மூலிகைப் பெயர்....................................தேட்கொடுக்குச் செடி
மாற்றுப் பெயர் ........................................................:-xxxxxxxxxxxxxxxxx
தாவரவியல் பெயர் ............................HELIOTROPIUM
INDIGUM
ஆங்கிலப் பெயர்................................................................HELIOTROPE
சுவை .................................................................................................:- கைப்பு
தன்மை........................................................................................
:- வெப்பம்
=======================================================
01. பூஞ்சைக் காளான்களால் ஏற்படும் நோயை போக்கும். தேள்கொடுக்கு
செடியின் காய்கள் தேள் கொடுக்கு போன்று இருக்கும்.
02. இரு கொடுக்குகளை கொண்டது. இது புலி நகத்தை போன்று வளைந்து
இருக்கும்.
03. தேள் கொடுக்கு செடி நுண் கிருமிகளை அழிக்க கூடியது.
04. தேள்கொடுக்குச் செடியின் இலையை பயன்படுத்தி தீக்காயங்களுக்கான மேல்பூச்சு மருந்து
தயாரிக்கலாம். இலைப்பசையுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து தைலமாக காய்ச்சி
பயன்படுத்தவும். இது தீக்காயம், ஆறாத சீழ் பிடித்த புண்களைக் குணமாக்கும்.
05. விஷக்கடிக்கு மேல் பூச்சாக பயன்படுத்தலாம். தேள்கொடுக்கு
செடி, காயங்களை
ஆற்றக்கூடிய தன்மை கொண்டது. வெட்டுக்காயம்
சரியாகும். தீக்காயம் வடு இல்லாமல் ஆறும்.
06. இலையைப் பயன்படுத்தி காசநோய் கிருமிகளால் ஏற்படும் கட்டிகளைச் சரிசெய்யலாம்.
07. தேள்கொடுக்குச் செடியின் துளிர் இலைகள், திப்பிலிப் பொடி, மஞ்சள் பொடி, தேன் எடுத்துக்கொள்ளவும். 2 அல்லது 3 இலைகளுடன்
சிறிது திப்பிலி, மஞ்சள் பொடி தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
பின்னர் வடிக்கட்டி தேன் சேர்த்து குடிக்கலாம். இதனால் காசநோய்
கட்டிகள் சரியாகும்.
08. தொண்டை வலி இருக்கும்போது 4 நாட்கள்
எடுத்து வரும்போது வலி குணமாகும்.
09. ஊதா நிறப்பூக்களை பெற்றிருக்கும் தேள்கொடுக்கு செடி
விஷமுறிவாகிறது
10. .கழுத்து பகுதியில் திரண்டிருக்கும் கட்டிகள் கரையும். நெறி
கட்டும் இடங்களில் இலையை பூசுவதால் வீக்கம் சரியாகும். தேள்கொடுக்குச் செடியின் இலையானது வலி நிவாரணியாகவும், வீக்கத்தை குறைக்க
கூடியதாகவும் இருக்கிறது.
11. பெயர் தெரியாத பலவகையான பூச்சிகள் கடித்து காயம்
ஏற்படுத்துகின்றன. இதனால் ஏற்படும் அரிப்பு காணாக்கடி என்று அழைக்கப்படுகிறது.
12. காணாக்கடியால் தோன்றும் ஒவ்வாமையை
நீக்கி தோலுக்குப் பொலிவைத் தரும் அற்புத மூலிகை தேள்கொடுக்கு.
13. ஹீலியோடிரோபியம் இன்டிகம் என்ற
தாவரவியல் பெயர் கொண்ட போராஜினேசியே குடும்பத்தைச் சார்ந்த தேள்கொடுக்கு செடியில்
இன்டிசின், எகினேட்டின், சுபினின், ஹீலியூரின், ஹீலியோட்ரின், லியோடிரின், லேசியோகார்பின் போன்ற ஆல்கலாய்டுகள்
ஏராளமாக காணப்படுகின்றன.
14. இவை பூச்சிக்கடியால் தோன்றும் விஷத்தை முறிக்கும் தன்மை உடையன.
15. தேள்கொடுக்கில் சிறு தேள்கொடுக்கு, பெருந்தேள்கொடுக்கு என இரண்டு
வகைகள் உள்ளன. இவை இரண்டும் ஒரே மருத்துவ குணத்தை உடையதாக கருதப்படுகிறது.
16. தேள்கொடுக்கு இலை மற்றும்
பூங்கொத்துகளை உலர்த்தி, ஒன்றிரண்டாக இடித்து வைத்துக்கொள்ள வேண்டும். 20 கிராம் பொடியை 500 மிலி நீரில் போட்டு கொதிக்கவைத்து 100 மிலியாக சுண்டியபின்பு வடிகட்டி
காலை மற்றும் மாலை உணவுக்கு முன்பு குடித்துவர வேண்டும்.
17. தேள்கொடுக்கு இலையை கசக்கி பூச்சிகடித்த இடங்களிலும், தடிப்புள்ள இடங்களிலும் தடவிவர
தடிப்பு மாறும்.
18. நாட்டுப்புற மருத்துவத்தில்
தேள்கொடுக்கு செடியின் இலைகள் தேள்கடி விஷத்தை நீக்க
பயன்படுத்தப்படுகின்றன. தேள் கடித்த இடத்திலுள்ள தோல் பகுதியில் இதன் இலைச்சாறை
பிழிந்து தடவுவது வழக்கமாக உள்ளது.
19. சிறு தேள்கொடுக்கு இலையை அரைத்துப் பருக்களின் மீது பற்றுப் போட்டு வந்தால் அவை விரைவில் மறைந்து
விடும். (859)
20. சிறு தேள்கொடுக்கு இலையை பிழிந்து சாறு எடுத்து சொறி, சிரங்கு, புண் ஆகிவற்றுக்குப் பற்றுப் போடலாம். (889)
=======================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam77@gmail.com]
ஆட்சியர்,
தமிழ் மூலிகை வலைப்பூ,
[தி.பி:2052,விடை(வைகாசி
)09]
{23-05-2021}
==================================================
சிறு தேள் கொடுக்குச் செடி |
சிறு தேள் கொடுக்குச் செடி |
சிறு தேள் கொடுக்குச் செடி |
சிறு தேள் கொடுக்குச் செடி |
பெருந் தேள் கொடுக்குச் செடி |
சிறு தேள் கொடுக்குச் செடி |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக