மூலிகைப் பெயர்........................................வாகை மரம்
மாற்றுப் பெயர்........................................................................
தாவரவியல் பெயர்...............................................................
ஆங்கிலப் பெயர்...........................................SIRISSA
TREE
01. வாகை மரப் பட்டையைக் கரியாக்கிப் பொடி செய்து பற்பொடியாகப் பாவித்து பல் துலக்கி வந்தால் பல் ஆட்டம், பல் வலி. ஈறு நோய் ஆகியவை குணமாகும். (230) (246)
02. வாகைப் பிசினை வறுத்துப் பொடி செய்து காலை மாலை பசும்பாலில் சாப்பிட்டு வந்தால் மர்ம உறுப்புகளிள் காணப்படும் பிரமேகம் தீரும். தாது கெட்டியாகி உடல் பொலிவு பெறும்.
(495) (1915)
03. வாகை இலைச் சாற்றுடன் சுண்ணாம்புச் சேர்த்து சுட்ட மண் தொட்டிகளுக்குப் பூசினால் அவை உடையாது நெடுங்காலம் உழைக்கும்.
=======================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam77@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்
மூலிகை,
[தி.பி:2052,விடை(வைகாசி )18]
{01-06-2021}
==================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக