மூலிகைப் பெயர்..............................................வெற்றிலை
மாற்றுப் பெயர்........................................................................
தாவரவியல் பெயர்...............................................
ஆங்கிலப் பெயர்................................................BETAL
LEAF.
===================================================
01.
வெற்றிலையை
எடுத்து சாறு
பிழிந்து ஓரிரு துளிகள் காதில் விட்டால் காது வலி நீங்கும். (052) (1787)
02.
வெற்றிலைச்
சாறுடன் கோரோசனை இழைத்து அரைச் சங்கு குழந்தைகளுக்குப் புகட்டினால் மூச்சுத் திணறல் சரியாகும். (151) (1175)
03. வெற்றிலைச் சாறும் வெள்ளைப் பூண்டுச் சாறும் கலந்து தடவி வந்தால் எச்சிற் புண் குணமாகும். (211)
04. வெற்றிலையை ( முற்றியதாக இருக்க வேண்டும் ) வட்டமாக வெட்டி உமிழ்நீர்
தடவி நெற்றிப் பொட்டுகளில் ஒட்டி வைத்து விட்டால் இலேசான தலைவலிகள் குணமாகி
விடும். (418)
05. வெற்றிலை, ஓமம், இரண்டையும் சேர்த்து இடித்து சாறு பிழிந்து அத்துடன் தேன் கலந்து அருந்தினால் வயிற்றுப் பொருமல் குணமாகும். (641)
06. வெற்றிலையை சூடு படுத்தி குழந்தையின் வயிற்றின் மீது போட்டு வைத்தால் வயிற்றுப் பொருமலால் ஏற்படும் வலி குணமாகும். (654)
07. வெற்றிலையுடன் சிறிது ஓமத்தைச் சேர்த்து மைய அரைத்து, அதனுடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து அருந்தினால், வயிற்றுப் போக்கு குணமாகும். (667)
08. வெற்றிலையைக் கடிவாயில் வைத்து அழுத்தித் தேய்த்தால் கம்பளிப் பூச்சிக் கடி சரியாகும். (868)
09. வெற்றிலையும் மிளகும் சேர்த்து அரைத்து இரண்டு கிராம் உள்ளுக்குச் சாப்பிட்டால் நாட்பட்ட விஷ கடி குணமாகும். (894)
10. வெற்றிலைக் காம்பு, வெள்ளைப் பூண்டு, வசம்பு, திப்பிலி சம அளவு எடுத்து வெந்நீரில் அரைத்து குழந்தைகளுக்கு உள்ளுக்குக் கொடுத்தால் சளித் தொல்லை நீங்கும். (113)
11. வெற்றிலைக் காம்பினை மென்று வாயில் அதக்கிக் கொண்டால் குமட்டல் நீங்கும். (284) (1918)
12. வெற்றிலைக் காம்பு, இலவங்கம், ஆல அரிசி (ஆலம் பழ விதை) சம அளவு எடுத்து பால் ஊற்றி அரைத்து சூடாக்கி, பொறுக்கும் சூட்டில் நெற்றிப் பொட்டிலும், உச்சந் தலையிலும் பற்றுப் போட்டால் தலைவலி குணமாகும். (402)
========================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam77@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்
மூலிகை,
[தி.பி:2052,விடை(வைகாசி )19]
{02-06-2021}
==================================================
வெற்றிலை |
வெற்றிலை |
வெற்றிலை |
வெற்றிலை |
நன்றி!!
பதிலளிநீக்கு