இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

வெள்ளி, 30 ஏப்ரல், 2021

ஊமத்தை

 

                மூலிகைப் பெயர்:................................ஊமத்தை

                மாற்றுப் பெயர்கள்:.................துர்த்தா, கனகா,

                .........................உன்மத்தம், இந்தியம், டாட்யூரா.

                தாவரவியல் பெயர் :...................DATURA METEL.

                தாவரக்குடும்பம் -............................SOLANACEAE.

               ஆங்கிலப் பெயர்.....................................DHATURA

 ==================================================


01. ஊமத்தையானது பற்களுள்ள அகன்ற இலைகளையும், வாயகன்ற நீண்ட குழல் வடிவப் புனல் போன்ற ர்களையும் மேற்புறத்தில் முள்நிறைந்த காயையும் உடைய குறுஞ்செடிகள். மலர்கள் வெள்ளை, மஞ்சள், கருஞ்சிவப்பு ஆகிய நிங்களில் இருக்கும்

 

02. ஊமத்தையில் பயன்தரும் பாகங்கள் -: செடியின் எல்லா பாகங்களும் மருத்துவப் பயன் உடையவை.

 

03. ஊமத்தையின் வகைகள்.............. -வெள்ளை ஊமத்தை, பொன்னூமத்தை, கருஊமத்தை

 

04. ஊமத்தையின் பயன்கள் -: பொதுவாக நோய் தணிப்பானாகவும், சிறப்பாக இசிவு நோய் தணிப்பானாகவும் செயற்படும். அறுவை சிகிச்சைக்கும், மகப் பேறுக்கும் மயக்க மருந்தாகவும் பயன்படுகிறது.

 

05. ஊமத்தை இலையை நல்லெண்ணையில் வதக்கிக் கட்ட அகண்ட வாயு குணமாகும் (202)

 

06. ஊமத்தை இலையை நல்லெண்ணெயில் வதக்கிக் கட்ட வாதவலி, மூட்டு வீக்கம், வாயுக் கட்டிகள், அண்ட வாயு, தாய்ப் பால் கட்டிக்கொண்டு வலித்தல், நெரிகட்டுதல், ஆகியவை குணமடையும்.

 

07. ஊமத்தை இலைச்சாற்றுடன் சமனளவு  நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி, இளஞ் சூட்டில் 2 - 3  துளி காதில் விடச் சீதளத்தால் வந்த காது வலி தீரும்.

 

08. ஊமத்தை இலையை நீர் விடாது அரைத்து, நல்லெண்ணெயில் வதக்கி நாய் கடிப் புண்ணில் கட்ட ஆறும். மூன்று துளிகள்  சாறு எடுத்து வெல்லம் கலந்து காலை, மாலை 3 நாள் மட்டும் கொடுக்க நஞ்சு தீரும். கடும் பத்தியம்- பகலில் தயிர் சோறும் இரவில் பால் சோறும் உப்பில்லாமல் சாப்பிடவும்.

 

09. ஊமத்தை இலைச்சாற்றைச் சமளவு தேங்காய் எண்ணெயில் காய்ச்சி சிறிதளவு மயில் துத்தம் கலந்து வெளிப்பூச்சாகப் பயன்படுத்த ரணம், சதைவளரும் புண் புரைகள், தீரும்.

 

10. ஊமத்தைப் பிஞ்சை அவரவர் உமிழ் நீரில் மைய அரைத்துத் தடவ புழுவெட்டு தீரும். புழு இறந்து, முடி வளரும்.

 

11. ஊமத்தை இலை, பூ, விதை மூன்றையும் பாலில் பிட்டவியலாய் அவித்து உலர்த்தி, தூள் செய்து (ஒன்றிரண்டாய்) பீடி போல் செய்து புகைத்தால்  ஆஸ்துமா, மூச்சுத் திணல் உடனே குறையும்.

 

12. ஊமத்தை மயக்கத்தை உண்டாக்கும். வித்தன்மையுடையது.     இதன் விம் முறிய தாமரைக்கிழங்கை அரைத்து பாலில் இரு வேளை மூன்று நாள், கொடுக்கலாம்.

 

13. ஊமத்தங் காய் பில்லி, சூன்யம் ஆகியவற்றை அகற்றும், முறிக்கும்.


14. ஊமத்தம் பூவை இரவு தண்ணீரில் போட்டு ஊற வைக்கவும். மறு நாள் காலை தலைக்குத் தேய்த்துக் குளிக்க வைக்கவும். 5-7 நாள் இவ்வாறு குளிக்க வைத்தால் இந்தப் பிரமை உன்மத்தம், பைத்தியம் ஆகியவை குணமாகிவிடும்.


15. ஊமத்தம் இலைச்சாறு 500 மி,லி. தேங்காய் எண்ணெய் 500 மி.லி. கலந்து மயில் துத்தம் 30 கிராம் போட்டு சுண்டக் காய்ச்சி சாறு வடிக்கவும். இதனை அனைத்து வகையான புண்களுக்கும் மேல் பூச்சாக இட குணமடையும். மேகப் புண், நீரிழிவுப்புண், றாத குழிப்புண், வளர் புண் குணமடையும்.

 

16. ஊமத்தங்  காயும் விதையும், மருதாணிப்பூவும் சேர்த்து  உலர்த்தி, அந்தத் தூளைச் சுருட்டாகச் செய்து  புகைக்க பேய்க் குணம்

   விலகும்.

 

17. ஊமத்தம் பூவை எடுத்துச் சாறு பிழிந்து ஒரிரு துளிகள் காதில் விட்டால் காது வலி தீரும்.(053)

 

18. ஊமத்தம் பிஞ்சை உமிழ் நீர் விட்டு அரைத்து தலையில் புழு வெட்டு உள்ள இடத்தில் தடவி வந்தால் புழுக்கள் மடிந்து முடி வளரும். (396) (930)(1802)

 

19. ஊமத்தை இலையை நல்லெண்ணையில் வதக்கி கட்டி வந்தால் அகண்ட வாயு குணமாகும்.(202) வாதவலி, மூட்டு வலி தீரும். (1738)


===========================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்,  பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

  சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க ! 

===============================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,மேழம்(சித்திரை)17]

{30-04-2021}

 

===============================================

ஊமத்தை

ஊமத்தை





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக