இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

வெள்ளி, 30 ஏப்ரல், 2021

ஓமவல்லி.

 

 

      மூலிகைப் பெயர்...............................................ஓமவல்லி

      மாற்றுப் பெயர்கள்:..........கற்பூரவள்ளி, பாசானபேதி

      சமஸ்கிருதப் பெயர்.....................................இந்து பரணி

      தாவரவியல் பெயர்................ANISOCHILUS CARNONUS

      ஆங்கிலப் பெயர்...................THICK LEAVED LAVENDER

      தன்மை...........................கசப்புச் சுவை, காரத் தன்மை


=================================================

 

01.      ஓமவல்லிக்கு கற்பூரவல்லி என்றும் ஒரு பெயருண்டு. இதற்கு மணமும் மருத்துவ குணமும் அதிகம். ஓமத்தினுடைய வாசனையை உடையதாலோ என்னவோ இதற்கு ஓமவல்லி என்று பெயர் வந்தது. (Harish)

 

02.      இலைகள் தடிப்பாகவும், தண்டுகளில் சுணை இழைகளும் இருக்கும். இச்செடியின் இலை, தண்டு ஆகியவை மருத்துக் குணம் உடையவை. (Harish)

 

03.      ஓமவல்லி கோழையை அகற்றி, வியர்வையைப் பெருக்கும். ஈரலைப் பலப் படுத்தும். புற்று நோயைத் தடுக்கும். (Harish)

 

04.      சிறு குழந்தைகளுக்கு தலைக்குத் தண்ணீர் ஊற்றினால் சிலருக்கு சளி பிடித்துக் கொள்ளும். தலைக்குத் தணீர் ஊற்றியவுடன் ஓமவல்லி இலைகள் இரண்டு அல்லது மூன்று எடுத்துச் சாறு பிழிந்து தாய்ப்பாலுடன் கலந்து ஒரு பாலாடை குழந்தைக்குப் புகட்டி விட்டால் சளி பிடிக்காது. (Harish)

 

05.      ஓமவல்லி இலைச் சாற்றை ஒரு சங்களவு எடுத்து கோரோசனை சேர்த்து குழந்தைகளுக்குப் புகட்டி விட்டால் மாந்தம், செரியாமை, இருமல் ஆகியவை தீரும். (Harish)

 

06.      இரண்டு தேக்கரண்டி ஓமவல்லிச் சாற்றுடன் நான்கு தேக்கரண்டி தேன் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்தால் மார்புச் சளி நீங்கும். (Harish)

 

07.      இலைச் சாற்றை சுண்டக் காய்ச்சி, குழம்புப் பதத்தில் எடுத்து 4 முதல் 8 கிராம் அளவுக்கு எடுத்து மார்பில் தடவினால் வியர்வையைப் பெருக்கி சுரத்தைக் குறைக்கும். (Harish)

 

08.      இரண்டு மூன்று இலைகளை எடுத்துக் கசாயம் செய்து 30 – 60 மி.லி அளவுக்கு உள்ளுக்குச் சாப்பிட்டு வந்தால் இருமல் நீங்கும். (Harish)

 

09.      நான்கு ஐந்து ஓமவல்லி இலைகளை எடுத்து ஒரு லிட்டர் தண்ணீர் விட்டுக் காய்ச்சிக் கொதிக்க  வைத்து, அந்த நீரைப் பருகி வந்தால் சளித் தொல்லை இராது. (Harish)

 

10.      ஓமவல்லி இலைச் சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை சேர்த்துச் சூடாக்கி தலைக்குப் பற்றுப் போட்டால் தலைவலி நீங்கும். (Harish)

 

11.      ஓமவல்லி இலைகளைத் தண்ணீரில்  போட்டுக் கொதிக்க வைத்து, அதிலிடுந்து வரும் ஆவியை முகர்வதால் தலைபாரம் நீங்கும். (Harish)

 

12.      வயிறு உப்புசத்திற்கு ஓமவல்லி இலைகளைக் கழுவி வாயில் போட்டு மென்று சாறினை விழுங்கி வந்தால் உப்புசம் சரியாகும். (Harish)

 

13.      ஓமவல்லி இலை, துளசி இலை, புதினா இலை, ஓமம் ஆகியவற்றை எடுத்து சற்று இடித்து, தண்ணீர் சேர்த்து கசாயம் செய்து 60 – 100 மி.லி அளவுக்கு பருகினால் வயிற்று வலி, செரியாமை நீங்கும். (Harish)

 

14.      ஓமவல்லி இலை, பூண்டு, சீரகம், பெருங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து ரசமாகச்  செய்து உணவுடன் உட்கொண்டால் செரியாமை நீங்கும். (Harish)

 

15.      (ஆதாரம் :- வேலூர், ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ் மருத்துவமனை, முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ. ஹரிஷ் அன்புச் செல்வன் M.D.(s) அவர்கள் 18-03-2017 நாளிட்ட தினமலர் நாளிதழின் இணைப்பான பெண்கள் மலரில் எழுதிய கட்டுரை.)

 

16.   ஓமவல்லி இலைகள் மூன்றினை எடுத்து காலையில் மென்று தின்று, ஒரு தம்ளர் வெந்நீர் அருந்தினால்  இதயவலி நீங்கும். மாலையில் கீரையாக உண்டால் சளித் தொல்லையும் நீங்கும்.(109)

 

17.   ஓமவல்லி இலைச் சாற்றுடன் நல்லெண்ணெய் கலந்து நெற்றியில் பற்றுப் போட்டால் தலைவலி நீங்கும். சூடும் தணியும்.(397)

 

18.   ஓமவல்லி இலையின் காம்புகளை எடுத்து நீர் சேர்த்துக் கசாயம் வைத்துக் குடித்தால் சளிக் காய்ச்சல் குணமாகும்.(196) (1694)

 

19.   கற்பூரவல்லி இலைச் சாற்றை சிறிது சூடாக்கி நெற்றியில் பூசி வந்தால் மூக்குச் சளி (நீர்க்கோவை) உடனே சரியாகும். (116)


===========================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்,  பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

  சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

=================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,மேழம்(சித்திரை)17]

{30-04-2021} 

=================================================


ஓமவல்லி

ஓமவல்லி



 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக