இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

வெள்ளி, 30 ஏப்ரல், 2021

கசகசா.

 

 

                 மூலிகைப் பெயர்.....................................கசகசா

                 மாற்றுப் பெயர்........................................................

                 தாவரவியல் பெயர்.......................OPIUM POPPY

                 ஆங்கிலப் பெயர்.....................POPPY CAPSULES

==================================================

 

01.   கசகசாவுடன் சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் சீதபேதி மூன்று நாட்களில் குணமாகும்(089) (644)

 

02.   கசகசாவை வறுத்துத் தூள் செய்து நாட்டுச் சர்க்கரை சேர்த்து காலை மாலை சாப்பிட்டு வந்தால் சீதபேதி குணமாகும்.(098)

 

03.   கசகசா, வால்மிளகு, வாதுமைப் பருப்பு, கற்கண்டு ஆகியவை சம அளவு எடுத்து பொடி செய்து தேன் விட்டுப் பிசைந்து ஐந்து கிராம் அளவுக்கு எடுத்து பாலுடன் காலை மட்டும் சாப்பிட்டு வந்தால் இரத்த மூலம் குணமாகும்.(366)

 

04.   கசகசாவை வறுத்து தேங்காய் சேர்த்து துவையல் செய்து உணவுடன் சேர்த்து வந்தால் தாது பலம் மிகும்.(469)

 

05.   கசகசாவுடன் கருப்பட்டி மற்றும் நான்கு கிராம்பு சேர்த்துப் பொடி செய்து மூன்று வேளைகள் சாப்பிட்டால் வயிற்றுவலி சரியாகும்.(645)

 

06.   கசகசா பொடி அரை தேக்கரண்டி எடுத்து காலை மாலை உணவுக்கு முன் சாப்பிட்டு வந்தால் அதிமூத்திரம் சரியாகும்.(1679)

 

07.   கசகசாவை அரைத்து எருமைத் தயிரில் கலந்து தினந்தோறும் படுக்கப் போகும் முன் முகத்தில் தடவி வரவும். இதனால் முகம் வழுவழுப்பாக இருக்கும்.(1951)

===========================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்,  பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

  சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,மேழம்(சித்திரை)17]

{30-04-2021}

==================================================

கசகசா

கசகசா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக