மூலிகைப் பெயர்.......................................சீயக்காய்
மாற்றுப் பெயர்......................இண்டு, காட்டுசிகை
.....................................................................சிகைக்காய்
தாவரவியல் பெயர்....................ACACIA CONCINNA
ஆங்கிலப் பெயர்.........................................SOAP POD
01. சீயக்காய் ஏறு பற்றுக் கொடி வகையைச் சேர்ந்தது. புதர் போன்று வளரும். இதன் இலை இரட்டைச் சிறகு இலை அமைப்பையும் ( புளிய இலை போன்ற அமைப்பு) பூவானது கோள வடிவில் மஞ்சள் நிறத்திலும், 10 விதைகளுடன் காணப்படும்.
02. சீயக்காயில் வைட்டமின் ”ஏ”, “சி”, “கே”, ஆகியவை உள்ளன.
03. சீயக்காயில், அதன் இலை
மற்றும் காய் ஆகியவையே பயன் தரும் பாகங்கள்.
04. சீயக்காயில் உஷ்ணம் அதிகம். ஆதலால் சோற்றுக் கஞ்சி நீருடன் கலந்து பயன்படுத்த வேண்டும்.
05. சீயக்காய் ஷாம்பூ:- சீயக்காயை அரைத்த பொடி 200 கிராம், வெந்தயப் பொடி 100 கிராம், நெல்லிக்காய்ப் பொடி 100 கிராம், பூந்திக் கொட்டைப் பொடி 100 கிராம், கறிவேப்பிலை ஒரு கைப்பிடி, துளசி இலை ஒரு கைப்பிடி, அனைத்தையும் எடுத்து வெயிலில் காய வைத்து, நன்கு பொடியாக்கி, காற்றுப் புகாத சீசாவில் அடைத்து வைக்க வேண்டும்.. தலைக்குக் குளிக்கும் போது ஷாம்பூவுக்குப் பதில், இந்தப் பொடியை இரண்டு தேக்கரண்டி எடுத்து தண்ணீர் சேர்த்துக் குழைத்து, தலையில் தடவி, அரை மணி நேரம் கழித்து குளித்து வந்தால், முடியின் அடர்த்தி அதிகரிக்கும்.
06. சீயக்காய்ப் பொடியில் தயிர் சேர்த்துக் கலக்கி, தலையில் தடவி 20 நிமிடம் ஊறியபின், குளிர்ந்த நீரில் அலசி வரலாம். முடி நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.
07. நெல்லிகாய், சிகைக்காய், பூந்திக் கொட்டையை ஒன்றாக அரைத்து, தலையில் தடவி, சிறிது நேரம் ஊறவைத்து நீரில் நன்றாகத் தேய்த்து
அலசலாம். முடிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்கும். நரை முடி மறையும். தலையில் ஈரப் பசையைத் தக்க வைக்கும்.
08. தலைக்கு மட்டும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது தவறு. உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்து, சற்று நேரம் ஊறிய பின் சிகைகாய் பயன்படுத்தி தலைக் குளிப்பது உடலுக்கு நலம்தரும்.
09. சிகைக்காய் கலவையை மிகவும் அழுத்தித் தேய்க்கக் கூடாது. மென்மையாகத் தேய்த்துக் குளித்தாலே எண்ணெய் போய்விடும்.
10. இண்டந்தண்டுச் சாறுடன் திப்பிலிப் பொடி, பொரித்த வெண்காரம் ஆகியவை சேர்த்து மூன்று நாட்கள் காலை மட்டும் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகும்.(205)
11. இண்டங்கொடியின் இலை, தண்டு, வேர் இவைகளுடன் தூதுவேளை, கண்டங்கத்தரி, சேர்த்து எட்டில் ஒரு பங்காகக் காய்ச்சி,
வேளைக்கு 30 மி.லி வீதம் மூன்று நாட்கள் ஆறு வேளைகள் கொடுத்தால் தீராத இரைப்பு நோய் குணமாகும்.(125)
===========================================================
மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்” என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ் அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள் மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
=================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam77@gmail.com]
ஆட்சியர்,
தமிழ் மூலிகை வலைப்பூ,
[தி.பி:2052,மேழம்(சித்திரை)17]
{30-04-2021}
=================================================
இண்டு (சிகைக்காய்க் கொடி) |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக