இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

வெள்ளி, 30 ஏப்ரல், 2021

இன்புறா

               மூலிகைப் பெயர்..................................................இன்புறா

       மாற்றுப் பெயர்கள்...........................இம்பூறல், சிறுவேர்

       .......................................................இன்புளூவேர், சாயவேர்

       தாவரவியல் பெயர்.............OLDENLANDIA UMBELLATE

       சுவை..........................................................................இனிப்பு

       தன்மை....................................................................குளிர்ச்சி


=================================================

 

01.          இன்புறா வெண்மையான மிகச்சிறிய மலர்களையும், சிறிய ஈட்டி வடிவ இலைகலையும் உடைய மிகக் குறுஞ் செடி. மழைக் காலங்களில் எல்லா இடங்களிலும் தழைத்திருக்கும்.

 

02.          இன்புறா முழுச் செடியும் மருத்துவப் பயன் உடையது. கோழை அகற்றியாகச் செயல் படக்கூடியது. இரத்த விருத்தி செய்யும்.

 

03.          இன்புறா இலைச் சாற்றைத் தடவிவரச் சுர வேகத்தில் காணும் உள்ளங்கால், உள்ளங்கை எரிச்சல் தீரும்.

 

04.          இன்புறா, வல்லாரை வகைக்கு 40 கிராம் சிதைத்து அரை லிட்டர் நீரில் போட்டு 150 மி.லி யாகக் காய்ச்சி காலை மாலை இரு வேளையும் 30 மி.லி வீதம் கொடுத்து வரச் சுவாசகாசம், இருமல் குணமாகும்.

 

05.          இன்புறா வேரை நிழலில் உலர்த்தித் தூள் செய்து அதில் 10 கிராம் எடுத்து அரிசி மாவில் கலந்து  இரண்டொரு அடை செய்து காலை மாலை சாப்பிடக் கபரோகம் (நெஞ்சுச் சளி) அனைத்தும் தீரும்.

 

06.          இன்புறா இலையின் பொடியை இரண்டு பங்கு அரிசி மாவுடன் கலந்து அடையாகச் செய்து சாப்பிட்டால், இருமல் இரைப்பு, இருமல், சளி முதலியன போகும்.

 

07.          இன்புறா இலையின் சாற்றைப் பாலுடன் கலந்து சர்க்கரை இட்டுச் சாப்பிட்டு வர மார்பு ( நெஞ்சு ) எரிச்சல் நீங்கும்.

 

08.          இன்புறா  இலையையும் வேரையும் சேர்த்து 1-க்கு 20 பங்கு நீர் சேர்த்துக் குடிநீர் இட்டு, நஞ்சுக் கடிகளினால் உண்டான புண்களைக் கழுவலாம். 50 மி.லி முதல் 100 மி.லி வரை உட்கொள்ள, இருமல், இரைப்பு, இளைப்பு முதலிய நோய்கள் தணியும்.

 

09.          இன்புறா இலைகளைச் சேகரித்து, அரைத்து, சாறு எடுத்து எரிச்சல் உள்ள இடங்களில் தடவி வந்தால் காய்ச்சலால் உண்டான உடல் எரிச்சல் தீரும் (122)


===========================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்,  பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

  சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க ! 


=================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,மேழம்(சித்திரை)17]

{30-04-2021}

 

=================================================

இன்புறா

இன்புறா




 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக