மூலிகைப்
பெயர்..........................................இலந்தை
மாற்றுப் பெயர்கள்........................குல்லரி, குல்வலி
............................................கோல்,கோற்கொடி, வதரி
தாவரவியல்
பெயர்........................................................
ஆங்கிலப் பெயர்..............BHIR
TREE, JUJUBE TREE
01. இலந்தை மரத்தின் துளிர்களைப் பறித்து வந்து சிறிது உப்புப் போட்டு இரண்டு தம்ளர் நீர் ஊற்றிக் கொதிக்க வைத்து, ஆறியபின், அந்த நீரைக் கொண்டு வாய் கொப்பளித்து வந்தால் தொண்டைப்புண், ஈறுகளில் இரத்தம் வடிதல் சரியாகும். (250)
02. இலந்தை இலைகளைப் பறித்து வந்து நீர் விடாமல் மைய அரைத்து வெட்டுக் காயத்தின் மீது பூசி வந்தால் காயம் விரைவில் ஆறும். (526)
03. இலந்தை இலை வீக்கம் குறைக்கும்;--இலந்தை மரப் பட்டை வயிற்றுக் கடுப்பினைத் தீர்க்கும். – இலந்தை வேர் பசியைத் தூண்டி புத்துணர்ச்சியை உண்டாக்கும்.—இலந்தைப் பழம் செரிமான ஆற்றலைப் பெருக்கும்.—இலந்தைக் கொட்டை வர்மப் பிடிப்பை விலக்கும்.(628)
04. இலந்தை இலைகளை எடுத்து சாறு பிழிந்து உள்ளங் கை, உள்ளங் கால்களில் தடவினால் உள்ளங் கை, உள்ளங் கால்களில் வேர்ப்பது நிற்கும்.(965)
05. இலந்தை இலைகளைப் பறித்து குடி நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிட்டு, மறுநாள் காலையில் அந்த நீரை அருந்தி வந்தால் உடல் எடை குறையும்.(1710)
06. இலந்தைப் பழம் இரத்தத்தைச் சுத்தப் படுத்தி சுறு சுறுப்பாக்கும். பசியைத் தூண்டும் (532)
07. இலந்தைப் பழம் வாந்தி, குமட்டல் ஆகியவற்றைத் தடுக்கும். ,உடல் வலியைப் போக்கும்.(1245)
08. இலந்தைப் பழம், கனிந்தபழம், சாப்பிட்டால் மூளை சுறு சுறுப்பு அடையும். புத்துணர்ச்சியும் பெறும்.(1259)
09. இலந்தைப் பழம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நெஞ்சு வலியைக் குணமாக்கும். (1871)
10. இலந்தைப் பூவை எடுத்து சுத்தம் செய்து மைபோல் அரைத்து உடல் முழுவதும் பூசிக் கொண்டால் உடல் எரிச்சல் தீரும்.(746) (999)
11. இலந்தை வேர்க் கசாயத்தை தொடர்ந்து 48 நாட்கள் குடித்து வந்தால் நரம்புகள் சுறு சுறுப்பு அடையும்.(1758)
===========================================================
மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்” என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ் அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள் மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
==================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam77@gmail.com]
ஆட்சியர்,
தமிழ் மூலிகை வலைப்பூ,
[தி.பி:2052,மேழம்(சித்திரை)17]
{30-04-2021}
==================================================
இலந்தை |
இலந்தைப் பழம் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக