இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

வெள்ளி, 30 ஏப்ரல், 2021

ஆளிவிதை

 

                  மூலிகைப் பெயர்................................ஆளிவிதை

                  மாற்றுப் பெயர்....................................ஆழி விரை

                  தாவரவியல்பெயர்...............LEPIDIUM SATIVUM

                  ஆங்கிலப் பெயர்.................FLAX SEED, LINSEED

 =================================================

 

01. ஆளி விதையைத் தரும் செடி நேராக வளரும். இதன் தண்டானது மெல்லிய ஊசி விடிவிலானது; சராசரி 120 செ.மீ உயரம்  இருக்கும். இலைகளானது 4 செ.மீநீளமும், 3 மி.மீ அகலமும் உடையவை. பூக்களானது வில்லை வடிவத்தில், நீல நிறத்தில் ஐந்து இதழகளைக் கொண்டு இருக்கும். (Asan)

         

02. விதைகள் சிவப்பு அரிசியைப் போன்று காணப்படும். சத்து நிறைந்தது. நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். (Asan)

 

03. இச்செடியின் இலை, பூ, விதை, வேர், நார் ஆகியவை பயன் தரும் பாகங்கள் ஆகும். (Asan)

 

04. மஞ்சள் நிற ஆளி விதை, காவி நிற ஆளி விதை என இரு வகைகள் உள்ளன. (Asan)

 

05. ஆளி விதையில் கரையக் கூடிய மற்றும் திடமான நார்ச் சத்துக்கள் உள்ளன. புரதம், மாவுச் சத்து, சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், இரும்புச் சத்து, வைட்டமின்”, தயாமின், ரிபோபிளேவின், நயாசின், போலிக் அமிலம் ஆகியவையும், ஒமேகா-3 என்ற கொழுப்புச் சத்துமுள்ளன. (Asan)

06. ஆளி விதையிலுள்ள ஒமேகா-3 என்பது இரத்தக் குழாய்களில் மற்ற கொழுப்புச் சத்துக்கள் படியாமல் தடுக்கிறது. (Asan)

 

07. தினமும் ஆளி விதையை உட்கொண்டால், மூட்டு வலி வராமல் தடுக்கலாம். மூட்டு வலி உள்ளவர்கள் உட்கொண்டால், வலியைக் குறைக்கலாம்(Asan)

.

08. ஆளி விதையானது சருமத்துக்கும், முடிக்கும் பளபளப்பும், மினு மினுப்பும் அளிக்கிறது. (Asan)

 

09. மாதவிலக்கு சரியாக வராத பெண்கள் ஆளி விதையை உட்கொண்டால், வீட்டு விலக்கு தூண்டப்படும். (Asan)

 

10. வாதத்தால் மூட்டுகளில் ஏற்படும் வலி, வீக்கத்தைப் போக்கும். மேல்பூச்சு மருந்தாகப் பூசலாம். (Asan)

 

11. சிறிதளவு, ஆளி விதையை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால், உடலில் கொழுப்பு குறையும். (Asan)

 

12. ஆளி  விதையை நெய்யில் வறுத்து, பொடித்து கொஞ்சம் வெல்லம் சேர்த்து உருண்டை பிடித்துச் சாப்பிட்டால், உடல் பருமன் ஏற்படும். (Asan)

 

13. பிரசவித்த பெண்கள் ஒரு தேக்கரண்டி ஆளிவிதைப் பொடியை உணவில் சேர்த்து வந்தால், தாய்ப்பால் பெருகும். (Asan)

 

14. தினமும் 5 கிராம் ஆளி விதையை நீரில் ஊறவைத்து, மென்று தின்று, வெந்நீர் அருந்தி வரும் பெண்களுக்கு மாதவிடாய்க் கோளாறு சரியாகும். (Asan)

 

15. ஒரு தேக்கரண்டி  ஆளிவிதைப் பொடியை அதே அளவு நெய்வெல்லம் கலந்து சாப்பிடும் ஆண்களுக்கு ஆண்மை சக்தி அதிகரிக்கும். (Asan)

 

16. இரு மேசைக் கரண்டி ஆளிவிதை எண்ணெயை அதிக தண்ணீரில் கலந்து மதியம், இரவு சாப்பாட்டுக்குப் பிறகு குடித்து வரலாம். மலச் சிக்கல் குறையும். தலைமுடி பிரச்சினைகளைக் குறைக்கும். (Asan)

 

17. கொஞ்சம் ஆளிவிதைப் பொடியை விளக்கெண்ணெய் சேர்த்துக் தைலப் பதத்தில் காய்ச்சி, ஆற வைத்து, வடிகட்டி, ஆசனவாயில் பூசினால் மூல நோய் கட்டுப்படும். (Asan)

 

18. சிறிதளவு ஆளிவிதைப் பொடியுடன் எலுமிசம் பழச் சாறு சேர்த்து, சிறிது நீர் விட்டுப் பசை போல் தயாரித்து வீக்கம், வலி உள்ள இடங்களில் பூசினால், வலி குறையும். (Asan)

 

19. ஒரு தேக்கரண்டி ஆளிவிதைப் பொடியுடன், அரைத் தேக்கரண்டி பனங் கற்கண்டு சேர்த்து, தேவையான அளவு  நீர் விட்டுக் கொதிக்க வைத்து, வடிகட்டி, குடித்து வாருங்கள். சிறுநீர் பெருகும்; கழிச்சல் தணியும்; வயிற்றுப் பொருமல் தீரும்; விக்கல் விலகும். (Asan)

 

20. சிறிதளவு ஆளிவிதை, ஓமம், கருஞ்சீரகம், வெந்தயத்தை நன்றாகப் பொடித்து, ஒன்றாகக் கலந்து, தினமும் ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் வயிறு சம்பந்தமான நோய்கள் தீரும். (Asan)

 

21. அரைத் தேக்கரண்டி நெய்யை உருக்கி, அதனுடன் ஒருதேக்கரண்டி ஆளி விதைப் பொடியைச் சேர்த்து  இலேசாக வறுத்து, நீர் விட்டு வேக வைத்து, ஒரு தேக்கரண்டி, வெல்லம்காய்ச்சிய பால் சேர்த்து  உட்கொண்டால் ஆண்களுக்கு உயிரணு குறைபாட்டைச் சீர் செய்யும். பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். (Asan)

 

22. ஆளி விதையின் எண்ணெயும் தாய்ப்பால் சுரப்பைக் கூட்டும். (Asan)

 

23. மீன் சாப்பிடாதவர்க்ள்ஒமேகா – 3“ கொழுப்பைப் பெறும் பொருட்டு ஆளிவிதைப் பொடியை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். மிகுந்தபலன் தரும்.. (Asan)

 

24. ஆளி விதைப் பொடியை சாப்பிடும் போது நன்றாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். (Asan)

 

25. (ஆதாரம்: நாகர்கோயில், எஸ்.மகாலிங்க ஆசான், 26-02-2017 நாளிட்ட இராணி வார இதழில் எழுதிய கட்டுரை.)


===========================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்,  பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

  சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க ! 

==================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,மேழம்(சித்திரை)17]

{30-04-2021}

==================================================

ஆளிவிதை


ஆளிச் செடி



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக