இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

வெள்ளி, 30 ஏப்ரல், 2021

ஏலக்காய்.

                     மூலிகைப் பெயர்.............................................ஏலக்காய்

                 மாற்றுப் பெயர்கள்..........ஆஞ்சி, ஏலா, கோரங்கம்

                 தாவரவியல் பெயர்.........ELETTARIA CARDAMOMUM

                 ஆங்கிலப் பெயர்..............................CARDAMOM SEEDS

 

       ===================================================

01.  ஏலக்காய் செடி மலைப் பகுதிகளில் பயிராகிறது. சதைப் பற்றுடைய மட்ட நிலத் தண்டுக் கிழங்குகளைக் கொண்ட தாவரம் இது. மூன்று மீட்டர் உயரம் வரை வளரும் நிமிர்ந்த தண்டுகளைக் கொண்ட்து. இலைகள் மூன்று அடி வரை நீளமாகவும், நடு நரம்புடனும் காணப்படுகிறது. பூக்கள் 4 செ.மீ வரை நீளமானவை. வெள்லை கலந்த ரோஸ் நிறமுடையவை. (Asan)

 

02.  காய்கள் சிறிய அளவில் மூன்று பிரிவுகளுடன் இளம் பச்சை நிறத்திலும், விதைகள் அதிக எண்ணிக்கையுடன் கருப்பு வண்ணத்திலும் காணப்படும். (Asan)

 

03.  இந்த விதைகளே ஏலரிசி எனப்படும். கார்ப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை. காய் மற்றும் விதைகளே பயன் தரும் பாகங்கள். (Asan)

 

04.  ஏலக்காயில் இரும்புச் சத்து, கால்சியம், நார்ச்சத்து, பாஸ்பரஸ், புரதம் போன்ற சத்துக்கள் உள்ளன. (Asan)

 

05.  ஏலக்காயை மென்று சாப்பிட்டால் இருமல் குறையும்.  ஏலக்காயைப் பொடித்து, தேனில் குழைத்து உட்கொண்டால், நரம்பு பலமடையும். வயிற்றுப் போக்கு நிற்கும்.(Asan)

 

06.  ஏலக்காய்ப் பொடியுடன் துளசிச் சாறு கலந்து பருகினால் வாந்தி நிற்கும். (Asan)

 

07.  ஏலக்காய், அதிமதுரம், மிளகு சேர்த்துக் கொதிக்க வைத்த நீரை வடிகட்டிக் குடித்தால் வாந்தி, குமட்டல் நீங்கும். (Asan)

 

08.  ஏலக்காய் 15, வால் மிளகு 15, வெற்றிலை 3 ஆகியவற்றை அரை லிட்டர் நீரில் கொதிக்க வைத்து  வடிகட்டி மூன்று வேளை பருகினாலும் வாந்தி, குமட்டல் நின்று விடும். (Asan)

 

09.  ஏலப்பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் கண் பார்வை அதிகரிக்கும். ஏலப்பொடியுடன் திராட்சைச் சாறு சேர்த்து உட்கொண்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும். (Asan)

 

10.  ஏலக்காய் விதைகளை மென்று, உமிழ் நீரை விழுங்கி வந்தால் வாய் வாடை நீங்கும். (Asan)

 

11.  ஏலக்காய், கிராம்பு, சீரகம், சுக்கு சம அளவாகப் பொடித்து, 2 கிராம் எடுத்து தேனில் குழைத்து தினமும் 3 வேளை சாப்பிட்டு வந்தால், வயிற்று வலி குணமாகும்.  (Asan)

 

12.  வெந்தயத்தை ஊறவைத்து, சிறிதளவு ஏலக்காய் சேர்த்து மென்று தின்றால் வயிற்றுக் கடுப்பு நீங்கும். (Asan)

 

13.  சிறிதளவு ஏலக்காய், வேப்பிலை, மஞ்சள் சேர்த்து அரைத்து பித்த வெடிப்பு உள்ள இடங்களில் பூசி வந்தால், குணமாகும். (Asan)

 

14.  ஏலக்காய்ப் பொடி, சுக்குப் பொடி, மிளகுத் தூள் ஆகியவற்றை தேனில் குழைத்து உட்கொண்டால், தசைப் பிடிப்பு நீங்கும்., (Asan)

 

15.  ஏலப் பொடியுடன் அன்னாசிப் பழச் சாறு கலந்து பருகினால், நீர்க்கடுப்பு விலகும். (Asan)

 

16.  ஏலக்காயுடன் கறிவேப்பிலை சேர்த்து விழுதாக அரைத்து எருமைத் தயிரில் கலந்து 3 வேளை சாப்பிட்டால் சீத பேதி குணமாகும். (Asan)

 

17.  ஏலக்காய், மிளகு, சுக்கு, திப்பிலி, கொத்துமல்லி விதை இந்த ஐந்தையும் சேர்த்து கசாயம் செய்து பருகிவந்தால் குற்றிருமல் குணமாகும். (Asan)

 

18.  சிறிதளவு ஏலக்காய், மிளகு 4, சுக்கு இவற்றுடன் பால் ஊற்றி அரைத்து நெற்றியில் பற்றிட்டால் தலைவலி குணமாகும். (Asan)

 

19.  ஏலக்காய் 4, கிராம்பு 4, வெற்றிலைக் காம்பு ஆகியவற்றைப் பால் விட்டு அரைத்து, சூடாக்கி, நெற்றியில் பற்றுப் போட்டால் தலைவலி குணமாகும். (Asan)

 

20.  நெல்லிகாய் சாற்றில் ஒரு சிட்டிகை ஏலத்தூள் சேர்த்து தினமும் 3 வேளை குடித்து வந்தால் சிறு நீர் எரிச்சல் நீங்கும்.  (Asan)

 

21.  ஏலம், சீரகம், கொத்துமல்லிப் பொடிகளுடன், சிறிதளவு கருப்பட்டி சேர்த்து ஒரு நெல்லிக்காய் அளவு வீதம் காலை மாலை சாப்பிட்டால் பித்தம் நீங்கும். (Asan)

 

22.  ஏலக்காய், கிராம்பு, சுக்கு ஆகியவற்றை எடுத்து சிறிது நீர் தெளித்து அரைத்து சூடாக்கி, கை, கால் மூட்டுகள் மீது தடவி வந்தால் மூட்டு வலி தீரும். (Asan)

 

23.  நான்கு ஏலக்காயுடன் ஒரு கைப்பிடி நாவல் இலை சேர்த்து அரைத்து ஆட்டுப் பாலில் கலந்து பருகினால் செரியாமை சரியாகும். (Asan)

 

24.  ஏலம், சீரகம், சோம்புப் பொடிகளைக் கலந்து 5 கிராம் எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால், பசி, செரிமானம் தூண்டப்படும். (Asan)

 

25.  ஏலக்காய், ஓமம், சீரகம் ஆகியவற்றை சம அளவில் எடுத்து வறுத்து பொடித்து, ஒரு தேக்கரண்டி அளவுக்கு எடுத்து உட்கொண்டால் செரிமானம் எளிதாகும் .(Asan)

 

26.  ஏலக்காய் 4, ஒரு துண்டு சுக்கு சேர்த்து அரைத்து நீரில் கொதிக்க வைத்துப் பருகினால் வறட்டு இருமல், தொண்டை வலி தீரும் (Asan)

 

27.  ஏலக்காய் 10, மிளகு 5, கையளவு ரோஜா இதழ்கள் ஆகியவற்றை ஒரு லிட்டர் நீரில் போட்டு நன்றாகக் காய்ச்சி, வடிகட்டி, சர்க்கரை, பால் சேர்த்துக் குடித்தால், உடல் குளிர்ச்சி பெறும். (Asan)

 

28.  அரைத் தேக்கரண்டி ஏலப் பொடியை அரைத் தம்ளர் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து, உணவு சாப்பிடுவதற்கு முன் அருந்துங்கள். வாயுத் தொல்லை நீங்கும். (Asan)

 

29.  சிறிதளவு ஏலக்காய்த் தூளினை செவ்வாழைப் பழத்துடன் சேர்த்துச் சாப்பிடும் பெண்களுக்கு மாத விடாய்க் கோளாறுகள் மறையும். (Asan)

 

30.  ஏலக்காயை அடிக்கடி வாயில் போட்டு மெல்லுவது நல்லதல்ல ! ஏலக்காயை மிகக் குறைவாகவே சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிகமாக உட்கொண்டால் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். (Asan)

 

31.  (ஆதாரம்:- நாகர்கோயில், எஸ். மகாலிங்கம் ஆசான், 16-10-2016 நாளிட்ட இராணி வார இதழில் எழுதியுள்ள கட்டுரை.)

 

32.  ஏலரிசி, சுக்கு, வால்மிளகு, திப்பிலி இவைகளை வறுத்து தூளாகி, ஒரு சிட்டிகை பால் அல்லது தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் தொண்டைப் புண் சரியாகும். (069)

 

33.  ஏலக்காய்ப் பொடியை நெய்யில் குழைத்து காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மார்புச் சளி தீரும். (134) (1300)

 

34.  ஏலப் பொடியை வாழைப் பழத்தில் தூவி சாப்பிட்டு வந்தால் பெரும்பாடு கட்டுப்படும் (596)

 

35.  ஏலக்காய், சுக்கு, மிளகு நித்திய கல்யாணிப் பூ. சுண்டை வற்றல் இவற்றுள் பூவை உலர்த்தி இடித்து பொடியாக்கி, மற்ற சரக்குப் பொடிகளுடன் கலந்து அவித்து ஒரு வருடம் உண்டு வந்தால் புற்று நோய் குணமாகும். (818)

 ==========================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்,  பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

  சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

======================================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை முகநூல்.

[தி.பி,2052,மேழம்(சித்திரை17]

{30-04-2021}

======================================================

ஏலக்காய்

ஏலக்காய்ச் செடி

ஏலக்காய்ச் செடி

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக