மூலிகைப் பெயர்........................................................தேன்
மாற்றுப் பெயர்........................................................................
தாவரவியல் பெயர்...............................................................
ஆங்கிலப் பெயர்........................................................HONEY
01. உலகில் கெட்டுப் போகாத ஒரே உணவு தேன். அதில் மருத்துவக் குணங்கள் அதிகம். (Arasi)
02. நமது அன்றாட வாழ்வில் தேனுடன் இலவங்கப் பட்டை சேர்த்துப் பயன்படுத்தினால் நோய்கள் நம்மைத் தாக்காமல் ஆரோக்கியமாக வாழலாம் (Arasi)
03. தேன் சில நேரங்களில் உறைந்து விடும். அப்போது சூடான தண்ணீர் கொண்ட பாத்திரத்தில் வைத்தால் இளகி, மீண்டும்பழைய நிலைக்கு வந்துவிடும். அடுப்பில் நேரடியாக சூடுபடுத்தக் கூடாது. சத்துக்கள் குறைந்துவிடும். (Arasi)
04. இதய நோய்:- தினமும் 2 தேக்கரண்டி தேனில், ஒரு தேக்கரண்டி இலவங்கப் பட்டைப் பொடியைக் கலந்து குழைத்து காலை உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், இதய நோய் நெருங்காது. ஏற்கனவே மாரடைப்பு வந்தவர்கள் சாப்பிட்டு வந்தால் மீண்டும் மாரடைப்பு வராது. (Arasi)
05. இதய நோய்ப் பிரச்சினையால் சுவாசம், இதயத் துடிப்பு பலவீனமாக இருக்கும். அவர்களுக்கு தேன் – இலவங்கப் பட்டைப் பொடி அரிய வரம். (Arasi)
06. மூட்டு வலி – முடக்கு வாதம்:- இந்த நோய்களால் நடக்க முடியாமல் சிரமப் படுபவர்கள் தினமும் காலை – இரவு நேரத்தில் ஒரு தம்ளர் வெந்நீரில் 2 தேக்கரண்டி தேன், சின்ன தேக்கரண்டி இலவங்கப் பொடியைக் கலந்து குடித்து வந்தால் ஒரே வாரத்தில் வலி குறையும். தொடர்ந்து எடுத்துக் கொண்டால், எவ்வளவு கடுமையான பாதிப்பாக இருந்தாலும் சரியாகும். (Arasi)
07. சிறுநீர்த் தாரை தொற்று:- இத்தகைய பாதிப்பால் சிரமப்படுபவர்கள் 2 தேக்கரண்டி இலவங்கப் பொடி, ஒரு தேக்கரண்டி தேன் என்ற விகித்த்தில் வ்ந்து வெதுப்பான நீரில் கலந்து குடித்து வந்தால், சிறுநீர்த் தாரையில் உள்ள கிருமிகள் அழியும். (Arasi)
08. (ஆதாரம் என். அரசி
12-11-2017 நாளிட்ட இராணி வார இதழில் எழுதிய கட்டுரை.)
09. தேன் (சுத்தமான தேன் ) ஒரு தேக்கரண்டி எடுத்து அரை மணி நேரத்திற்கு ஒரு முறை அருந்தி வந்தால் தலைவலி தீரும். (411)
10. தேனில் உள்ள சத்துகள் வருமாறு:-
% Daily Value* | |
*Per cent Daily Values are based on a 2,000 calorie diet. Your daily values may be higher or lower depending on your calorie needs. |
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam77@gmail.com]
ஆட்சியர்,
தமிழ் மூலிகை வலைப்பூ,
[தி.பி:2052,விடை(வைகாசி
)09]
{23-05-2021}
==================================================
தேன் |
தேன் |
தேன் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக