மூலிகைப்பெயர்.......................................கடுக்காய்
மாற்றுப் பெயர்கள்...........................கீழே காண்க !
தாவரவியல் பெயர்............TERMINALLA
CHEBULA
ஆங்கிலப் பெயர்.................CHEBULIC
MYROBALAN
01. கடுக்காயின் மாற்றுப் பெயர்கள்:- அக்கோடம்,
அங்கணம், அந்தன், அபரணம், அபையன், அமரிதம், அமலை, அமுதம், அம்மை, அம்ருதா, அரபி, அரிதகி, அலியன், அவ்வியதா, இரேசகி, ஏமவதி, ஐயவி, ஹைமவதி, கடு, காயஸ்தா, சியிருதம், சிரயஹி, சிரோட்டம், சிவா, சேதகி, சேதநிகா, சேயா, திவ்யா, தேவி, நந்திரி, நெச்சி, பத்தியம், பாரியம், பிக்ஷக்வரா, பூதனா, பூதன், பிரபதயா, பிராணதா, மேகம், வயதரம், வயஸ்தா, வரிக்காய், வனதுர்க்கி, விஜய வேதன், ரோகிணி, ஜீவநிகா, ஜீவந்தி, ஜீவப்ரியா, ஜீவ்யா, ஜெயா (Asan)
02. கடுக்காய் மரம் 2.5 மீட்டர் உயரம் வரை வளரும். இதன்
இலைகள் பசுமை நிறத்தில், நீள்வட்டமாக, எதிர் அடுக்கில் அமைந்திருக்கும். பூக்கள் வெண்மை நிறத்தில், ஒரே கதிராகக் காணப்படும். (Asan)
03. கடுக்காய்ப் பழங்கள் மஞ்சள்நிறத்தில் 4 செ.மீ நீளத்தில் முட்டை வடிவில் இருக்கும். பிறகு கரும் பழுப்பு நிறமாக மாறும்.
(Asan)
04. கடுக்காய்ப் பழத்தின் சதைப் பகுதியான கடினமான மேல் பகுதி மட்டுமே மருத்துவக் குணம் உடையது.
(Asan)
05. பழத்தின் சதைப் பகுதியோ சிறந்த கிருமி நாசினி. கொட்டையோ விஷத்
தன்மை வாய்ந்தது. (Asan)
06. சிறிதளவு கடுகாயின் சதைப் பகுதித் தூளை மூக்கில் உறிந்தால், இரத்தம் வருவது நின்று விடும்.
(Asan)
07. கடுக்காயின் சதைப்பகுதிப் பொடியை வெந்நீரில் கலந்து, புண் உள்ள இடங்களில் கழுவினால், புண் விரைவாக ஆறும்.
(Asan)
08. அரைத் தேக்கரண்டி கடுக்காய்த் தூளை மோரில் கலந்து தினமும் இரு வேளை அருந்தி வந்தால், வயிற்றுப் போக்கு கட்டுப்படும். (Asan)
09. அரைத் தேக்கரண்டி கடுக்காய்த் தூளை வெந்நீரில் கலந்து இரவில் ஒரு வாரம் குடித்து வந்தால், செரியாமை, மலச்சிக்கல் தீரும்.
(Asan)
10. ஒரு தேக்கரண்டி கடுக்காய்த் தூளை வெந்நீரில் கலந்து இரவில் மட்டும் 21 நாள் குடியுங்கள். ஈரல் விருத்தி பெறும். (Asan)
11. சம அளவில் கடுக்காய்த் தூள், உப்புத் தூள் கலந்து பல் துலக்கி வந்தால், பல் வலி, ஈறு வலி, இரத்தம் கசிதல் குணமாகும்.
(Asan)
12. அரைத் தேக்கரண்டி கடுக்காய்ப் பொடியை இரவு உணவுக்குப் பின் ஒரு தம்ளர் வெது வெதுப்பான வெந்நீரில் கலந்து அருந்துங்கள். உடல் வலுவாகும்; வாதம் கட்டுப்படும். (Asan)
13. கடுக்காய்ப் பொடி, காசுக்கட்டிப் பொடி சம அளவு எடுத்து, ஒன்றாகக் , நாக்குப் புண்ணில் தடவி வந்தால், புண் குணமாகும்.
(Asan)
14. காலையில் இஞ்சி, நண்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் என தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வாருங்கள். நரை, திரை, மூப்பு இன்றி நெடு நாட்கள் இளமையுடன் வாழலாம்.
(Asan)
15. கடுக்காய்ப் பொடி, சுக்குப் பொடி, திப்பிலிப் பொடி தலா 10 கிராம் எடுத்து ஒன்றாகக் கலந்து காலை மாலை அரைத் தேக்கரண்டி வீதம் 21 நாட்கள் சாப்பிட்டால், வாத நோய்,
பித்த நோய்கள் கட்டுப்படும். (Asan)
16. மண் சட்டியில் சிறிதளவு தண்ணீர் விட்டு, சிறிதளவு சோம்பு, சிறிதளவு கடுக்காய்ப் பொடி போட்டு
நன்றாகக் காய்ச்சி, வடிகட்டி, சுத்தமான தேன் கலந்து தினமும் இரு வேளைகள் குடித்து வந்தால் உடல் எடை குறையும். (Asan)
17. கடுக்காய்த் தோல், கிராம்பு தலா 15 கிராம் போட்டு, ஒரு தம்ளர் நீர் விட்டுக் கொதிக்க வைத்து ஆறியதும், அதிகாலை குடிப்பவர்களுக்கு மலச் சிக்கல் சீரடையும்.
(Asan)
18. கடுக்காய்த் தோல் 2, இஞ்சி, புளி, மிளகாய், உளுத்தம் பருப்பை நெய்யில் வதக்கி, உப்பு சேர்த்து, அரைத்து, துவையலாக்கி, சாதத்துடன் உண்டு வந்தால் செரிமான சக்தி மிகும்.
(Asan)
19. கடுக்காய் சதைப் பகுதி, கோரைக் இழங்கு, நிலவேம்பு, வேப்பம் பட்டையை சம அளவு எடுத்து, மண் சட்டியில் போட்டு, 300 மி.லி. நீர் ஊற்றி, பாதி அளவாக நன்றாக வற்றும் வரைக் காய்ச்சி, தினமும் மூன்று வேளைகள் சிறிது தேன்கலந்து குடித்தால், தலைவலி குறையும்.
(Asan)
20. பொடித்த கற்கண்டு 150 கிராம் எடுத்து, நீர் விட்டு, கிளறி, 15 கிராம் கடுக்காய்ப் பொடி கலந்து, காலை மாலை அரைத்
தேக்கரண்டி வீதம் வெந்நீருடன் உட்கொண்டால், குடல் புண், சுவாச காசம், மூலம், வாதம் கட்டுப்படும். (Asan)
21. கடுக்காய், நெல்லிகாய், தான்றிக்காய் சேர்ந்ததே திரிபலா சூரணம். சம அளவு கடுக்காய் சதைப் பகுதி, தான்றிக் காய், நெல்லிக்காய் மூன்றையும் தனித் தனியே காய வைத்து, பொடித்து, நன்றாகக் கலந்து, காற்றுப் புகாத கண்ணாடி சீசாவில் பத்திரப்படுத்தவும். இதை நீரில் கலந்து குடிக்கவும். உடல் பலம் கிட்டும். வயிற்று உபாதைகளுக்கு ஒரு தேக்கரண்டி திரிபலா சூரணத்துடன் வெந்நீர் அருந்தவும். (Asan)
22. கடுக்காயின் சதைப் பகுதிப் பொடி 300 கிராம், எட்டுப் பங்கு நீர் விட்டு, எட்டில்
ஒன்றாக வற்றக் காய்ச்சி, வடிகட்டவும். வெல்லம் 300 கிராம் எடுத்து, நீரில் கரைத்து, கொதிக்க வைத்து பாகு தயார் செய்யவும். இந்தப் பாகுடன் கடுக்காய்ப் பொடியைக் கலக்கவும். அத்துடன் இஞ்சி, ஓமம், சிவதை, திப்பிலி, மிளகு, வாய்விளங்கம், வகைக்கு 30கிராம் எடுத்து அரைத்து, இந்தக் கசாயத்தில் போட்டு 450 மி.லி. பசு நெய் சேர்த்துக் கிண்டி இலேகியம் செய்யவும். இந்த இலேகியத்தை வேளை ஒன்றுக்கு நெல்லிக் காய் அளவு உட்கொள்ளலாம் மூலநோய், பசியின்மை
சீரடையும்.
(Asan)
23. கடுக்காயின் சதைப் பகுதியை மட்டும் எடுத்துக் காய வைத்து, பொடித்து, சுத்தமான வெள்ளைத் துணியில் சலித்து, கண்ணாடி சீசாவில் பத்திரப் படுத்தி வைத்துக் கொள்ளவும். இதுவே கடுக்காய்ச் சூரணம். (Asan)
24. கடுக்காயின் உள்ளே இருக்கும் கொட்டை விஷத் தன்மை கொண்டது. எனவே, அதை நீக்கி விட்டு, சதைப் பகுதியை மட்டும் பயன் படுத்துங்கள். (Asan)
25. (ஆதாரம்:- நாகர் கோயில், எஸ். மகாலிங்கம் ஆசான், 08-01-2017 நாளிட்ட இராணி வார இதழில் எழுதிய கட்டுரை.)
26. கடுக்காய், அதிமதுரம், திப்பிலி, மிளகு ஆகியவை அள்வோடு எடுத்து
பொடித்து, அதிலிருந்து
ஒரு சிட்டிகை எடுத்து தேன் கலந்து சுடுநீரில் சாப்பிட, கண் எரிச்சல் தீரும். (016)
27. கடுக்காய் விதை 3, ஆல்பக்கோடா விதை 4, நெல்லிக்காய் விதை 2 சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தால் கண் சிவப்பு மாறும். (028)
28. கடுக்காய்த் தோல் ஒரு சிறு துண்டு எடுத்து வாயில் போட்டு அடக்கிக் கொண்டால் குரல் மாற்றம் சரியாகும். உமிழ் நீரை விழுங்கி விடலாம். (070)
29. கடுக்காய்ப் பொடி, நெல்லிக் காய்ப் பொடி இரண்டையும் கலந்து அதிலிருந்து அரைத் தேக்கரண்டி எடுத்து தேன் கலந்து சாப்பிட்டால் மூக்கடைப்பு, சளி ஆகியவை குணமாகும். (110)
30. கடுக்காய், சிற்றரத்தை இரண்டையும் சிவக்க வறுத்து பொடி செய்து ஒரு சிட்டிகை எடுத்து வாயில் போட்டு அடக்கிக் கொண்டால் வறட்டு இருமல் குணமாகும் .(118)
31. கடுக்காயையும் படிக்காரத்தையும் பொடி செய்து நீரில் போட்டு அந்த நீரால் வாய் கொப்பளித்து வந்தால் ஈறில் உள்ள புண்கள் குணமாகும். (225)
32. கடுக்காய்த்தோல், சுக்கு, காசுக் கட்டி, இந்துப்பு சம அளவு எடுத்து பொடியாக்கி, பற்பொடியாகப் பயன் படுத்தலாம். இதனால், பல் ஆட்டம், பல் சொத்தை, இரத்தக் கசிவு ஆகியவை தீரும் .(228)
33. கடுக்காய்த் தோல், தான்றிக் காய், நெல்லி முள்ளி மூன்றையும் குடிநீரில் ஊறவைத்து அந்த நீரால் வாய் கொப்பளித்து வந்தால் வாய் துர்நாற்றம் தீரும்
.(251)
34. கடுக்காய்த் தோலை மைய இடித்துத் தூள் செய்து வைத்துக் கொண்டு விக்கல் வரும் போது கால் தேக்கரண்டி எடுத்து தேன் கலந்து சாப்பிட்டால் விக்கல் மீண்டும் வராது. (260)
35. கடுக்காய்த் தூளுடன் வாழைப் பூச்சாறு சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூல நோய் குணமாகும் .(373)
36. கடுக்காய்த் தோலை பொடி செய்து நீரில் இட்டு, சுண்டக் காய்ச்சி இரவில் படுக்கப் போகும் முன் சாப்பிட்டு வந்தால் எளிதில் மலம் கழியும். (392)
37. கடுக்காயைக் கல்லில் உரசி பெண்களின் இடுப்புப் புண் மீது தடவி வந்தால் புண்கள் விரைவில் குணமாகும் .(525)
38. கடுக்காய்ப் பொடி, தான்றிக் காய், நெல்லிக்காய் ஆகியவற்ரைப் போட்டுக் கசாயம் செய்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் எடை குறையும். (1709)
39. கடுக்காய் வேர், பட்டை, இலை, பூ உலர்த்தி, இடித்து, சலித்து வைத்துக் கொண்டு காலை மாலை அரைத் தேக்கரண்டி எடுத்து பசும் பாலில் கலந்து அருந்தி வந்தால் தொழுநோய் குணமாகும். (942)
===========================================================
மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்” என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ் அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள் மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !
==================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam77@gmail.com]
ஆட்சியர்,
தமிழ் மூலிகை வலைப்பூ,
[தி.பி:2052,மேழம்(சித்திரை)17]
{30-04-2021}
==================================================
கடுக்காய் |
உலர்ந்த கடுக்காய் |
கடுக்காய் மரம் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக