இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

செவ்வாய், 1 ஜூன், 2021

வாதநாராயணன்

       மூலிகைப் பெயர்......................................வாதநாராயணன்

       மாற்றுப் பெயர்கள்............:வாதரக்காச்சி, வாதாமடக்கி

       ..................................................................வாதமடக்கி, வாதரசு

       தாவரவியல் பெயர்...............................CAESAL PINIOIDEAE

       ஆங்கிலப் பெயர்..................................................Delonix elata

       சுவை...............................................................................:கைப்பு

       தன்மை.........................................................................வெப்பம்

       செய்கை........................................................வாதம் தணியும்

===================================================

 

(1)   வாதநாராயணன் என்பது இரு சிறகான சிறு இலைகளை உடைய கூட்டிலைகளையும் உச்சியில் பகட்டான பெரிய பூக்களையும் தட்டையான காய்களையும் உடைய வெளிர் மஞ்சள்  நிறமுடைய வலிவற்ற மரம்.

 

(2)   வாதநாராயணன் இலை பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

 

(3)   வாதநாராயணன் பித்த நீர் பெருக்குதல், நாடி நடையை மிகுத்து உடல் வெப்பம் தருதல் ஆகிய குணங்களை உடையது.

 

(4)   வாதநாராயணன் இலையைச் சமைத்துண்ண இரண்டொரு முறை மலங் கழியும். வாத நீர் கழியும். வாரம் 2, 3 முறைப் பயன்படுத்தலாம். வாத வலி, வீக்கம், குத்தல், குடைச்சல் தீரும்.

 

(5)   வாதநராயணன் இலையைப் போட்டுக் கொதிக்க வைத்துக் குளிக்க உடம்பு வலி தீரும். (790) (1626)

 

(6)   வாதநாராயணன்  இலையை சிற்றாமணக்கு நெய் ( விளக்கெண்ணெய் ) விட்டு வதக்கி வீக்கங்களுக்கு ஒற்றடம் கொடுக்கலாம்.

 

(7)   வாதநாராயணன் இலைச் சாறும் ஆமணக்கு நெய்யும் ஓரளவு கூட்டிக் காய்ச்சி வடிகட்டி, 50 கிராம் உள்ளுக்குக் கொடுக்க, நன்றாக கழியும்.  பெருகிய வாதநோயைக் கட்டுப் படுத்தும்.

 

(8)   வாதநாராயணன் வாயு நோயைப் போக்கும். தைலங்களில் இவ்விலையின் சாறு சேருமாயின் வாத நோயை எளிதில் போக்கும்

 

(9)   வாதநாராயணன் இலையை உலர்த்திப் பொடித்து 3 கிராம் நாள்தோறும் ஒரு முறை வெந்நீரில் சாப்பிட மேகம், வாயு தீரும் (1627)

 

(10)  வாதநாராயணன் இலையைக் காயவைத்து இடித்துப் பொடியாக்கி 5 கிராம் தூளை சுடுநீரில் வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டு வந்தால் வாயு தொல்லை நீங்கும்.  (326)

 

(11)  வாதநாராயணன் இலையைக் காயவைத்து இடித்து பொடியாக்கி உள்ளுக்குச் சாப்பிட்டு வந்தால் மேகநோய் குறையும்.  (590)

 

(12)  வாதநாராயணன் இலைச் சாறு ஒரு அவுன்ஸ் (30 மி.லி. ) குடித்து வந்தால் வாத வீக்கம், வாதக் குடைச்சல் ஆகியவை தீரும்.  (1625)

 

(13)  வாதமொடுக்கி மரத்தின் கொழுந்துகளைச் சுத்தம் செய்து சாப்பிட்டு வந்தால் வாயுப் பிடிப்பு குணமாகும்.  (327)


=======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

 

==================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை,

[தி.பி:2052,விடை(வைகாசி )18]

{01-06-2021} 

==================================================


வாதநாராயணன்

வாதநாராயணன்

வாதநாராயணன்

வாதநாராயணன்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக