மூலிகைப்
பெயர்:-.....................................எலுமிச்சை
மாற்றுப்
பெயர்கள்..........................................................
தாவரவியல்
பெயர்:-............................CITRUS
LIMON
ஆங்கிலப்
பெயர்:-...................................LEMON
TREE
================================================
01. முள் உள்ள சிறு மர வகையைச் சேர்ந்தது எலுமிச்சை. எதிர் அடுக்கில், அடர் பச்சை நிற இலைகளை
உடையது. பூக்கள்
வெண்மை நிறத்தில் ஐந்து இதழ்களைக் கொண்டதாக இருக்கும். காய்
உருண்டையாக பச்சை நிறத்திலும், பழமானது மஞ்சள் நிறத்திலும் இருக்கும். (Asan)
02. எலுமிச்சை சாறு புளிப்புச் சுவை உடையது. எலுமிச்சையின்
காய், பழம், பழரசம், இலை ஆகியவை மருத்துவக் குணம் உடையவை. (Asan)
03. நாட்டு எலுமிச்சை, கொடி எலுமிச்சை, மலை எலுமிச்சை என மூன்று வகைகள் எலுமிச்சையில் உள்ளன (Asan)
04. எலுமிச்சையில் வைட்டமின் “சி”, “பி”, பாஸ்பரஸ், புரதம், சுண்ணாம்புச் சத்து, பொட்டாசியம் கார்போஹைடிரேட் அகிய சத்துகள் உள்ளன. (Asan)
05. எலுமிச்சைச் சாறில் அதிக அளவு ஆண்டிஆக்சிடெண்டுகளும் சிட்ரிக் அமிலமும் பெக்டின் என்ற நார்ச்சத்தும் உள்ளன. (Asan)
06. எலுமிச்சம் பழத்தை மோந்து பார்த்தால் வாந்தி கட்டுப்படும். நகச்சுற்று வந்தால் பழத்தை விரலில் செருகி வைத்தால் விரைவில் குணமாகும். (Asan)
07. தேள் கொட்டிய இடத்தில் பழத்தைத் தேய்த்தால் விஷம் இறங்கும். (Asan)
08. எலுமிச்சைச் சாறும் தேனும் சமபங்கு கலந்து அருந்தினால் கபம், இருமல் நீங்கும். பழச் சாற்றினை இளநீரில் கலந்து பருகினால் டைபாய்டு சுரம் கட்டுப்படும். (Asan)
09. எலுமிச்சம் பழச் சாறில் ஓமம் கலந்து குடித்தால் செரிமானப் பிரச்சினை
தீரும். நீரில் கலந்து பருகினால் நெஞ்செரிச்சல், வயிற்றுப் பொருமல், பேதி சரியாகும். (Asan)
10. எலுமிச்சம் பழச் சாறினை மோரில் கலந்து குடித்து வந்தால் இரத்த அழுத்தம் குறையும். சாறுடன் சிறிது உப்பு கலந்து பருகினால் தாகம் தீரும். (Asan)
11. எலுமிச்சைச் சாறுடன் மாமரப் பிசினைக் கலந்து பித்த வெடிப்புகளுக்குப் பூசலாம்.
(Asan)
12. எலுமிச்சம் பழச் சாறுடன் தக்காளிப் பழச் சாறும் தேனும் கலந்து பருகி வந்தால் காசநோய் கட்டுப்படும். எலுமிச்சம் பழச் சாறுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் பொடுகு நீங்கும். (Asan)
13. எலுமிச்சைச் சாறுடன் சிறிது சர்க்கரை கலந்து குடித்து வந்தால் கண் நோய், மஞ்சள் காமாலை, யானைக் கால் நோய் கட்டுப்படும்.
(Asan)
14. மருதாணி போடும் முன் பழச் சாறினைக் கைகளில் தடவி உலர்ந்த பின் மருதாணி போட்டால் நன்கு சிவக்கும். (Asan)
15. நெல்லிகாய்ச் சாறு, பாதாம் எண்ணெய், எலுமிச்சைச் சாறு சம அளவு கலந்து இரவில் தலையில் தடவி, காலையில் குளித்து வந்தால் இளநரை விலகும்.(Asan)
16. எலுமிச்சம் பழச் சாற்றில் சந்தனக் கட்டையை உரைத்து, குழம்பினை படர்தாமரை மீது பூசி, நன்கு உலர்ந்த பின் கழுவி வந்தால் குணமாகும். (Asan)
17. எலுமிச்சம்பழச் சாற்றில் தலா ஒரு தேக்கரண்டி சீரகத்தையும், மிளகையும் கலந்து வெயிலில் காயவைத்து நன்றாகப் பொடித்து வைத்துக் கொண்டு காலை மாலை அரை தேக்கரண்டி பொடியை வாயில் போட்டு வெந்நீர் குடித்தால் பித்தம் குறையும். (Asan)
18. இரவில் எலுமிச்சம்பழ மூடியில் ஐந்தாறு கிராம்பைச் செருகி வைத்தால் கொசு வராமல் தடுக்கலாம் .(Asan)
19. தினமும் காலையில் எலுமிச்சம்பழச் சாறினை நீரில் கலந்து குடித்து வந்தால் உடல் எடை குறையும். நஞ்சுகள் வெளியேற்றப்படும். கல்லீரல் ஆரோக்யமாக இருக்கும். (Asan)
20. எலுமிச்சைச் சாறினைத் தனியாக அருந்தக் கூடாது. தண்ணீர், வெந்நீர் அல்லது தேன்கலந்து பருகுவதே சிறந்தது. (Asan)
21. ஆஸ்துமா, வயிற்றுப் புண்
உள்ளவர்கள் எலுமிச்சை சாறு அதிகம் சேர்க்கக் கூடாது.
(Asan)
22. (ஆதாரம்:- நாகர்கோயில் எஸ். மகாலிங்கம் ஆசான் 27-11-2016 நாளிட்ட இராணி வார இதழில் எழுதிய கட்டுரை.)
23. எலுமிச்சை இலை, துளசி இலை, முருங்கைப் பூ, புடலம் பூ ஆகியவை தீராத் தாகத்தையும் தணிக்கும். எனவே தாகம் அதிகம் உள்ளோர் இவற்றை உண்ணலாம் .(272)
24. எலுமிச்சை விதைகளுடன் சிறிது உப்பினைச் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதைத் தண்ணீரில் கலந்து குடித்தால் தேள்விஷம் இறங்கும். (898)
25. எலுமிச்சம் சாதத்தை வாரத்தில் மூன்று நாள் காலை உணவாகக் கொண்டால், பித்தத்தைத் தணிக்கும்
(799)
26. எலுமிச்சம் பழச் சாறு இரண்டு மூன்று துளிகள் காதில் விட்டால், காது குடைச்சல் தீரும்.(065)
27. எலுமிச்சம் பழச் சாறினை ஓரிரு துளிகள் காதில் விட்டால் காது வலி தீரும் .(072)
28. எலுமிச்சம் பழச் சாறு, மாதுளம் பழச் சாறு இரண்டையும் கலந்து குடித்து வந்தால் சளித் தொல்லை தீரும் .(114)
29. எலுமிச்சம் பழச் சாறுடன் தேன் கலந்து தினசரி படுக்கப் போகும் முன்பு அருந்தி வந்தால் ஆஸ்துமா தொல்லை குறையும் .(162)
30. எலுமிச்சம் பழச் சாறுடன் தேன் கலந்து 100 மி.லி அளவுக்கு தினசரி பருகி வந்தால் மலேரியா காய்ச்சல் குணமாகும். (176) (1167)
(1260)
31. எலுமிச்சம் பழச் சாறினை ஒரு
தம்ளர் மோரில் கலந்து சாப்பிட்டால் இரத்த அழுத்தம் குறையும். (534)
(1869)
32. எலுமிச்சம் பழச் சாறுடன் சம அளவு காரட் சாறு எடுத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி, தலைக்குத் தேய்த்து வந்தால் முடி கறு கறுவென
வளரும் .(911)
33. எலுமிச்சம் பழச் சாறினை காலையில் வெந்நீரிலும்,
மதியம் மோரிலும், மாலையில் சர்க்கரை சேர்த்து சர்பத்தாகவும் அருந்தி வந்தால் மூளை பலம் பெறும் .(982)
34. எலுமிச்சம் பழச் சாறுக்கு மலச் சிக்கலைப் போக்கும் தன்மை உள்ளது..(1217)
35. எலுமிச்சம் பழச் சாறில் சந்தனம் கலந்து உடம்பில் பூசி வந்தால் வேர்க்குரு மறையும் .(1286
36. எலுமிச்சம் பழச் சாறுடன் சிறிது தேன் கலந்து பருகி வந்தால் வறட்டு இருமல் நீங்கும். (1781)
37. எலுமிச்சம் பழச் சாறு எடுத்து சிறிது உளுத்த மாவுடன் கலந்து பிசைந்து சேற்றுப் புண் மீது தடவி வந்தால் அவை ஆறும் .(1961)
மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்” என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ் அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள் மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !
===============================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam77@gmail.com]
ஆட்சியர்,
தமிழ் மூலிகை வலைப்பூ,
[தி.பி:2052,மேழம்(சித்திரை)17]
{30-04-2021}
===============================================
எலுமிச்சம்பழம் |
எலுமிச்சை மரம் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக