இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

வெள்ளி, 30 ஏப்ரல், 2021

எள்.

 

                   மூலிகைப் பெயர்.....................................................எள்

                   மாற்றுப் பெயர்.................................................................

                   தாவரவியல் பெயர்........................................... INDICU

                   ஆங்கிலப் பெயர்............SESAME SEEDS, GINGELLY

    ======================================================

01.           எள்  என்பது ஒரு செடி வகை சார்ந்த தாவரம். இரண்ட்டி உயர்ம் வரை வளரக்கூடியது. இதய வடிவ இளைகளை உடையது. பூக்கள் வெண்மை நிறத்தில் மூக்கு போன்ற வடிவில் இருக்கும். காய்கள் 20 மி.மீ நீளம் வரை இருக்கும். காயைப் பிளந்தால் இரு சம பாதியாகப் பிளவு படும்.


.02.     காய்களுக்குள் விதைகள் இரு வரிசையில் அமைந்திருக்கும். முற்றிய விதைகள் கறுப்பு நிறத்தில் இருக்கும். வெண்ணிற விதை உள்ள எள் செடிகளும் உண்டு.

 

03.           எள் விதைகளிலிருந்து நல்லெண்ணெய் பிழியப் படுகிறது. எள் எண்ணெய் எனப்படும் நல்லெண்ணெயில் கால்சியம், இரும்பு, மெக்னீஷியம், பாஸ்பரஸ், துத்தநாகம், புரதம், அக்சாலிக் அமிலம், தயாமின், வைட்டமின்பி”, “சி”, “ஆகியவை உள்ளன. (Asan)

 

04.           எள் எண்னெய் பயன் படுத்துவதால், கால், கை பலம் பெரும்;  முடி அடர்த்தியாக வளரும்; தலைவலி போக்கும்; தோலில் ஏஎற்படும் வறட்சி, சொறி, அழுக்கு புண் போன்றவை போக்கும்; நல்ல தூக்கம் வரும்; கண் பார்வை தெளிவாகும்; உடல் சோஎவு தீரும்; உடல் வெப்ப தணிக்கும். (Asan)

 

05.           நல்லெண்ணெயுடன் சம அளவு எலுமிச்சைச் சாறு கலந்து உடலுக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்,தோல் நோய்கள் வராது.  (Asan)

 

06.           நல்லெண்ணெயை வரம் ஒரு முறை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், கண் சிவத்தல், நீங்கும். கண் வலி வராது (Asan)

 

07.           சூரிய ஒளியின் புற ஊதாக் கதிர்களிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கும் தன்மை நல்லெண்ணெய்க்கு உண்டு. (Asan)

 

08.           காய்ச்சிய எண்ணெயை வாயில்வைத்து மூடிக் கொப்பளிக்கவும். எச்சில் சுரந்து, வாய் நிரம்பி, கண், மூக்கிலிருந்து நீர் சொரியும் வரை இப்படி கொப்பளியுங்கள். கழுத்தில் உண்டாகும் நோய்கள், தலைவலி, கழுத்துவலி, வாய்ப் புண், கண் தொடர்பான பாதிப்புகள்  தீரும். உமிழ் நீர் அதிகம் சுரக்கும். தொண்டை நோய், நாவறட்சி, சோம்பல், நாவில் சுவையின்மை உடல் சூடு குறையும். சளி தொந்தரவு நீங்கும்.(Asan)

 

09.           (ஆதாரம்: நாகர்கோயில் எஸ். மகாலிங்கம் ஆசான் 30-10-2016 நாளிட்ட இராணி வார இதழில் எழுதிய கட்டுரை.)

 

10.           எள் செடியின் இலைகளைப் பறித்து சிறிது நீர் விட்டு அரைத்து தலைக்குத் தேய்த்துக் குளித்தால் கண்களுக்குக் குளிர்ச்சி தரும்.

 

11.           எள் செடியின் பூவைப் பறித்து பற்களில் படாமல் விழுங்க வேண்டும். இப்படி விழுங்கி வந்தால் கண் வலி வராமல் தடுக்கலாம்.(011)

 

12.           எள்ளுப் பூவைப் பசும்பாலில் போட்டுக் காய்ச்சி நாள்தோறும் அருந்தி வந்தால் ஆண்மை பெருகும்.(519)

 

13.           எள்ளைப் பொரித்து, வேக வைத்த முருங்கைக் கீரையுடன் கலந்து உண்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும்.(339)

 

14.           எள், திப்பிலி, சுக்கு மூன்றும் சம அளவு எடுத்து மைய இடித்து தூள் செய்து ஒரு நாளைக்கு மூன்று வேளைகள்,  வேளைக்கு அரை தேக்கரண்டி வீதம் தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் மூல நோய் குணமாகும்.(375)

 

15.           எள்ளும் பப்பாளிப் பழமும் உறவு கொண்டபின் சாப்பிட்டால், கருத் தரிக்காது (586)

       (589)


===========================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்,  பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

  சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

=======================================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை முகநூல்.

[தி.பி,2052,மேழம்(சித்திரை17]

{30-04-2021}

=======================================================

எள்ளுச் செடி

எள் விதை

எள்ளுக்காய்

எள்ளுக்காய்

எள்ளுப் பூ




 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக