இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

வெள்ளி, 30 ஏப்ரல், 2021

இலவங்கம் (கிராம்பு).

 

                     மூலிகைப் பெயர்.......................................இலவங்கம்

 மாற்றுப் பெயர்கள்....................அஞ்சுகம், உற்கடம்

 ...................................................................கிராம்பு, திரளி

 தாவரவியல் பெயர்..........................................................

 ஆங்கிலப் பெயர்........................CINNAMON FLOWER

 

 ==============================================

 

01.   இலவங்கப் பட்டையை வாரத்தில் இருமுறை உணவுடன் பயன்படுத்தி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் ஒழியும். தாது விருத்தி ஆகும். (796)

 

02.   இலவங்கப் பொடியை நீரில் இட்டு அரை மணி நேரம் ஊற வைத்து வடிகட்டிப் பருகி வந்தால் கர்ப்பகால வாந்தி (மசக்கை வாந்தி) நிற்கும். (282)

 

03.  இலவங்கம், ஆலமர விதை, வெற்றிலைக் காம்பு ஆகியவற்றை சம அளவு எடுத்து சிறிது பால் ஊற்றி அரைத்து பசையாக்கி சற்று சூடாக்கி நெற்றிப் பொட்டிலும் உச்சந்தலையிலும் பற்றுப் போட்டால் தலைவலி குணமாகும். (402)

 

04.  இலவங்கம் 1, நொச்சி இலை 4, மிளகு 4, பூண்டுப் பல் 4, ஆகியவற்றை எடுத்து மென்று விழுங்கி வந்தால் ஆஸ்துமா தீரும் .(1440)


05. கிராம்பைத் தணலில் வதக்கி வாயிலிட்டுச் சுவைக்க, தொண்டைப் புண் ஆறும் .(075)


06.  கிராம்பு, வேப்பம் பட்டை, நிலவேம்பு இம்மூன்றையும் சம அளவு எடுத்து 200 மி.லி நீரில் இட்டுக் கொதிக்கவைத்து, அந்த நீரை அருந்தி வந்தால் நல்ல பசி உண்டாகும். (273)


07.  கிராம்புப் பொடியை அரை கிராம் எடுத்து தேனில் குழைத்து காலை மாலை  உள்ளுக்குச் சாப்பிட்டால் உள்ளுறுப்புகள் பலமடையும் .(611)


08.  கிராம்புப் பொடி அரை கிராம் எடுத்து பனை வெல்லத்துடன் சேர்த்து மாதவிடாய்க் காலத்தில் உள்ளுக்குச் சாப்பிட்டால் உதிரச் சிக்கலால் ஏற்படும் வயிற்று வலி தீரும். (635)


09.  கிராம்பு, சுக்கு, மிளகு, பச்சைக் கற்பூரம் இவைகளை சம அளவு எடுத்து இடித்து அதை வெள்ளைத் துணியில் சிறு பொட்டலமாக  வைத்துக் கொண்டு முகர்ந்து வந்தால் மூச்சிரைப்பு (ஆஸ்துமா) குறையும். (1072)


10.  கிராம்புத் தைலத்திலிருந்து இரண்டு சொட்டுகள் பல்வலிக்கு வைக்கலாம். வலி தீரும் .(226)


11.  இலவங்கப் பட்டையில் கால்சியம், பொட்டாசியம், மெக்னீஷியம், பாஸ்பரஸ், வைட்டமின்”, “கேஆகியவை உள்ளன,. (Harish)

 

12.  இலவங்கப் பட்டைத் தூள் ஒரு தேக்கரண்டி அளவுக்கு எடுத்து வெந்நீரில் கலந்து அருந்தி வந்தால் இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கும். மேலும் இரத்த அழுத்தத்தையும் சீர்படுத்தும். (Harish)

 

13.  இலவங்கப் பட்டைத் தூள் தினமும் ஒன்று முதல் ஆறு கிராம் வரை உணவாகவும் அல்லது மருந்தாகவும் எடுத்துக் கொண்டால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும். (Harish)

 

14.  இலவங்கப் பட்டைத் தூள் ஒரு தேக்கரண்டி அளவுக்கு எடுத்து தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து தினம் இரு வேளைகள் அருந்தி வந்தால் நரம்புகள் வலுப் பெறும். மேலும் பக்கவாத்ததால் பாதிப்பு அடைந்தவர்களுக்கு இது பெரிதும் உதவும். (Harish)

 

15.  இலவங்கப் பட்டைப் பொடியை பற்பொடியாக்கி பல் துலக்கி வந்தால் பல் வலி, வாயில் ஏற்படும் நாற்றம், பல் சொத்தை ஆகியவை நீங்கும். (Harish)

 

16.  இலவங்கப் பட்டைத் தூள் அரைத் தேக்கரண்டி எடுத்து தேன் விட்டுக் குழைத்து உள்ளுக்குச் சாப்பிட்டு வந்தால் கருப்பை கட்டிகள், ஒழுங்கற்ற மாதவிடாய்,  ஆகியவை சரியாகும். (Harish)

 

17.  இலவங்கப் பட்டைத் தூளைப் பாலுடன் கலந்து முகத்தில் தடவி வந்தால், முகத்தில் உள்ள கரும் புள்ளிகள் மறையும். முகமும் பொலிவு பெறும். (Harish)

 

18.  இலவங்கப் பட்டைத் தூள் அரைத் தேக்கரண்டி எடுத்து தேஎனுடன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு ஆற்றல் பெருகும். (Harish)

 

19.  இலவங்கப் பட்டைத் தூள் ஒரு தேக்கரண்டி எடுத்து, இரு தேக்கரண்டி தேன் விட்டுக் குழைத்து தினமும் மூன்று வேளைகள் சாப்பிட்டு வந்தால் நாட்பட்ட மூட்டு வலியும் தீரும். (Harish)

 

20.  இலவங்கப் பட்டைத் தூள் அரைத் தேக்கரண்டி எடுத்து ஒரு தேக்கரண்டி தேனில் குழைத்து உணவுக்கு முன் உள்ளுக்குச் சாப்பிட்டால், செரிமான ஆற்றல் மிகுதியாகும். (Harish)

 

21.  இலவங்கப் பட்டைத் தூள், முட்டையின் வெள்ளைக் கரு, ஆலிவ் எண்ணெய் ஆகியவற்ரைக் கலந்து முடியில் தடவி சற்று நேரம் கழித்து தலையைக் கழுவி வந்தால் உடைந்த முடி சீர்பெறும். (Harish)


22.  (ஆதாரம்: தொ.எண் 11 முதல் 21 வரை, வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ் மருத்துவ மனை முதன்மை மருத்துவ அதிகாரி டாக்டர் வெ. ஹரிஷ் அன்புச் செவன் M.D.(s)., அவர்கள் 23-12-2017 நாளிட்ட தினமலர் நாளிதழின் இணைப்பான பெண்கள் மலரில் எழுதிய கட்டுரை.)


===========================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்,  பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

  சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க ! 

===============================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,மேழம்(சித்திரை)17]

{30-04-2021}

 

===============================================

இலவங்கம்

இலவங்கம்



இலவங்கம் (எனப்படும்) கிராம்பு





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக