வாழைப் பழத்தை நல்லெண்ணெயுடன் சாப்பிட்டால் சீதபேதி குணமாகும். (1310)


=======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

 ================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை,

[தி.பி:2052,விடை(வைகாசி )18]

{01-06-2021} 

================================================

வாழைமரம்


வாழைத்தார்

வாழைக்குலை

வாழைப் பழம்

வாழைப் பழம்

வாழைப் பூ



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக