மூலிகைப்
பெயர்...........................................வன்னி மரம்
மாற்றுப் பெயர்.......................................................................
தாவரவியல்
பெயர்..................................
ஆங்கிலப் பெயர்..............................................SUMA
TREE
01. வன்னி மரத்தின் இலையைப் பசும் பால் விட்டு அரைத்து தினசரி ஒரு அவுன்ஸ் ( 30 மி.லி.)
சாப்பிட்டு வந்தால் உடல் அரிப்பு நீங்கும். (419) (438).
02. வன்னி மரத்துப் பட்டை 10 கிராம், உப்பு 2 கிராம் சேர்த்து அரைத்து காலை மாலை ஒரு சிட்டிகை அளவு சாப்பிட்டால் காய்ச்சல் குணமாகும். (107)
03. வன்னி மரத்துப் பட்டையைத் தூளாக்கி நீர் சேர்த்துக் காய்ச்சி வடிகட்டி மூன்று வேளைகள் குடித்து வந்தால் சுவாச நோய் குணமாகும். (119)
=======================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam77@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்
மூலிகை,
[தி.பி:2052,விடை(வைகாசி )18]
{01-06-2021}
==================================================
வன்னிமரம் |
வன்னிமரம் |
வன்னிமரம் |
வன்னிமரம் |
வன்னிமரம் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக