மூலிகைப் பெயர்.................................கஞ்சாங்கோரை
மாற்றுப்பெயர்..................................................நாய்துளசி
தாவரவியல் பெயர்...........................
ஆங்கிலப் பெயர்...........................................
=================================================
01.
கஞ்சாங்கோரை
இலை 10 கிராம், மிளகு 1 கிராம், சேர்த்து அரைத்து வெந்நீரில் உள்ளுக்குக் கொடுத்து வந்தால் சளி வெளியாகி, தொடக்க நிலையில் இருக்கும் எலும்புருக்கி நோய்
குணமாகும்.(206)
02.
கஞ்சாங்
கோரை இலைகளை எடுத்து நிழலில் உலர்த்தி, பொடி செய்து, இந்தப் பொடியில் அரைத் தேக்கரண்டி எடுத்து காய்ச்சிய பாலில் கலந்து பருகி வந்தால் ஆண்மை பெருகும்.(500)
03.
கஞ்சாங்
கோரை இலைகளை எடுத்து சிறிது ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி, இளஞ்சூட்டுடன் ஆசனவாயில் வைத்துக் கட்டி வந்தால், ஆசனவாய் அரிப்பு நின்றுவிடும். (1925)
===========================================================
மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்” என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ் அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள் மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !
=================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam77@gmail.com]
ஆட்சியர்,
தமிழ் மூலிகை வலைப்பூ,
[தி.பி:2052,மேழம்(சித்திரை)17]
{30-04-2021}
=================================================
கஞ்சாங்கோரை |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக