01. மிளகுக் கொடிகளைப் படரவிட இதை
வளர்ப்பார்கள். காப்பிப்
பயிர்களுக்கு இடையிலும்
நிழலுக்காக வளர்ப்பார்கள்
.
02. இது
சுமார் 85 அடி உயரம் வரை வளரக்கூடியது. இதன்
இலைகள் அகன்றும் பெரிதாகவும் இருக்கும். இதன்
மலர்கள் அதிக சிவப்பாக இருக்கும்.
03. . உருட்டு
விதைகளையும் முட்களையும் கொண்ட மென்மையான கட்டைகளையும் உடைய மரம். விதைகள்
கருப்பாக இருக்கும்.
04. முருக்க மரம் என்றும் வழங்கப்பெறும். கட்டைகளை வெட்டி ஈரத்தில் நட்டால் உயிர் பிடித்து வளரும். விதை மூலமும் இனப்பெருக்கம் செய்யப்படும்.
05. கல்யாணமுருங்கை மரத்தில் பயன் தரும் பாகங்கள் மரத்தின் இலை, பூ, விதை, பட்டை
ஆகியவை ஆகும்.
06. இது
துவர்ப்பும் கசப்பும் கலந்த சுவையுடையது. இலை
சிறுநீர் பெருக்கும்; மலமிளக்கும்; தாய்பால்
பெருக்கும்; வாந்தி, வயிற்றுவலி, பித்த
சுரம்,
உடல்
வெப்பம், வாய் வேக்காடு, வயிற்றுப்புழு, ஆகியவற்றை
நீக்கும். மாதவிலக்குத்
தூண்டல் செய்கையும் உடையது.
07. கல்யாண முருங்கைப்பூ
கருப்பைக் குறை நீக்கியாகவும், பட்டை கோழையகற்றி யாகவும், விதை
மலமிளக்கி குடற்பூச்சிக் கொல்லியாகவும் செயற்படும்.
08. கல்யாண
முருங்கையின் இலைச்சாறு 50 மில்லி 10 நாள்
சாப்பிட மாதவிலக்கில் கடுமையான வலி இருப்பவர்களுக்கு வலி தீரும்.
(617)
09. கல்யாண முருங்கை இலைச்சாறு 15 மி.லி. ஆமணக்கு
நெய் 15 மி.லி. கலந்து
இரு வேளை மூன்று நாள் குடிக்க வயிற்றுக் கடுப்பு
குணமாகும்.
10. கல்யாண முருங்கை இலைச் சாறு 50 மி.லி. தேன்
20 மி.லி. கலந்து
சாப்பிட மலக் கிருமிகள் வெளியேறும்.
11. கல்யாண முருங்கை இலைச்சாறு நாளும் 50 மி.லி. 40 நாள்
குடித்து வர பெண் மலடு
நீங்கி கரு தரிக்கும். நீர்த்தாரை எரிச்சல் குணமாகும். உடலும்
இளைக்கும்.
12. கல்யாண முருங்கை இலையை நறுக்கி, வெங்காயம்
போட்டு தேங்காய் நெய் (தேங்காயெண்ணெய்) விட்டு
வதக்கி 5 முறை சாப்பிட பூப்பு எய்தாத பெண் குழந்தைகள் பருவமடைவர். குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு
பால் சுரக்கும்.
13. கல்யாண முருங்கை இலைச்
சாறு 30 மி.லி.யுடன்
பூண்டுச்சாறு 30 மி.லி.சேர்த்து
அரிசி கஞ்சியில் கலந்து 30 நாள் சாப்பிட சுவாசகாசம் குணமாகும். ( சுவாச காசம் என்பது ஆஸ்துமா,) ஆஸ்துமா குணமாகும். புலால், புகை, போகம்
தவிர்க்கவும்.
14. கல்யாண முருங்கை இலைச்
சாறு 60
மி.லி எடுத்து 15 கிராம் உப்பு சேர்த்து காலை நேரத்தில் அருந்தினால் பேதியாகும். பேதியில் பூச்சி வெளியேறும்.
15. கல்யாண முருங்கை இலைச் சாறு, தேங்காய், மஞ்சள்
சேர்த்து அரைத்து மேல் பூச்சாகப் பூசி குளிக்க சொறி சிரங்கு
தீரும்.
16. கல்யாண முருங்கை இலைச்சாறு 10 மி.லி.யுடன்
வெந்நீர் 10 மி.லி. கலந்து
குழந்தைக்கும் கொடுக்க கீரிப்பூச்சி வெளியேறும். கபம், இருமல்
தீரும்.
17. கல்யாண முருங்கை மரப்பட்டையை 10
கிராம் எடுத்து 100 மி.லி. பாலில்
ஊறவைத்து ஒரு மணிக்கு 20 மி.லி. வீதம்
அந்தப் பாலைக் கொடுத்து வந்தால் நிற்காத வயிற்றுக் கடுப்பு குணமாகும்.
18. கல்யாண முருங்கை இலையை வதக்கி இளஞ்சூட்டுடன்
வைத்து நாளும் கட்டிவர அரையாப்புக் கட்டி, வீக்கம் கரையும்.
19. கல்யாண முருங்கை இலைச் சாறு ஒரு தேக்கரண்டி மோரில் கலந்து
குடிக்க நீர்தாரை அழற்சி, நீர் எரிச்சல்
தீரும்.
20. கல்யாண முருங்கை இலைச்சாற்றில் 5 அரிசி
எடை விதைப்பருப்பு, சூரணம் சேர்த்து சாப்பிட குடற் பூச்சிகள் வெளியேறும்.
21. கல்யாண முருங்கை இலை அடை சுட்டுச் சாப்பிட்டால் நெஞ்சுச் சளி வெளியேறும்.
22. கல்யாண முருங்கை இலைச் சாறினை எடுத்து சிறிது உப்பு சேர்த்துக் கலக்கி கரும்படை மீது தடவி வந்தால் சில நாட்களில் கரும்படை மறையும். (1017)
===========================================================
மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்” என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ் அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள் மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam77@gmail.com]
ஆட்சியர்,
தமிழ் மூலிகை வலைப்பூ,
[தி.பி:2052,மேழம்(சித்திரை)17]
{30-04-2021}
கல்யாண முருங்கைப் பூ |
கல்யாண முருங்கை இலை |
கல்யாண முருங்கை மரம் |
கல்யாண முருங்கை |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக