மூலிகைப் பெயர்............................................இலுப்பை
மாற்றுப் பெயர்கள்..........................சூலிகம், மதுரகம்
...............................................................................இருப்பை
தாவரவியல் பெயர்...........................................................
ஆங்கிலப் பெயர்..............................BASSIA,
MAHWAH
====================================================
01. இலுப்பை மரம் பெரு மர வகையைச் சேர்ந்த்து. இதன் இலைகள் நீளவாக்கில் சற்று பெரியதாக இருக்கும்.
02. இலுப்பைப் பூ மிகுந்த மணம் உள்ளவை. இப்பூவை சற்று வதக்கி வெல்லம் சேர்த்துச் சாப்பிட்டால் மிகுந்த சுவையாக இருக்கும்.
03. இலுப்பைவிதைகள் 3 செ.மீ நீளம் வரை இருக்கும். விதைகளைச் செக்கில் இட்டு எண்ணெய் பிழிவது வழக்கம். இலுப்பை எண்ணெய் விளக்கு எரிக்கப் பயன்படும்.
04. கூழ் போல் மஞ்சள் நிறத்தில் இருக்கும் இந்த எண்ணெயை அடுப்பில் வைத்துச் சூடாக்கி சிறு உருண்டை புளியைப் போட்டு முறித்து, அதன் பின்பு அதை பலகாரம் செய்யப் பயன் படுத்துவார்கள்.
05. இலுப்பைப் பூவைக் கசாயமாக்கி, அந்தக் கசாயத்தில் கால்களைக் கழுவி வந்தால், பெரியவர்களுக்கு, கால்களில் உள்ள புண்கள் ஆறும்.(451)
06. இலுப்பைப் பூவை வைத்துக் கட்டி வந்தால், ஆண்களுக்கு வருகின்ற விதை வீக்கம் குணமாகும்.(520)
07. அரப்புப் பொடி, சுக்கு, கடுக்காய் ஆகியவற்றைச் சமமாக எடுத்து பிரயான் மரப் பட்டைத் தைலத்தில் இவற்றைச் சேர்த்து, மெழுகு போல் அரைத்து பற்பொடி போல பல் துலக்கி வந்தால் அனைத்து விதமான பல் நோய்களும் குணமாகும்.(232)
08. அரப்பு என்று அழைக்கப்படுகின்ற இலுப்பைப் பிண்ணாக்கை எடுத்து அரைத்துப் பசையாக்கி அனலில் காட்டி இளஞ்சூட்டில் கட்டினால் வாத வீக்கம் சரியாகும்.(1115)
09. அரப்புப் பொடியை எடுத்து சிறிது நீர் விட்டுக் குழைத்து சற்று சூடாக்கி இளஞ் சூட்டில் வீக்கங்களுக்குக் கட்டலாம். வீக்கம் குணமாகும்.(1736)
===========================================================
மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்” என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ் அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள் மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
===============================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam77@gmail.com]
ஆட்சியர்,
தமிழ் மூலிகை வலைப்பூ,
[தி.பி:2052,மேழம்(சித்திரை)17]
{30-04-2021}
===============================================
இலுப்பை |
இலுப்பை விதை |
இலுப்பைப் பூ |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக