இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

ஞாயிறு, 23 மே, 2021

தென்னை

 

    மூலிகைப் பெயர்..................................................தென்னை

    மாற்றுப் பெயர்.............................................................தெங்கு

    தாவரவியல் பெயர்...................................................................

    ஆங்கிலப் பெயர்...........................................COCONUT TREE

 

==================================================

 

01.   இளநீருக்கு உடல் வெப்பத்தைக் குறைக்கும் குணமுண்டு. இரவில் நெடுநேரம் கண்விழித்து பணி புரிபவர்களுக்கு வயிற்று வலி வருவதுண்டு. காலையில் எழுந்ததும் ஒரு இளநீரை வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிற்று வலி தீரும்.  (727)

 

02.   இளநீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தொடர்ந்து  சாப்பிட்டு வந்தால் குடல் புண்கள் ஆறும். உடல் சூடு தணியும்.  (786)

 

03.   இளநீரை ஒரு குவளையில் பிடித்து இரண்டு தேக்கரண்டி தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் குடல் புண்கள் ஆறும். சகல் சரும நோய்களும் குணமாகும்.( சளி இருந்தால் இளநீர் குடிக்கலாகாது.  (1002)

 

04.   தென்னம் பூவை வதக்கி மார்பில் கட்டி வந்தால் தாய்ப் பால் சுரப்பு நிற்கும்.  (050)

 

05.   தென்னம் பூவை வாயில் இட்டு மென்று தின்று வந்தால் குடல் புண்கள் போன்ற உள்ரணங்கள் ஆறும்.  (293) (461)

 

06.   தென்னம் பூக்களை உரலில் இட்டு இடித்து சாறு எடுக்க வேண்டும். நாயுருவிச் செடியைப் பிடுங்கி சுத்தம் செய்து, அம்மியில் வைத்து அரைக்க வேண்டும். பின்பு இரண்டையும் ஒன்றாகக் கலந்து நெல்லிக் காயளவு எடுத்து காலை மாலை என  இரு வேளைகள் சில நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும். இதன்மூலம் பெரும்பாடு குணமாகும்.  (601)

 

07.   தென்னம் பூவை வாயில் இட்டு மென்று தின்று வந்தால், அரையாப்புக் கட்டி குணமாகும்.  (1382)

 

08.   தென்னம் பூவை வாயில் இட்டு மென்றுதின்று வந்தால் இரத்த வாந்தி குணமாகும். உட்சுரம் தீரும்  .(1409)

 

09.   தென்னம் பாளையில் (வெடிக்காத பாளை) உள்ள பிஞ்சுகளை எடுத்து பசும் பால் விட்டு அரைத்து வேளைக்கு 2 கிராம் வீதம் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.(1420) தாது மிடுப்பு உண்டாகும்.(1435) விரைவாதம் நீங்கும்.   (1458)

 

10.   தென்னை ஓலையைத் தணலில் போட்டுக் கருக்கி, பட்ட்ப் போல் தூள் செய்து, தேங்காய் எண்ணெயில் குழப்பிப் பூசி வந்தால் மூன்றே நாளில் செருப்புக் கடி குணமாகும்.  (422)

 

11.   தேங்காய்ப் பாலுடன் தேன் கலந்து குடித்தால் வாய்ப் புண்கள்  குணமாகும்.   (216) (1163)

 

12.   தேங்காய்ப் பால் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும்; தாது விருத்தியாகும்.   (509)

 

13.   தேங்காய்த் துண்டு  ஒன்று எடுத்து மென்று தின்றால் நட்டுவாக்காளி விஷம் முறிந்து விடும்.   (897)

 

14.   தேங்காய்ச் சில்லு இரண்டு எடுத்து தினசரி தின்று வந்தால் மூளையில் புண் இருந்தால் அது கொஞ்சம் கொஞ்சமாக ஆறிவிடும்.   (970)

 

15.   தேங்காய் நன்கு முற்றியதாக ஒன்று எடுத்து, அதைத் துருவி விளக்கெண்னெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டில் இரவில் கட்டி வந்தால் விரை வீக்கம் குணமாகும்.  (1459)

 

16.   தேங்காயைத் துருவி, வதக்கி, மார்பில் கட்டி வந்தால், தாய்ப் பால் சுரப்பு நிற்கும்.  (1460)

 

17.   தேங்காயைத் துருவி, பால் எடுத்து, அந்தப் பாலை வாயில் சிறிது ஊற்றி, சற்று நேரம் வாய்க்குள்ளேயே வைத்திருந்து, கொப்பளித்து, பின்பு குடித்து வந்தால் நாக்குப் புண்கள் குணமாகும். (1461)

 

18.   தேங்காய் முற்றியதாக ஒன்று எடுத்து, துருவி, சிறிது விளக்கெண்னெய் விட்டு வதக்கி, இளஞ்சூட்டில் இரவில் கட்டி வந்தால் அண்டவாயு ( விரை வாயு ) தீரும்.  (1735)

 

19.   தேங்காய் எண்ணெயில் கற்பூரம் சேர்த்து, சுட வைத்து, நெஞ்சில் தடவி வந்தால், நெஞ்சு வலி குணமாகும்.   (1823)

=======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

===================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,விடை(வைகாசி )09]

{23-05-2021} 

===================================================

இளநீர்

தேங்காய்

இளநீர்

தென்னம் பூ



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக