மூலிகைப்
பெயர்.....................................குப்பைமேனி
மாற்றுப் பெயர்கள்..........................பூனை வணங்கி
..............................................................அரிமஞ்சரி, மேனி
தாவரவியல் பெயர்..........................ACALYPHA
INDICA
ஆங்கிலப் பெயர்..............................INDIAN
ACALYPHA
சுவை.........................................................................கைப்பு
தன்மை..................................................................வெப்பம்
1)
மாற்றடுக்கில்
அமைந்த பல அளவுகளில் உள்ள இலைகளையும், இலைக்காம்பு இடுக்கில் அமைந்த பூங்கொத்துகளையும் கொண்டது குப்பைமேனிச் செடி.
2)
செடி
முழுமையும் மருத்துவப் பயன் உடையது.
3)
இலை
வாந்தி உண்டாக்கி கோழை அகற்றியாகவும் , வேர் மலம் இளக்கியாகவும் செயல்படும்.
4)
குப்பைமேனி
இலையை விளக்கெண்ணெய்
விட்டு வதக்கி, இளஞ்சூட்டில் கட்டிவரப் படுக்கைப் புண்கள் தீரும். (618) (955)
5)
குப்பைமேனி
இலைச் சூரணத்தைப்
பொடிபோல நசியமிட (மூக்கில் இட) தலைவலி நீங்கும்.
6)
குப்பைமேனி
இலையுடன், சிறிது
மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்துப் பூசி சற்று நேரம் கழித்துக் குளிக்கத் தோல் நோய் அனைத்தும் தீரும். (1000)
7)
குப்பைமேனி
இலையால் பல்லடி நோய், தீச்சுட்ட புண், வயிற்று வலி, வாத நோய், மூலம், நமைச்சல், குத்தல், இரைப்பு, மூக்கு நீர் பாய்தல், கோழை ஆகியவை நீங்கும்.
8)
குப்பைமேனி
இலையை உணவு
முறையாய் புசித்து வரின் உடம்பிலுள்ள திமிர்வாதம் முதலிய நோய்கள் நீங்கும்.
9)
குப்பைமேனி
இலைச் சாறு
அல்லது குடிநீர் செய்து சிறியவர்களுக்கு 2 தேக்கரண்டி வரைக் கொடுக்க வயிற்றைக் கழியச் செய்யும்; கோழையை அகற்றும்; வயிற்றுப் புழுவைக் கொல்லும்.
10)
குப்பைமேனி
இலையைச் சுண்ணாம்புடன் கலந்து நோயுடன்
கூடிய கல் வீக்கங்களுக்கும் கட்டிகளுக்கும் பூசலாம். இதையே காது வலிக்கு
காதைச் சுற்றிப் பூச, நோய் தணியும்.
11)
குப்பைமேனி
இலையை அரைத்துக்
கழற்சிக்காய் அளவுக்கு உருண்டை செய்து எருவாய் வழியாக உள்ளே வைத்தால், நாள்பட்ட மலக்கட்டு நீங்கும்.
12)
குப்பைமேனி
இலை ஒரு கைப்பிடி, சீரகம் ஒரு தேக்கரண்டி சேர்த்து அரைத்து பசும்பாலில் சாப்பிட்டால் ஒரே வேளையில் கூட மூலத்துடன் இரத்தம் வருவது
நின்று விடலாம்.(364) (1954)
13)
குப்பை
மேனி சாறினை எடுத்து நெற்றியிலும், உச்சந்தலையிலும் தடவினால் தலைவலி குணமாகும்.(398) (1125) (1297)
14)
குப்பைமேனி
இலைச் சாறு தேங்காய் எண்ணெயுடன் கலந்து பூசி வந்தால் சொறி சிரங்கு குணமாகும்.(441)
15)
குப்பைமேனி
சாறுடன் சிறிது சுண்ணாம்பு சேர்த்து, தடவினால் வீக்கம் சரியாகும்.(569)
16)
குப்பைமேனி
இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டில் கட்டி
வந்தால் படுக்கைப் புண்கள் சரியாகும்.(618) (955)
17)
குப்பைமேனி
இலையைக் காய வைத்துப் பொடி செய்து மாலை நேரத்தில் அரைத் தேக்கரண்டி எடுத்து
மோரில் கலந்து சாப்பிட்டால் செரியாமை வாயுத்
தொல்லை தீரும்.(652)
18)
குப்பைமேனி
இலைகள் ஒரு கைப்பிடி, பூண்டுப்பல் 4 ஆகியவை எடுத்து அரைத்து சாறு எடுத்து 15 மி.லி குழந்தைகளுக்குக் கொடுத்தால் வயிற்றுப் பூச்சிகள் ஒழியும். (688)
19)
குப்பைமேனி
இலை, உப்பு, மஞ்சள் ஆகியவை எடுத்து அரைத்து பற்றுப் போட்டால் பூரான் கடி விஷம் நீங்கும்.(876)
20)
குப்பைமேனி
இலையை அரைத்து சிறிது சுண்ணாம்பு கலந்து தடவினால் பொதுவாக பெயர் தெரியாத விஷ கடிகளால்
ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.(892)
21)
குப்பைமேனி
இலைகளை அரைத்து கடிவாயில் கட்டினால் எலி கடி விஷம் நீங்கும்.(891)
22)
குப்பைமேனி
இலை, மஞ்சள் உப்பு சேர்த்து அரைத்து உடலில் பூசி ஒரு மணி நேரம் கழித்துக் குளித்து வந்தால் தோல் நோய்கள் குணமாகும்.(1000)
23)
குப்பைமேனி
இலையுடன் கருஞ் செம்பை இலைகளையும் எடுத்து அரைத்து கலக்கி உடலில் பூசி ஒரு மணி நேரம் கழித்துக் குளித்து வந்தால், படை, தோல் நோய்கள் குணமாகும்.(1032)
24)
குப்பைமேனி,
சங்கிலை வேப்பிலை, நாயுருவி, நொச்சி ஆகியவற்றை எடுத்து அவித்து வேது பிடித்தால் வாத வீக்கம், கீல் வாயு
ஆகியவை தீரும்.(1099)
25)
குப்பைமேனி
இலைச் சாறு எடுத்து தினசரி ஒரு அவுன்ஸ் (30 மி.லி) சாப்பிட்டு வந்தால் வாத நோய் குணமாகும்.(1103)
26)
குப்பைமேனி
இலை, விரலிமஞ்சள், வேப்பங்கொழுந்து ஆகியவற்றை எடுத்து சற்று நீர் விட்டு அரைத்து உடலில் பூசி உலரவிட்டு, பின்பு கழுவினால்,
அந்த இடங்களில் இருந்த முடிகள் அகன்றுவிடும்.(1764)
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
=================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam77@gmail.com]
ஆட்சியர்,
தமிழ் மூலிகை வலைப்பூ,
[தி.பி:2052,விடை(வைகாசி
)04]
{18-05-2021}
=================================================
குப்பைமேனி |
குப்பைமேனி |
குப்பைமேனி |
குப்பைமேனி |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக