இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

ஞாயிறு, 23 மே, 2021

நஞ்சறுப்பான்

 

        மூலிகைப் பெயர்........................................நஞ்சறுப்பான்

        மாற்றுப் பெயர்................கொடிப்பாலை, கரிப்பாலை

        ......................கொண்டைச்சானி, அந்தமூல், காகித்தம்

        ...................நஞ்சு முறிச்சான் கொடி. கழுதைப்பாலை

        தாவரவியல் பெயர்................................................................

        ஆங்கிலப்பெயர்.....................TYLOPHORA ASTHMATICA

 ==================================================

01.      முட்டை வடிவான இலைகளுடன் சுற்றிப் படரும் கொடி தான் நஞ்சறுப்பான் மூலிகை.

 

02.      நஞ்சறுப்பானின் பூக்கள் வெளிறிய மஞ்சள் நிறத்துடன், உள் பக்கம் இளஞ்சிவப்பாக இருக்கும். சிறிய கொத்துகளில் காணப்படும்.

 

03.      நஞ்சறுப்பான் கொடியில் பழங்கள் இருக்கும்.

 

04.      நஞ்சறுப்பான் கொடியானது கரிப்பாலை, நஞ்சுமுறிச்சான் கொடி, கொடிப்பாலை, அந்தமூல், காகித்தம் ஆகிய மாற்றுப் பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.

 

05.      நஞ்சறுப்பான் இலை, வேர் ஆகியவை வேர்வையைப் பெருக்கும். விஷ நச்சுகளை முறிக்கும்.

 

06.      நஞ்சறுப்பான் கொடியின் உலர்ந்த வேர் வயிற்றுப் போக்கினைக் கட்டுப்படுத்தும். வேரைத் தண்ணீரில் போட்டு காய்ச்சி வடித்த சாறு மூச்சுக் குழல் அழற்சியைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

 

07.      நஞ்சறுப்பான் கொடியின்  இலைகளை நிழலில் உலர்த்தி தூள் செய்து கால் / அரை கிராம் அளவில் எடுத்து தேனில் குழைத்து தினமும் மூன்று வேளைகள் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.

 

08.      நஞ்சறுப்பான் இலை சூரணம் கால் தேக்கரண்டி அளவில் தேனில் குழைத்து உள்ளுக்குக் கொடுத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் கக்குவான் இருமல் குணமாகும்.

 

09.      நஞ்சறுப்பான்  இலைச் சூரணம் சிறிது எடுத்து ஒரு தேக்கரண்டி தேனில் கலந்து கொடுத்து வந்தால் கக்குவான் இருமல் குணமாகும்.    (129)

 

10.      நஞ்சறுப்பான் கொடி இலையப் பறித்து அரைத்து கடி வாயில் கட்டினால் தேள் கடி போன்ற கடி விஷம் முறியும்.   (906)

 

11.       நஞ்சறுப்பான் இலையுடன் மிளகு சேர்த்து தின்று வந்தால் நாளடைவில் ஆஸ்துமா குணமாகும்.   (1064)

 

12.       நஞ்சறுப்பான் இலைப் பொடி ஒரு கிராம் எடுத்து வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் வியர்வை பெருகும். சளியைப் போக்கும்.  (1707)

 =======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

===================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,விடை(வைகாசி )09]

{23-05-2021} 

===================================================


நஞ்சறுப்பான்

நஞ்சறுப்பான்

நஞ்சறுப்பான்

நஞ்சறுப்பான்

நஞ்சறுப்பான்



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக