01. குன்றிமணியில் வெண்மை, கருமை, செம்மை, மஞ்சள், நீலம் என ஐந்து வகைகள் இருக்கின்றன. இவற்றுள் வெண்மை, கருமை, செம்மை ஆகிய மூன்று மட்டுமே முக்கியமானவை.
02.
பூக்கள்
வெண்மையாயிருப்பின் விதையும் வெண்மையாயிருக்கும்.
03.
குன்றிமணி கொடி வகையைச் சேர்ந்தது. குன்றிமணி இலையை மென்று சாற்றை விழுங்குவதால் குரல்
கம்மல் நீங்கும்.
04.
எள் எண்ணெய் அல்லது
தேங்காய் எண்ணெயுடன் குன்றிமணி இலைச் சாற்றைக் கலந்து வலியுள்ள வீக்கங்களுக்குப் பூசிவர வீக்கம் நீங்கும்.
05.
குன்றிமணி விதையைத் தனியாகவோ, மற்ற மருந்துகளுடனோ சேர்த்து அரைத்து, அடிபட்ட வீக்கம், வலி, கீல்வாயு, பக்க
வலி, முடியுதிரல்
முதலியவைகளுக்குத் தரலாம்.
06.
வெள்ளைக்
குன்றிமணி வேரை வெள்ளாட்டு மூத்திரத்தில் ஊற வைத்து உலர்த்தி பாம்பு, தேள் முதலியவற்றின்
நஞ்சுக்குக் கொடுக்க அது உடனே தீரும். இதற்கு விடதாரி
என்று பெயர்.
07.
சிவந்த
குன்றிமணிப் பருப்பினால் கணணோய், அழல்
நோய், மாறு நிறம், காமாலை, வியர்வையோடு கூடிய மூர்ச்சை சுரம் ஐய (கபம்) நோய் ஆகியவை தீரும்.
08.
மலை வெண் குன்றி
வேரையே அதிமதுரம் என்று சிலர் கூறுகிறார்கள். இது
தவறு.
09.
குன்றிமணி
இலையைக் கொண்டுவந்து இடித்துப் பிழிந்து சாறு எடுத்து வாய்ப்
புண்களுக்குத் தடவினால் புண்கள் குணமாகும்.
10.
வயதாகியும் ஒரு
சில பெண்கள் பூப்பு அடையாமலிருப்பது உண்டு. குன்றிமணி இலையை எடுத்து சமனளவு
எள்ளும் அதே அளவு வெல்லமும் சேர்த்து இடித்து எலுமிச்சம் பழ அளவுக்கு உள்ளுக்குக்
கொடுத்துவிட்டால், 24 மணி நேரத்திற்குள் பூப்பு அடைவார்கள்.
இரத்தப் போக்கு அதிகமாக இருந்தால், வாழைக்காயைத் தோலைச் சீவிவிட்டுக் காயை மட்டும் தின்னக் கொடுக்க
வேண்டும். குன்றி மணி இலை மருந்தை ஒரு முறை தான் கொடுக்க வேண்டும்.
11.
குன்றிமணி இலைச் சாறுடன் வெண்கொடி வேலி வேரும்
சேர்த்து அரைத்து வெண்புள்ளிகள் உள்ள இடங்களில்
தடவி வந்தால் வெண்புள்ளிகள் மறையும்.
(774) (1010)
12.
குன்றிமணியும் வெந்தயமும் எடுத்து பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து, 7 நாட்களுக்குப் பின் எண்ணெயைத் தலைக்குத் தடவி வந்தால் முடி உதிர்வது நிற்கும்.(927)
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
=================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam77@gmail.com]
ஆட்சியர்,
தமிழ் மூலிகை வலைப்பூ,
[தி.பி:2052,விடை(வைகாசி
)04]
{18-05-2021}
=================================================
குன்றிமணி |
குன்றிமணி |
குன்றிமணி |
குன்றிமணி |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக