மூலிகைப் பெயர்......................................குங்குமப்பூ
மாற்றுப் பெயர்கள்.................ஏழல் பூ, காஸ்மீரம்,
..............................................காஷ்மீர் கன்னி, காஷ்மீர்
.........................................மகாராணி குங்குமா, கேசர்,
............................................................சாப்ரன், ஞாழல் பூ
தாவரவியல் பெயர்.................................Crocus
Sativus
ஆங்கிலப் பெயர்..................................................Saffron
=================================================
01.
குங்குமப்பூ விளைவிக்கும் தாவரம் சிறு செடி வகையைச் சேர்ந்தது. இது முப்பது செ.மீ உயரம் வரை வளரக் கூடியது. பூவானது ஊதா நிறத்தில் ஆறு இதழ்களுடனும், செம்மஞ்சள் நிற மூன்று சூலக முடிகளையும், சூல் தண்டுகளையும் கொண்டுள்ளது. ஒவ்வொரு இலையும் 20 செ.மீ நீளத்தில் புல்போன்ற அமைப்புடன் காணப்படுகிறது. (Asan)
02.
இந்த தாவரத்தின் தண்டுக் கிழங்குகள் சிறிய பழுப்பு நிறமான கோள வடிவத்தையும் நான்கு செ.மீ விட்டத்தையும், நார்களால் ஆன அடர்த்தியான காப்புறையையும் கொண்டிருக்கும். (Asan)
03.
குங்குமப்பூ என்பது தாவரத்தின் மலரைக் குறிக்காது. பூவில் இருந்து சேகரிக்கப்படும் காம்புகளைத்தான் குங்குமப்பூ என்கிறோம். ஒரு கிலோ குங்குமப்பூ சேகரிக்க இலட்சக் கணக்கான மலர்கள் தேவைப்படும். (Asan)
04.
குங்குமப்பூவில் 80 விழுக்காடு சிவப்பாகவும், 20 விழுக்காடு மஞ்சள் நிறத்திலும் காணப்படும். (Asan)
05.
மிகுந்த நறுமணத்துடன் மின்னும். துவர்ப்புத் தன்மை வாய்ந்தது. குங்குமப்பூவில் இரும்பு, கால்சியம், செம்பு, செலினியம், துத்தநாகம், பொட்டாசியம், மெக்னீஷியம், மாங்கனீஸ், வைட்டமின் “ஏ”, “சி”, போலிக் அமிலம், ரிபோபிளேவின், நியாசின் ஆகிய சத்துகள் உள்ளன. (Asan)
06.
குங்குமப்பூவைப் பாலில் கலந்து அருந்தி வந்தால் தாது விருத்தியாகும். பெண்களுக்கு பேறு காலத்தில் உண்டாகும் வலியை குறைக்கிறது. (Asan)
07.
சிறிதளவு குங்குமப் பூவை சோம்பு நீரில் கரைத்து உட்கொண்டால் விரைவாக குழந்தைப் பேறு நிகழும். (Asan)
08.
குங்குமப்பூவுடன் சிறிது தேன் கலந்து தினமும் இரு வேளை உட்கொண்டால் ஆஸ்துமா நீங்கி உடல் நலம் பெறும். (Asan)
09.
குங்குமப்பூவை வெற்றிலையுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், குழந்தை ஆரோக்யத்துடன் பிறக்கும். (Asan)
10.
குங்குமப் பூவையும் துளசி இலைகளையும் சேர்த்து அரைத்து உட்கொண்டால் அம்மை நோய் குணமாகும். (Asan)
11.
குங்குமப்பூவைப் பொடித்து பால் கலந்து குழைத்து முகத்தில் பூசி வந்தால், முகத்தின் கருமை நிறம் மாறி பொலிவுடன் திகழும். (Asan)
12.
குங்குமப்பூ, மஞ்சள் இரண்டையும் தண்ணீரில் கலந்து குழைத்து முகத்தில் பூசி 10 நிமிடம் கழித்து வெது வெதுப்பன நீரில் கழுவி வந்தால் முகப் பருக்கள் விலகும். (Asan)
13.
கருவுற்ற பெண்கள் மூன்றாம் மாதத்தில் இருந்து குங்குமப்பூவை காய்ச்சிய பாலில் கலந்து குடித்து வந்தால், மசக்கைமயக்கம் நீக்கி, புத்துணர்ச்சி அளித்து, இரத்த சோகை ஏற்படாமல் தடுக்கும். தாய்க்கும் சேய்க்கும் நோய் எதிர்ப்பு ஆற்றல் அளிக்கும். (Asan)
14.
குங்குமப்பூ தைலம் சில சொட்டுகள் எடுத்து முகத்தில் தடவி மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்து வெது வெதுப்பாஅன நீரில் கழுவினால், இரத்த ஓட்டம் அதிகரித்து, முகத்தில் பொலிவு கூடும். (Asan)
15.
குங்குமப்பூவை அதிகமாகப் பயன்படுத்தினால் வாந்தி, மயக்கம், வயிற்றுப் பிரட்டல், பசியின்மை தலைசுற்றல் போன்றவை ஏற்படக் கூடும். எனவே சிறு அளவிலேயே பயன்படுத்த வேண்டும். (Asan)
16. சூடன வெந்நீரில் 5 குங்குமப்பூவைப் போட்டால், மெதுவாகக் கரைந்து, மின்னக் கீடிய தங்க நிறத்தில் நீர் மாறும். நறுமணம் வீசும். 24 மணி
நேரத்திற்கு அதிலிருந்து தங்க நிறம் வீசும். இதுவே தரமான குங்குமப்பூ ஆகும். (Asan)
17.
(ஆதாரம்:- நாகர்கோயில், எஸ்.மகாலிங்க ஆசான்
04-12-2016 நாளிட்ட இராணி வார இதழில் எழுதிய கட்டுரை.)
18.
குங்குமப்பூவை தாய்ப் பாலில் குழைத்து கண்கள் மீது பற்று இட்டால் கண் நோய்கள் குணமாகும்
(034)
19.
குங்குமப்பூவுடன் சம அளவு தேன் கலந்து மூன்று நாட்கள் தினசரி இரண்டு வேளை உட்கொண்டு வந்தால் சுவாசக் குழாய் அலர்ஜி தீரும்.(135) குடல் புண்கள் குணமாகும் (174)
20.
குங்குமப் பூவைத் தாய்ப் பால் விட்டுக் அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டால் தலைவலி குணமாகும்
.(408)
21.
குங்குமப்பூவுடன் தேன் கலந்து தினசரி சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். (565)
22.
குங்குமப்பூவை இடித்து தூள் செய்து வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டி தேன் கலந்து தினசரி சாப்பிட்டுவந்தால் குடல் புண்கள் குணமாகும்.(174) (711)
23.
குங்குமப்பூவுடன் துளசி இலைகள் சிலவற்றைச் சேர்த்து அரைத்துக் கொடுத்தால் அம்மை நோய் மட்டுப்படும்.(1005)
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam77@gmail.com]
ஆட்சியர்,
தமிழ் மூலிகை வலைப்பூ,
[தி.பி:2052,விடை(வைகாசி
)04]
{18-05-2021}
குங்குமப்பூ |
குங்குமப்பூ |
குங்குமப்பூ |
குங்குமப்பூ |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக