மூலிகைப் பெயர்...................................................வேம்பு
மாற்றுப் பெயர்கள்....................பிசுமந்தம், அரிட்டம்
....................................... துத்தை நிம்பம், பாரிபத்திரம்
..................................................................................,வாதாரி
தாவரவியல் பெயர்...................AZADIRACHTA
INDICA
ஆங்கிலப் பெயர்..........................................NEEM
TREE
சுவை........................................................................கைப்பு
தன்மை.................................................................வெப்பம்
=============================================
01. இலைக்காம்பில் எதிரடுக்கில் அமைந்த விளிம்புகளில் பற்கள் போன்ற அமைப்புடைய இலைகளும், சிறு வெண்ணிற மலர்க் கொத்துகளும் மஞ்சள் நிறப் பழங்களும் உடைய மர வகை.
02. வேம்பில் கருவேம்பு, சர்க்கரை வேம்பு, மலை வேம்பு ஆகிய
இனங்கள் உள்ளன.
03. இலை, ஈர்க்கு, பூ, காய், பழம், வித்து, மரப்பட்டை, வேர்ப்பட்டை, எண்ணெய் ஆகிய அனைத்தும் மருத்துவக் குணங்கள் உடையவை.
04. வயிற்றுப் புழு, பெருநோய், மாந்தம், நச்சுச்சுரம், அம்மைப்புண், சொறி, சிரங்கு ஆகிய இவைகளை வேப்பிலை போக்கும்.
05. வேப்பங்கொழுந்து, முதிர்ச்சியான இலை, ஆகிய இவ்விரண்டையும் இடித்து, அப்பொடியின் அளவிற்கு அரைப்பங்கு ஓமமும் உப்பும் சேர்த்துப் பொடித்து, புசிக்கத் தொடங்கின், அதனால், கண்ணிலிருக்கும் படல மறைப்பு, காமாலை, மாலைக்கண், புழு வெட்டு
முதலிய நோய்கள் அகலும்.
06. வேப்பிலையுடன் சிறிது தேனும் மஞ்சளும் சேர்த்து அரைத்துத் துணியில் தடவி மேலுக்குப் போட கரப்பான், சொறி சிரங்கு, அம்மைப்புண் இவைகள்
நீங்கும். எரிச்சல் இருந்தால் அரிசி மாவு கூட்டிக் கொள்ளலாம்.
07. வேப்பிலையை நீர் விட்டு அரைத்து களி போல் கிண்டி மேலுக்குப் போட வீக்கம், நாட்பட்ட புண், தோலைப்
பற்றிய புண் நோய்கள் தீரும்.
08. நாட்பட்ட பழைய வேப்பம் பூவை நெய் விட்டு வதக்கி, உப்பு, சுட்ட பழம் புளி, வறுத்த மிளகாய், கறிவேப்பிலைக் கூட்டி, துவையல் செய்வது போலச் செய்து சோற்றுடன் கலந்துண்ண, பெருமூர்ச்சை, நாவறட்சி, சுவையின்மை, வாந்தி, நீடித்த வாத நோய், ஏப்பம், வயிற்றுப் புழு ஆகியவை போகும்.
09. வேப்பங் காயை உலர்த்திக் கொட்டையை நீக்கிப் பொடி செய்து, 2 – 8 கிராம் வீதம் தினம் இருமுறை கொடுக்க, முறைக்காய்ச்சல் நீங்கும். உடல் வலுக்கும்.
10. வேப்பம் பழத்தின் ரசத்தை எடுத்து மணப்பாகு (சிரப்) செய்து தோலைப் பற்றிய நோய்களுக்குத்
தரலாம்.
11. வேப்பம் பழ வித்திலிருந்து பருப்பை எடுத்து அரைத்து புழுப்பட்ட புண்களுக்குக் கட்ட, புண்ணினின்றும் புழுக்கள் வெளிப்படும்.
12. சர்க்கரை வேம்பு கிடைப்பது அரிது. இது சிறிய செடி. இது எவ்விதத்திலும் வேம்பிற்கு மாறுபடுவதில்லை.
13. வேப்பம் பூ வாயுத்தொல்லை, ஏப்பம் அதிகமாக வருதல், பசியின்மை
போன்றவைகளுக்கு மிக நல்லது. வேப்பம் பூவை மென்று தின்பார்கள்.
14. வேப்பம் பூ ( உலர்ந்தது ) ஐந்து கிராம் எடுத்து 50 மி.லி குடிநீர் விட்டு மூடி வைத்திருந்து, வடிக்கட்டிச் சாப்பிட்டு வரப் பசியின்மை, உடல் தளர்ச்சி
நீங்கும்
15. வேம்பு கல்லீரலை நன்கு இயக்குவிக்கும். மூன்று கிராம் வேப்பம் விதையைச் சிறிது வெல்லம் சேர்த்து அரைத்து காலை மாலையாக 40 நாட்கள் சாப்பிட்டு வர மூல நோய் நீங்கும்.
16. வேப்பம் விதை மூன்று கிராம் எடுத்து சிறிது வெல்லம் சேர்த்து அரைத்து காலை மாலையாக நீண்ட நாள் சாப்பிட்டு வந்தால், தோல் நோய்கள், சூதக சன்னி, நரம்பு இசிவு, குடல்புழுக்கள் போன்ற
தொந்தரவு நீங்கும்.
17. வேப்பம் பூவில் துவையல், ரசம் செய்து சாப்பிட்டு வந்தால், குமட்டல், வாந்தி மயக்கம் குணமாகும். பசி உண்டாகும். பூவை ஊறவைத்துக் குடிக்க, உடல் பித்தம் தீரும்.
18. வேப்பங் காயை உலர்த்திய பொடியை வெந்நீரில் கொடுக்க, மலேரியாக் காய்ச்சல், மண்டையிடி
குணமாகும்.
19. வேப்பம்பழ சர்பத் கொடுத்து வர, சொறி, சிரங்கு போன்றவை குணமாகும். கிருமிகள் அனைத்தையும் அழித்து விடும்,
20. வேப்பங்கொடையை உடைத்து உள்ளிருக்கும் பருப்பை எடுத்து அரைத்துப் புரையோடிய புண்கள் மீது பூசி வரக் குணம் கிடைக்கும். குஷ்ட நோயாளிகள் புண்களையும் குணப்படுத்தும்.
21. வேப்பிலைச் சாறு, கடல் நுரை, தேன் மூன்றையும் 6 : 1 : 6 கிராம் வீதம் எடுத்து அரைத்து வடிகட்டி இரண்டு சொட்டுகள் காதில் விட்டு வந்தால் காதில் சீழ் வடிதல் குணமாகும். காதில் புண்கள் இருந்தாகும் குணமாகும்.
(060)
22. வேப்ப இலை, ஓமம் இரண்டையும் சேர்த்து அரைத்து நெற்றி மற்றும் பிடரியில் பூசிக் கொண்டால் மூக்கில் நீர் வடிதல் நிற்கும்.
(112)
23. வேப்பிலையை வறுத்து சூட்டோடு தலைக்கு வைத்துக் கொண்டு தூங்கினால் காய்ச்சல் நீங்கும். தூக்கம் நன்றாக வரும்.
(166)
24. வேப்பிலை நான்கு கைப்பிடி, உப்பு ஒரு கைப்பிடி எடுத்து சட்டியில் போட்டு வறுத்து, கருக்கி அதைப் பற்பொடி போல் பாவித்து பல் துலக்கி வந்தால் வாய் நாற்றம் நீங்கும். பல், ஈறு உபாதைகள் குணமாகும். (237)
25. வேப்பிலையுடன் வெங்காயம் சேர்த்து அரைத்து உடல் முழுதும் பூசி, அரை மணி நேரம் கழித்து வெந்நீரில் குளித்து வந்தால் சொறி சிரங்கு குணமாகும்.
(455)
26. வேப்பிலையுடன் சிறிது பெருங்காயம் சேர்த்து மைய அரைத்து காயங்களின் மீது தடவி வந்தால் காயம் விரைவாக ஆறும்.
(453)
27. வேப்பிலையை அரைத்து சாறு பிழிந்து 25 மி.லி எடுத்து அத்துடன் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துக் கலந்து காலை மாலை 2 வேளைகள் அருந்தினால் வயிற்றுப் பூச்சிகள் ஒழியும்.
(681)
28. வேப்பிலை, அறுகம்புல் கசாயம் செய்து வேளைக்கு 30 மி.லி வீதம் காலை மாலை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் புற்று நோய் குணமாகும். (816)
(1263)
29. வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து குளிக்கும் நீரில் போட்டு கொதிக்க வைத்து, ஒரு நாள் விட்டு மறு நாள் அந்த நீரை எடுத்து தலைக்குக் குளித்து வந்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.
(915)
30. வேப்பிலை நெல்லி முள்ளி இரண்டையும் மை போல் அரைத்து வெண்ணெயுடன் கலந்து பூசினால் அக்கி குணமாகும். (1008)
31. வேப்பிலையும் மஞ்சளும் சேர்த்து அரைத்துப் பூசினால் சரும நோய்கள் குணமாகும்.
(1155)
32. வெப்பிலையையும் மஞ்சளையும் சேர்த்து அரைத்து வெண்ணெயில் கலந்து பூசினால் முலைக் காம்பு வெடிப்பு குணமாகும்.
(1677)
33. வேப்பிலையும் வசம்பும் சேர்த்து கசாயம் செய்து குடித்தால் பேதியை நிறுத்தும்.
(1757)
34. வேப்பங் கொழுந்து துளசி இலை சேர்த்து அரைத்து தினமும் காலையில் சுண்டைக் காய் அளவு சாப்பிட்டு வந்தால் ஒவ்வாமை (அலர்ஜி) குணமாகும்.
(1018)
35. வேப்பங் கொழுந்தைப் பசு மோர் விட்டு அரைத்து தீப்பட்ட புண் மீது பூசி வந்தால் தீப் புண் விரைவில் ஆறும்.
(1038)
36. வேப்பங் கொழுந்தை நிழலில் உலர்த்தி அரை பங்கு உப்பு, ஓமம் சேர்த்து வறுத்து பொடி செய்து, சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.
(1092)
37. வேப்பம் பூவை உலர்த்தி, வறுத்து பொடி செய்து பருப்பு இரசத்துடன் கலந்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும்.
(280) (283) (1121)
38. வேப்பம் பூவுடன் மிளகு சேர்த்து பொடியாக்கிச் சாப்பிட்டு வந்தால் கருப்பைக் கோளாறுகள் தீரும். (588)
39. வேப்பம் பூவை இரண்டு தம்ளர் நீர் விட்டுக் காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால் தொழுநோய் குணமாகும்.
(625)
40. வேப்பம் பூவை உப்புப் போட்ட மோரில் ஊற வைத்து வெயிலில் உலர்த்திப் பொடி செய்து அரை தேக்கரண்டி மோரில் கலந்து சாப்பிட்டால் வயிற்றுப் பூச்சிகள் வெளியேறி விடும்.
(699)
41. வேப்பம் பருப்பை வெல்லம் சேர்த்து அரைத்து 3 கிராம் அளவு எடுத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் தோல் நோய்கள் தீரும்.
(1668) மூலநோய் குணமாகும்.
(1655)
42. வேப்பம் பூவுடன் வேப்பம் விதையை அரைத்துக் கட்டி வந்தால் நரம்புச் சிலந்தி குணமாகும்.
(1761)
43. வேப்பமரத்துப் பட்டையை இடித்துத் தூளாக்கி, அதை உடம்பு முழுதும் பூசி அரை மணி நேரம் கழித்துக் குளித்தால் உடம்பு நமைச்சல், தடிப்பு நீங்கும்.
(998)
44. வேப்பம் பட்டையை இடித்து, நீர் விட்டுக் காய்ச்சி, கசாயமாகி, அதை தீப் புண் மீது தடவி வந்தால் தீப் புண் விரைவில் ஆறும்.
(1039) (1877)
45. வேப்பமரத்தில் மிக முதிர்ந்த மரமாகப் பார்த்து, அதன் பட்டையை இடித்து அத்துடன் பூவரசம் பட்டைத் தூளைக் கலந்து 2 கிராம் எடுத்து சர்க்கரை சேர்த்துக் காலை மாலை சாப்பிட்டு வந்தால் தொழுநோய் குணமாகும்.
(1653)
46. வேப்பங் கொட்டைப் பருப்பை எடுத்து நீர் விட்டுக் காய்ச்சி இறக்கி, அந்நீரைக் கடைந்தால் நுரை உண்டாகும். அந்த நுரையை மட்டும் தீப்புண் மீது தடவி வந்தால் புண் விரைவில் ஆறும்.
(1037)
47. வேப்பம் பிசினைத் தண்ணீரில் கரைத்து நன்றாகக் கலந்து அருந்தி வந்தால் தொழு நோய் குணமாகும்.
(944) (1932) (2005)
48. வேப்பம் பிண்ணாக்கை எடுத்து நல்ல விளக்கில் காட்டி சுட்டு, புகையை மூக்கில் உறிஞ்சினால் தலை பாரம் நீங்கும்.
(1759)
49. வேப்ப எண்ணெயைக் காய்ச்சி சேற்றுப் புண் மீது தடவி வந்தால், சேற்றுப் புண் குணமாகும்.
(420) (1165)
50. வேப்ப எண்ணெயுடன் மஞ்சள் பொடி கலந்து போட்டு வந்தால் பித்த வெடிப்பு சரியாகும்.
(423) (1152) (1872)
51. வேப்ப எண்ணெய் 50 கிராம் எடுத்து, சிறிது கற்பூரத்தை அதில் போட்டு ஊறவைத்து, தினசரி எழுந்தவுடன், இந்த எண்ணெயை உடலில் சுரணை இல்லாத இடத்தில் தடவி வந்தால், உணர்வு மீளும். (744)
52. வேப்ப எண்ணெயைத் தலைக்குத் தேய்த்து தலை முழுகி வந்தால், சன்னி, பிடரி இசிவு, வாத நோய்கள் தீரும். (1035)
(1654) (1969)
53. வேப்ப எண்ணெயில் கணைப் பூண்டு இலையை வதக்கிக் கட்டி வந்தால், மூட்டு வலி குணமாகும்.
(1153)
==========================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam77@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்
மூலிகை,
[தி.பி:2052,விடை(வைகாசி )19]
{02-06-2021}
===============================================
வேப்ப இலை |
வேப்ப மரம் |
வேப்பங்காய் |
வேப்பம் பழம் |
வேப்பங் கொட்டை |
வேப்பம் பூ |
பயன் தரும் பதிவு
பதிலளிநீக்குமகிழ்ச்சி !
நீக்குஅருமை!! நன்றி!!!
பதிலளிநீக்குமிக்க மகிழ்ச்சி !
நீக்குVery Fine.
பதிலளிநீக்குமிக்க மகிழ்ச்சி !
பதிலளிநீக்கு