இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

ஞாயிறு, 23 மே, 2021

தொட்டாற் சுருங்கி

 

         மூலிகைப் பெயர்.............................தொட்டாற் சுருங்கி

         மாற்றுப் பெயர்கள்...........:.தொட்டால் வாடி, இலச்சி,

         .............................இலட்சுமிமூலிகை, இலச்சகி கோணி

         .............................................................தொட்டாற் சிணுங்கி

         தாவரவியல் பெயர்................................MIMOSA PUDICA

         ஆங்கிலப் பெயர்......................................HUMBLE PLANT

         சுவை......................................................இனிப்பு, துவர்ப்பு

         தன்மை.....................................................................வெப்பம்

 

 

=================================================

 

 

01.  தொட்டாற் சுருங்கி இலையைக் களிமண்ணுடன் அரைத்துப் பற்றிட வாத வீக்கம் கரையும். கீல்வாதம் கரையும்.

 

02.  தொட்டாற் சுருங்கி  வேரையும் இலையையும் சம அளவில் எடுத்து உலர்த்தி துணியில் சலித்து வைக்கவும், இந்த சூரணம் 10-15 கிராம் பசும்பாலில் குடிக்க சிறு நீர் பற்றிய நோய்கள், மூலச்சூடு, ஆசனக்கடுப்பு தீரும்.

 

03.  உடம்பில் சூடு பிடித்தால் சிறுநீர்த் தாரை எரியும். இதற்கு தொட்டற் சுருங்கி  இலையை அரைத்து 5 - 6 நாள் 10 கிராம் காலை தயிரில் சாப்பிட வேண்டும். சிறுநீர் எரிச்சல் குணமாகும்.

 

04.  ஆண்மை பெருக, தொட்டாற் சுருங்கி இலையை அரைத்து,  இரவு பாலில் 15 கிராம் கலந்து சாப்பிட வேண்டும்.

 

05.  தொட்டாற் சுருங்கி இலை ஒரு பிடி அரைத்து எலுமிச்சையளவு மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட வயிற்றுக் கடுப்பு குணமாகும். உடல் குளிர்ச்சியாகும் . வயிற்றுப்புண்ணும் ஆறும்.

 

06.  ஒரு பலம் தொட்டாற்சுருங்கி வேரை பஞ்சுபோல் தட்டி ஒரு மண் குடுவையில் போட்டு கால் லிட்டர் நீர் விட்டு அடுப்பிலேற்றி நான்கில் ஒரு பங்காகக் காய்ச்சி, வடிகட்டி வேளைக்கு கால் அல்லது அரை அவுன்ஸ் வீதம் (1 Ounce = 28 m.l.) தினம் 2-3 வேளை கொடுக்கவும். அல்லது ஒரு பங்கு இலைக்கு 10 மடங்கு கொதிக்கின்ற நீர் விட்டு ஆறின பின் வடிகட்டி வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் தினம் 2-3 வேளை கொடுக்கவும் . இவற்றால் நீர் அடைப்பு, கல்லடைப்பு தீரும்.

 

 

07.  தொட்டாற் சுருங்கி இலையையும் வேரையும் உலர்த்தி இடித்துச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு பசுவின் பாலில் போட்டுக் கொடுத்துக் கொண்டு வர மூலம் குணமாகும்.

 

08.  தொட்டாற் சுருங்கி இலைச் சாற்றைப் பவுத்திர மூல ரணங்களுக்கு ஆசனத்தில் தடவி வர ஆறும்.

 

09.  விரை வாதம், கை,கால் மூட்டுக்களின் வீக்கம் இவைகட்கு தொட்டாற் சுருங்கி இலைகளை அரைத்து வைத்துக் கட்ட குணமாகும்.

 

10.  தொட்டாற் சுருங்கி இலைச் சாற்றைப் பஞ்சில் தோய்த்து ஆறாத ரணங்களுக்கு உட் செலுத்தி வைக்க ஆறிவரும்.

 

11.  தொட்டாற் சுருங்கி இலையை ஒரு பெரிய மண் குடத்தில் போட்டு நீர் விட்டு வேக வைத்து இடுப்பிற்குத் தாளும் படியான சூட்டில் தாரையாக விட இடுப்பு வலி நீங்கும்.

 

12.  தொட்டாற் சுருங்கியின் வேர் காமம் பெருக்கும். வாதத் தடிப்பைச் சரியாக்கும்.

 

13.  தொட்டாற் சுருங்கி முழுச் செடியை எடுத்து அரைத்து சாறு எடுத்து தினமும் இரு முறை வெட்டுக் காயம் மீது தடவி வந்தால் காயம் குணமாகும்.

 

14.  தொட்டாற் சுருங்கி இலையை அரைத்து, பசையாக்கித் தடவி வந்தால் கை, கால், மூட்டு வீக்கம் குணமாகும்.

 

15.  தொட்டாற் சுருங்கி இலைச் சாறு எடுத்து தடவினால் ஒவ்வாமை, தோல் தடிப்புகள் சரியாகும்

 

16.  தொட்டாற் சுருங்கி முழுச் செடியையும் இடித்து சாறு எடுத்து 4 தேக்கரண்டி சாறுடன் 2 தேக்கரண்டி தேன் கலந்து தினமும் 3 வேளை குடித்து வந்தால் உதிரப் போக்கு கட்டுப் படும்.

 

17.  தொட்டாற் சுருங்கி இலைகளை எடுத்து சுத்தம் செய்து மைய அரைத்து, அரைத்த விழுதில் ஒரு கொட்டைப் பாக்கு அளவு எடுத்து தயிரில் கலந்து  ஓரிரு வேளைகள் குடித்தால் வயிற்றுக் கடுப்பு குணமாகும். (715)

 

18.  தொட்டாற் சுருங்கி வேரை எடுத்து சுத்தம் செய்து நசுக்கி, பிழிந்து சாறு எடுத்து தேங்காய்ப் பால் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா  குணமாகும்.  (1065)


=======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !


==================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,விடை(வைகாசி )09]

{23-05-2021} 

==================================================


தொட்டாற் சுருங்கி

தொட்டாற் சுருங்கி

தொட்டாற் சுருங்கி

தொட்டாற் சுருங்கி

தொட்டாற் சுருங்கி



தொட்டாற் சுருங்கி




 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக