மூலிகைப் பெயர்.........................ஓரிதழ் தாமரை
மாற்றுப் பெயர்கள்.....................................................
தாவரவியல் பெயர்...................................................
ஆங்கிலப் பெயர்............................Hybanthus Plant
============================================
01.
ஓரிதழ்
தாமரை இலைகளை அரைக் கைப்பிடி எடுத்து விடிவதற்கு
முன் அதை மென்று தின்று பால் அருந்தி வந்தால் ஆண்மைக் குறைவு
சரியாகும்.(471)
02.
ஓரிதழ்
தாமரையுடன் சம அளவு கீழாநெல்லி சேர்த்து நன்கு அரைத்து ஒரு சுண்டைக் காயளவு தினந்தோறும் விடிவதற்கு முன் சாப்பிட்டு வந்தால் இளமையில் தோன்றும் வயோதிகம் விலகும்.(474)
03.
ஓரிதழ்
தாமரையைத் தாது கல்ப லேகியத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், நரை, திரை, மூப்பு இன்றி இரத்த ஓட்டம் ஒரே சீராகும் (953) (1889)
04.
ஓரிதழ்
தாமரையைப் பொடி செய்து சம அளவு சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் இதயம் வலுவடையும்.(974)
05.
ஓரிதழ்
தாமரை, விஷ்ணுகிராந்தி இலை, கீழாநெல்லி ஆகியவை சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி அரைத்து கால் கிராம் அளவுக்கு இரவு உணவுக்குமுன் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி சரியாகும்.(1550) உடல் பலம் பெறும் (1562)
06.
ஓரிதழ்
தாமரைப் பூவும் கீழாநெல்லியும் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் வாலிபத்தில் வயோதிகம்
ஏற்படுவதைச் சரிப்படுத்தலாம்.(780)
===========================================================
மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்” என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ் அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள் மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !
=============================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam77@gmail.com]
ஆட்சியர்,
தமிழ் மூலிகை வலைப்பூ,
[தி.பி:2052,மேழம்(சித்திரை)17]
{30-04-2021}
=============================================
ஓரிதழ் தாமரை |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக