இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

புதன், 2 ஜூன், 2021

ஜாதிக்காய்

 

        மூலிகைப் பெயர்.........................................சாதிக்காய்

        மாற்றுப் பெயர்................................................குலக்காய்

        தாவரவியல் பெயர்..............................................................

        ஆங்கிலப்பெயர்.................................................NUT MEG

==============================================


01.   சாதிக்காய், சந்தனம், மிளகு ஆகியவை எடுத்து அரைத்து பருக்களின் மேல் தடவி வந்தால், பருக்கள் மறையும்.(1179)

 


02.   சாதிக் காய்ப் பொடியை அளவாக பாலில் கலந்து இரு வேளைகள் சாப்பிட்டு வந்தால் விந்து உற்பத்தி மிகும். ஆனால் அதிகமாகச் சாப்பிட்டால் மயக்கம் வரும்.(301)

 

03.   சாதிக் காயைத் தண்ணீர் விட்டு அரைத்து தொப்புளைச் சுற்றிப் பற்றுப் போட்டால் பேதி நிற்கும்.(722)

 

04.   சாதிக்காய், சாதிப்பத்திரி, கிராம்பு, சிவப்பு அழிஞ்சல் தூள் ஆகியவை சம எடை எடுத்து பொடித்து கால் தேக்கரண்டி எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் தொழு நோய் குணமாகும்.(946)

 

05.   சாதிக் காயுடன் நாயுருவி இலைகளை எடுத்து மை போல் அரைத்து தேமலின் மேல் தடவி வந்தால் தேமல்கள் மறையும்.(1009)

 

06.   சாதிக்காய், பருத்திப் பிஞ்சு, அத்திப் பிஞ்சு, சீரகம் சேர்த்து அரைத்து மோரில் கலந்து கொடுத்து வந்தால் அம்மை நோய் குணமாகும்.(1013)

 

07.   சாதிக்காய்ப் பொடி, பிரண்டை உப்பு இரண்டையும் 5 கிராம் அளவுக்கு எடுத்து நெய்யில் கலந்து சாப்பிட்டு வந்தால் தாது இழப்பு  தீரும்.(1450)

 

08.   சாதிக் காயை அரைத்து கரும்படை மீது சில நாட்கள் தடவி வந்தால் கரும்படை நீங்கிவிடும்.(1024) (2003)


===========================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

 

 ==================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை,

[தி.பி:2052,விடை(வைகாசி )19]

{02-06-2021} 

==================================================


ஜாதிக்காய் கொட்டை

ஜாதிக்காய் மரம்

ஜாதிக்காய் கொட்டை

ஜாதிக்காய் பழம்

ஜாதிக்காய் பழம்

 

 

13 கருத்துகள்:

  1. ஒவ்வொரு மூலிகை குறிப்பிற்கு பின்னார் அடைப்புக்குள் இடம்பெற்றுள்ள எண் எதனை குறிக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    2. சித்த மருத்துவர் ஆறுமுகம் எழுதிய “எளிய சித்த மருத்துவக் குறிப்புகள் என்னும் புத்தகத்தில் உள்ள வரிசை எண்ணைக் குறிக்கிறது. இதன் தொடர்பான பதிவையும் இந்தப் பக்கத்திலேயே இணைக்க முயல்கிறேன்.

      நீக்கு

      நீக்கு
  2. மக்களுக்கு மிகுந்த பயன் அளிக்கும் தகவல் ஐயா. மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வலைப்பூவைத் திறந்து பார்த்துப் படித்து, கருத்துரை எழுதியமைக்கு மிக்க நன்றி !

      நீக்கு
  3. ஜாதிக்காயில் இவ்வளவு பயன்களா !
    மிக்க நன்றி ஐயா !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வலைப்பூவைத் திறந்து பார்த்துப் படித்து, கருத்துரை எழுதியமைக்கு மிக்க நன்றி ! ஓய்வு கிடைக்கையில் பிற மூலிகைகளையும் படித்துப் பாருங்கள் !

      நீக்கு
  4. ஐயா வணக்கம் , தமிழ் மொழியை மட்டும் அல்லாது ஒட்டுமொத்த தமிழ் பண்பாட்டின் மீட்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் அடுத்தக் கட்டத்திற்கு ஒட்டுமொத்த சமூகத்தையும் தாங்கள் சுமந்து செல்வது என்பது அளப்பரிய பணி. தங்களின் பதிவுகளின் மூலமாக நிறைய விடயங்களை கற்றுக்கொண்டு வருகின்றேன். கற்காலம் தொட்டு இந்த கணினி யுகம் வரையில் நமது வாழ்வியல் முறையினை பதிவு செய்வது என்பது அடுத்த தலைமுறைகளுக்கு வரக்கூடிய இடர்பாடுகளுக்கு மிகப்பெரிய தீர்வாக அமையும் என்பதில் மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன். தொடர்ந்து நானும் உங்களோடு பயணிக்கின்றேன். இப்பணி இன்னும் தொடர வாழ்த்துகள் மற்றும் நன்றிகள் ஐயா.

    பதிலளிநீக்கு
  5. ஜாதிக்காய்க்கு "குலக்காய்" என்று ஒரு பெயரும் உள்ளது என்பதனை இன்றுதான் அறிகிறேன்... நன்றி!!!
    https://www.scientificjudgment.com/

    பதிலளிநீக்கு