மூலிகைப் பெயர்...........................................கண்டங்கத்தரி
மாற்றுப் பெயர்கள்.............................கண்டகாரி, கடுமுன்
........................................................கண்டகாரிகை, காரளிகம்
..............................................................காரி,சுந்தரம், தாவணி
......................................................................நித்தியம், நித்திரம்
....................................................................பிரகதி,.பிரகநித்தரி
..............................................................பூட்டுக்கனி வியாக்கிரி
............................................................................கண்டுகபநாசம்
தாவரவியல் பெயர்......................SOLANUM INDICUM LINN
ஆங்கிலப்
பெயர்..........................................WILD
EGG PLANT
சுவை......................................................,,........................கார்ப்பு
தன்மை..........................................................................வெப்பம்
================================================
1) முள்ளுள்ள மாற்றடுக்கில் அமைந்த இலைகளையும், நீல நிற மலர்களையும், கத்தரிக்காய் வடிவிலான உருண்டையான சிறு காய்களையும், மஞ்சள் நிறப் பழங்களையும் உடைய, நேராக உயர்ந்து செல்லும் சிறு செடியினம்.
2) இலை, பூ, காய், பழம், விதை, பட்டை, வேர் ஆகியவை மருத்துவப் பயன் உடையவை. (Asan)
3) கோழை அகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயற்படும்.
4) பழத்தை உலர்த்தி நெருப்பிலிட்டு வாயில் புகை பிடிக்க, பல்வலி, பல் அரணை தீரும்.
5) கண்டங்கத்தரி வேர் 30 கிராம், சுக்கு 5 கிராம், சீரகம் 2 சிட்டிகை, கொத்தமல்லி ஒரு பிடி ஆகியவற்றை 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி 4 முதல் 6 முறை 100 மி.லி. வீதம் குடிக்க குளிர்காய்ச்சல், சளிக்காய்ச்சல், நுரையீரல் பற்றிய எந்த சுரமும் தீரும்.
6) கண்டங்கத்தரி சமூலம் ஒரு பிடி, ஆடாதோடை இலை ஒரு பிடி, விஷ்ணுகாந்தி, பற்படாகம் இரண்டும் ஒரு பிடி, சீரகம், சுக்கு வகைக்கு 10 கிராம் சிதைத்து 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி4 முதல் 6 முறை 100 மி.லி வீதம் சாப்பிட புளூ (Flu) சுரம், நிமோனியா சுரம், மண்டை நீரேற்றக் காய்ச்சல் முதலியவை தீரும்.
7) கண்டங்கத்தரி வேர், ஆடாதோடை வேர் வகைக்கு 40 கிராம், அரிசித்திப்பிலி 5 கிராம் சிதைத்து 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி 100 மி. லி வீதம் தினம் 4 வேளை குடிக்க இரைப்பிருமல் (ஆஸ்துமா) என்புருக்கி ( T.B ),ஈளை, இருமல், கப இருமல், பீனிசம் தீரும்
8) கண்டங் கத்தரி இலைச் சாற்றில் எண்ணெய் கலந்து காய்ச்சிப் பூசிவர, தலைவலி, கீல்வாதம், அக்குள் நாற்றம் முதலியவை நீங்கும்
9) கண்டங்கத்தரிப் பூவை வாதுமை நெய்யில் சேர்த்துக் காய்ச்சிப் பூச, எருவாய் (ஆசனவாய்) முளையைப் போக்கும்.
10) கண்டங் கத்தரிப் பழத்தை குழைய வேக வைத்துக் கடைந்து வடிகட்டி எடுத்த அளவுக்கு 5-க்கு ஒன்று எள் எண்ணெய் சேர்த்துக் காய்ச்சி கடுகு திரள வடித்து வைத்துக் கொண்டு வெண் புள்ளிகள் மீது பூசி வர, வெண்மை மறைந்து உடல் நிறமடையும்.
11) கண்டங்கத்தரிப் பழத்தை வேகவைத்து நன்றாக மசித்து வடிகட்டி, அதனுடன் தேங்காயெண்ணெய் கலந்து காய்ச்சி உடலில் தடவி வந்தால் வெண்புள்ளிகள் மறையும்.
12) கண்டங்கத்தரியின் வேரைக் கசாயம் செய்து குடித்து வந்தால், சளி காய்ச்சலுக்கு நல்லது, காயைச் சமைத்து உண்டு வந்தால் பசியைத் தூண்டும். சளியை வெளியேற்றும். (Asan)
13) கண்டங்கத்தரி விதையை நீரில் அரைத்துப் பற்றுப் போட்டு வந்தால் கை, கால் வீக்கத்தைப் போக்கும். (Asan)
14) கண்டங்கத்தரி இலைச் சாறு, தேங்காயெண்ணெய் அல்லது ஆளி விதை எண்ணெய் சேர்த்துக் காய்ச்சி பாதங்களில் தடவினால் பித்த வெடிப்புகள் சீராகும். (Asan)
15) கண்டங்கத்தரி இலைச் சாற்றை தேங்காயெண்ணெயில் கலந்து கொதிக்க வைத்து ஆறிய பின் பூசினால் வியவை நாற்றத்தைப் போக்கும். (Asan)
16) கண்டங்கத்தரி இலைச் சாற்றை சம அளவு நல்லெண்ணையுடன் கலந்து பக்குவமாக்க் காய்ச்சிப் பூசினல் தலைவலி, வாத நோய்கள் கட்டுப்படும். (Asan)
17) மண்பானையில் தண்ணீர் ஊற்றி கண்டங்கத்தரி இலைகளைப் போட்டு வேகவைத்த நீரில் குளிப்பாட்டி வந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் இளம்பிள்ளை வாத நோய் தணியும். (Asan)
18) கண்டங்கத்தரிப் பழத்தைக் காய வைத்துப் பொடித்து அரைத் தேக்கரண்டி எடுத்து தேனில் குழைத்து காலை மாலை இரு வேளை சாப்பிட்டு வந்தால் நாட்பட்ட இருமல் விலகும். (Asan)
19) கண்டங்கத்தரிப் பழங்களைத் தொடர்ந்து உண்டு வந்தால் இளைப்பு குறையும்; உடல் வலிமை பெறும். (Asan)
20) கண்டங்கத்தரி, துளசி, தூதுவேளை இலைகளைச் சம அளவு எடுத்து நீரில் இட்டு சுண்டக் காய்ச்சி உட்கொண்டு வந்தால் ஆஸ்துமா, சளிக்கு நல்ல நிவாரணியாகும். (Asan)
21) கண்டங்கத்தரி வேரைக் காயவைத்து பொடித்துக் கசாயம் வைத்து, சிறிதளவு திப்பிலிப் பொடியும் தேனும் கலந்து உண்டால் தொற்று நோய்களைத் தடுக்கும்(Asan)
22) நிழலில் உலர்த்திய கண்டங்கத்தரி வேரையும், புதினா இலைகளையும் நன்றாகப் பொடித்துப் பல் துலக்கி வந்தால் பல் வலி வராது. (Asan)
23) கண்டங்கத்தரி இலைச் சாறுடன் சிறிதளவு பச்சைக் கற்பூரம் சேர்த்து தலையிலும் உச்சியிலும் தேய்த்தால் தலைவலி நீங்கும். (Asan)
24) பச்சையாகப் பறித்த கண்டங்கத்தரி காயைக் கசாயமாக்கி, பனை வெல்லம் சேர்த்து அருந்தலாம். அல்லது செடியை நிழலில் உலர்த்தி, பொடித்து, தேன் கலந்து காலையில் உணவுக்கு முன் உட்கொண்டு வந்தால் சுவாசக் கோளாறுகள் சீரடையும். (Asan)
25) கண்டங்கத்தரிப் பூக்கள் 100 கிராம் எடுத்து நிழலில் உலர்த்தி, சீரகம், திப்பிலி, நெல்லி முள்ளி சேர்த்துப் பொடித்து, தினமும் இரண்டு கிராம் வீதம் பாலில் கலந்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை சீரடையும். (Asan)
26) கண்டங்கத்தரி வேர், சிற்றரத்தை, சுக்கு, சோம்பு ஆகியவை தலா 20 கிராம் எடுத்து பால் விட்டு அரைத்து 250 மி.லி நல்லெண்ணெய் விட்டுக் காய்ச்சி, தலையில் தேய்த்துக் குளித்து வந்தால், தலைவலி, தலை பாரம், தும்மல் ஆகியவை குணமாகும். (Asan)
27) கண்டங்கத்தரி இலைச் சாறு, வாதநாராயணன் இலைச் சாறு, முடக்கத்தான் இலைச் சாறு ஆகியவற்றை வகைக்கு 100 மி.லி எடுத்து, ஒரு லிட்டர் நல்லெண்ணெய் சேர்த்துக் காய்ச்சி, பிறகு 50 கிராம் பச்சைக் கற்பூரம்பொடி செய்து சேர்த்து சூடு செய்து கால் மூட்டுகளில் தேய்த்து வெந்நீர் ஒற்றடம் கொடுத்து வந்தால் மூட்டு வலி கட்டுப்படும். (Asan)
28) கண்டங்கத்தரிக் காயை சாம்பார் செய்து சாப்பிடலாம். பிற வகைகளிலும் பயன் படுத்தலாம். (Asan)
29) கண்டங்கத்தரி, ஆடாதொடை, இண்டு, இசங்கு, சுக்கு, திப்பிலி, துளசி, தூதுவேளை, வால்மிளகு ஆகியவை தலா 2 கிராம் எடுத்து பொடித்து 2 தம்ளர் நீரில் கொதிக்க வைத்து, காய்ச்சி, வடிகட்டி அருந்தினால் ஆஸ்துமா, வலிப்பு நோய்கள் குணமாகும். (Asan)
30) (ஆதாரம்: தொ.எண் 12 முதல் 29 வரை, நாகர்கோயில் எஸ். மகாலிங்க ஆசான் 25-12-2016 நாளிட்ட இராணி வார இதழில் எழுதிய கட்டுரை.)
31) கண்டங்கத்தரி இலைகளை எடுத்துச் சாறு பிழிந்து தேங்காய் எண்ணெயில் கலந்து கை கால் தோல் வெடிப்புக்குத் தடவி வந்தால் விரைவில் குணமாகும். (125)
32) கண்டங்கத்தரி இலைகளை எடுத்து நீர் விட்டு அரைத்து கைகால் வீக்கத்திற்குப் பற்றுப் போட்டு வந்தால் வீக்கம் குறையும். (581)
33) கண்டங்கத்தரிப் பழத்தை எடுத்து உலர்த்தி நெருப்பில் இட்டு வாய்க்குள் புகை இழுத்தால் பல்வலி, ஈறு வலி குணமாகும். (229)
34) கண்டங்கத்தரி வேர், நில வேம்பு வேர் வகைக்கு ஒருகைப்பிடி அளவு எடுத்து அத்துடன் 10 கிராம் சுக்கும் சேர்த்து அரை லிட்டர் தண்ணீரில் காய்ச்சி வடிகட்டி வேளைக்கு 30மி.லி வீதம் மூன்று வேளைகள் கொடுத்தால் மலேரியா காய்ச்சல் குணமாகும். (131) (200)
35) கண்டங்கத்தரி வேர் எடுத்து மைய அரைத்து வெள்ளாட்டுப் பாலில் கலந்து காய்ச்சி குழந்தைகளுக்குக் கொடுத்தால் தொடர் இருமல் குணமாகும்.(143)
36) கண்டங்கத்தரி வேர் 30 கிராம், சுக்கு 5 கிராம், கொத்துமல்லி விதை ஓரு கைப்பிடி, சீரகம் ஒரு சிட்டிகை ஆகியவை சேர்த்துக் கசாயம் வைத்து வேளைக்கு 30 மி.லி வீதம் குடித்து வந்தால் சளிக் காய்ச்சல் குணமாகும். (1695)
===========================================================
மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்” என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ் அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள் மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !
===================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam77@gmail.com]
ஆட்சியர்,
தமிழ் மூலிகை வலைப்பூ,
[தி.பி:2052,மேழம்(சித்திரை)17]
{30-04-2021}
===================================================
கண்டங்கத்தரி |
கண்டங்கத்தரிப் பழம் |
கண்டங்கத்தரிப் பூவும் செடியும் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக