மூலிகைப் பெயர்.....................................கடுகு
மாற்றுப் பெயர்கள்.................................ஐயவி
...........................................காரி, விடக்கொல்லி
தாவரவியல் பெயர்..............BRASSICA NIGRA
ஆங்கிலப் பெயர்...................BLACK MUSTARD
01. கடுகில் கறுப்புக் கடுகு, வெள்ளைக் கடுகு, மஞ்சள் கடுகு, நாய்க் கடுகு, மலைக் கடுகு, சிறு கடுகு எனப் பல வகைகள் உள்ளன. .(Asan)
02. கடுகு ஓராண்டு வாழும் சிறு செடி. ஒரு மீட்டர் உயரம் வரை வளரும். மஞ்சள் நிறமான கொத்தான பூக்கள், ஒவ்வொரு கிளையின் நுனியிலும் அமைந்திருக்கும். .(Asan)
03. வெள்ளை, கறுப்பு, பழுப்பு நிறங்களில் கடுகு விளைகிறது. வெண் கடுகை விடக் கறுப்புக் கடுகு காரச் சுவையும், வெப்பத் தன்மையும் மிகுந்தது. .(Asan)
04. கடுகு அதிக கலோரி ஆற்றல் தரக் கூடியது. 100 கிராம் கடுகில் 508 கலோரி ஆற்றல் இருக்கிறது. .(Asan)
05. கடுகில், கால்சியம், மாங்கனீஸ், தாமிரம், இரும்பு, செலினியம், துத்தநாகம், ஆண்டி ஆக்சிடண்ட்ஸ், போலேட்ஸ், நியாசின், தையாமின், ரிபோபிலேவின், வைட்டமின் “ஏ”, “பி-6”, எண்ணெய் சத்துக்கள் ஆகியவை அடங்கி உள்ளன. கிளிசரின், மைரோசின், எருசிக், ஈகோசெனோக், ஆலிக், பல்மிடிக் போன்ற அமிலங்களும் நிறைந்துள்ளன. .(Asan)
06. கடுகைப் பொடித்து, வெந்நீரில் கலந்து பருகி வந்தால், வயிற்று வலி, விக்கல் ஆகியவை நீங்கும். .(Asan)
07. சிறிதளவு தேனில் கடுகு சேர்த்து அரைத்துக் குடித்தால் ஆஸ்துமா, கபம், இருமல் போகும். .(Asan)
08. கடுகை அரைத்துப் பற்றுப் போட்டால் இரத்தக் கட்டு நீங்கும். சிறிதளவு கடுகை நீரில் ஊறவைத்து அரைத்து கை, கால் மூட்டுகளில் தடவினால் கருமை நீங்கும். .(Asan)
09. கடுகு, பயத்தம் பருப்பை தயிரில் கலந்து ஊறவைத்து அரைத்துத் தடவினால் முகம் பள பளக்கும். .(Asan)
10. கடுகைத் தேனுடன் சேர்த்து அரைத்துப் பசையாக்கிப் பூசினால் கட்டிகள் உடையும். .(Asan)
11. கடுகை அரைத்து, தொப்புளில் இலேசாகப் பற்றுப் போட்டால், நீர்க்கடுப்புக் குறையும். .(Asan)
12. கடுகை 15 நிமிடம் ஊறவைத்து அரைத்து பாலில் கலந்து உணவு உண்பதற்கு முன் குடித்தால் நன்கு செரிமானம் ஏற்படும். .(Asan)
13. தினமும் காலையில் கடுகு, மிளகு, உப்பு சேர்த்து அரைத்து, சாப்பிட்டு, ஒரு தம்ளர் வெந்நீர் அருந்தினால் பித்தம், கபம், நீங்கும். .(Asan)
14. கடுகுப் பொடியைத் தேங்காய் எண்ணெய் கலந்து கண்களுக்கு அடியில் போட்டு வந்தால், தொங்கும் சதை இறுக்கம் அடையும். .(Asan)
15. கடுகு 5 கிராம், கருஞ்சீரகம், திப்பிலி, கடுக்காய் ஒன்று, இவைகளைப் பொடித்து காலை மாலை உணவுக்குப் பின் அரைத் தேக்கரண்டி வெந்நீரில் கலந்து அருந்தி வந்தால் மூலம் நீங்கும். .(Asan)
16. சிறிதளவு கடுகு, முருங்கைப் பட்டை, பெருங்காயம் ஒரு துண்டு, மூன்றையும் சேர்த்து அரைத்து மூட்டு வீக்கம் உள்ள இடத்தில் பற்றுப் போடலாம். .(Asan)
17. கடுகு ஒரு தேக்கரண்டி, சுக்கு சிறு துண்டு, சாம்பிராணி 5 கிராம், இவற்றைப் பொடித்து, சிறிதளவு ஆமணக்கு எண்ணெய் விட்டுக் குழைத்துப் பூசினால் தலைவலி தீரும். .(Asan)
18. சீயக்காய் அரைக் கிலோ, வெந்தயம் கால் கிலோ, கடுகு – துவரை தலா 50 கிராம், அரைத்துப் பொடித்து, தலைக்குத் தேய்த்துக் குளியுங்கள். தலைமுடி பொலிவு பெறும். .(Asan)
19. ஆவாரை விதை, கடுகு, கருவேலம் பிசின், மரமஞ்சளைப் பொடித்து, சூரணமாக்கி, தினம் 2 கிராம் சாப்பிட்டு வாருங்கள் நீரிழிவு நோய் கட்டுப்படும். .(Asan)
20. வெண்கடுகு:- வெண்கடுகின் தாவரவியல் பெயர் Brassica
Alba. ஆங்கிலப் பெயர் White Mustard.
.(Asan)
21. வெண்கடுகு காரச் சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டது. குழந்தைகளுக்குத் தோஷங்களைப் போக்கும். .(Asan)
22. வெண்கடுகு முடக்கு வாத நோயைக் கட்டுப்படுத்தும். விஷம் உட்கொண்டவர்களுக்கு, வெண்கடுகை நீரில் ஊற வைத்து நெல்லிகாய் அளவு அரைத்துக் கொடுத்தால், வாந்தியை உண்டாக்கி விஷத்தை வெளியேற்றும்.
.(Asan)
23. வெண்கடுகை அரைத்து கீல்வாயு, இரத்தக் கட்டு உள்ள இடங்களில் பற்றாகப் போடலாம். .(Asan)
24. கடுகு எண்ணெய் தேய்த்துக் குளித்தால், குளிர்ப் பிரதேசங்களில் அது உடலுக்கு சூட்டைத் தந்து, உடல் வெப்ப நிலை உயரச் செய்கிறது. .(Asan)
.
25. சூடான கடுகு எண்ணெயுடன் வெண்ணெயைக் கலந்து தினமும் வயிற்றில் தடவினால், பெண்களுக்கு பிரசவத்தால் வயிற்றில் ஏற்பட்ட கோடுகள் மறையும். .(Asan)
26. கடுகு எண்ணெயில் சிறிதளவு எலுமிச்சைச் சாறு கலந்து தலையில் தடவி மசாஜ் செய்தால் பொடுகு நீங்கும். .(Asan)
27. கடுகு எண்ணெயை இலேசாகச் சூடு படுத்தி முகத்தில் தடவி மசாஜ் செய்தால், பெண்களின் முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்கலாம். .(Asan)
28. நன்றாக அரைத்த மஞ்சளுடன், கடுகு எண்ணெயைக் கலந்து முகத்தில் பூசி வந்தால், கரும் புள்ளிகள் மறையும். .(Asan)
29. ஊறுகாய் கெட்டுப் போகாமல் பாதுகாக்க கடுகு சேர்க்கப் படுகிறது.(Asan)
30. (ஆதாரம்:- நாகர்கோயில், எஸ். மகாலிங்கம் ஆசான்,
09-10-2016 நாளிட்ட இராணி வார இதழில் எழுதிய கட்டுரை.)
31. கடுகை மைய இடித்து, தூள் செய்து வைத்துக் கொண்டு ஒரு சிட்டிகை எடுத்து ஒரு தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் காலையில் எழுந்தவுடன் வரும் இருமல் நின்றுவிடும்..(156) (184)
32. கடுகு, திப்பிலி, கடுகுரோகிணி, சீரகம், சுக்கு, மிளகு, வேப்பங்கொழுந்து அகியவற்றை எடுத்து அரைத்து நிழலில் உலர்த்தி சிறு மாத்திரைகளாக்கி காலை மாலை ஒவ்வொன்று வீதம் சாப்பிட்டு வந்தால் கடுமையான நீர்க்கோவை கூட தீரும்.(164)
33. கடுகு எண்ணெயில் வெங்காயச் சாறினைக் கலந்து வலி உள்ள இடத்தில் தடவி வந்தால் வாதவலி, மூட்டு வலி ஆகியவை தீரும்.(310)
===========================================================
மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்” என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ் அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள் மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !
==================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam77@gmail.com]
ஆட்சியர்,
தமிழ் மூலிகை வலைப்பூ,
[தி.பி:2052,மேழம்(சித்திரை)17]
{30-04-2021}
==================================================
கடுகுச்செடி |
கடுகு |
வெண்கடுகு |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக