மூலிகைப்
பெயர்........................................தூதுவேளை
மாற்றுப்பெயர்கள்.........................தூதுளம், தூதுளை,
............................சிங்கவல்லி, அளர்க்கம், தூதுவளை
தாவரவியல்
பெயர்...................SOLAMUM
TRILOBATUM
சுவை..................................................................சிறு கைப்பு
தன்மை......................................................................வெப்பம்
=================================================
1)
தூதுவேளையானது சிறகாக உடைந்த முள்ளுள்ள இலைகளையும், ஊதா நிறப் பூக்களையும், உருண்டையான பச்சை நிறக் காய்களையும், சிவப்புப் பழங்களையும், வளைந்த முட்கள் நிறைந்தத் தண்டினையும் உடைய ஏறு கொடி.
2)
தூதுவேளையின் வேர் முதல் பழம் வரை எல்லாப் பாகங்களும் மருத்துவப் பயன் உடையவை.
3)
தூதுவேளை இலை கோழை அகற்றும்; உடல் தேற்றும்; காமம் பெருக்கும். பூ உடல் உரம் ஊட்டும்; காமம் பெருக்கும்.
4)
தூதுவேளைக் காய் கோழை அகற்றி பசியைத்தூண்டி, மலச்சிக்கல் அறுக்கும். பழம் கோழை அகற்றும்.
5)
தூதுவேளை இலையை நெய்யில் வதக்கித் துவையலாகவோ, குழம்பு வைத்தோ சாப்பிட, கபக்கட்டு நீங்கி, உடல் பலமும் அறிவுத் தெளிவும் உண்டாகும்.
6)
தூதுவேளை இலைச்சாற்றை சம அளவு நெய்யில் காய்ச்சி காலை மாலை 1 தேக்கரண்டி சாப்பிட்டு வர என்புருக்கி, காசம், மார்புச்சளி நீங்கும்.
7)
தூதுவேளைக் காயை உலர்த்தி, தயிர், உப்பு ஆகியவற்றில் பதப்படுத்தி எண்ணெயில் வறுத்து உண்டு வர,பயித்தியம், இதய பலவீனம், மலச்சிக்கல் ஆகியவை தீரும்.
8)
ஆஸ்துமா மூச்சுத்திணறலில் உலர்த்திய தூதுவேளைப் பழத்தூளைப் புகைப் பிடிக்க, சளி இளகி குணப்படும்.
9)
தூதுவேளை இலையைப் பிழிந்து காதில்விட, காதடைப்பு, காதெழுச்சி போகும். துவையல், குழம்பு செய்து உண்ண கோழைக் கட்டு அறும்.
10)
தூதுவேளை இலையைப் பிழிந்து
எடுத்து சாற்றை 1 அல்லது
2 துளி காதில் விட்டால் காதுவலி, காதில் சீழ் வடிதல் ஆகியவை குணமடையும்.
11)
தூதுவேளைப் பழம் இறுகிய மார்புச்சளி, இருமல், முக்குற்றங்கள், நீரேற்றம் ஆகியவற்றை நீக்கும்.
12)
தூதுவேளைக் காயை எடுத்து ஊறுகாய் செய்து சாப்பிட்டு வந்தால் கண் ஒளி பெருகும்.
13)
தூதுவேளைப் பூவை உலர்த்தி பொடி செய்து அரைத் தேக்கரண்டி பாலுடன் சேர்த்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும்.
14)
தூதுவேளை இலைகளை வதக்கி துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் இருமல், சளி, கோழைக்கட்டு, மூச்சுத் திணறல் ஆகியவை சரியாகும். செரிமானத் தன்மை மிகும்.
15) தூதுவேளைச்
சமூலத்தை (வேர், இலை, பூ, காய்)
50 கிராம் அரை லிட்டர் நீரில்
போட்டு நான்கில் ஒன்றாகக் காய்ச்சி காலை மாலை பருகி வர இரைப்பு, சுவாச காசச் சளி
ஆகியவகை தீரும்.
16) நாள்தோறும்
10 தூதுவேளைப் பூவை நீரில்
இட்டுக் காய்ச்சிப் பால், சர்க்கரைக்
கூட்டி ஒரு மண்டலம் (45 நாட்கள்)
பருக உடல் பலம், முக வசீகரம், அழகும்
பெறலாம்.
17) தூதுவேளை, கண்டங்கத்திரி, பற்படாகம், விஷ்ணுகாந்தி
வகைக்கு ஒருபிடி ஒரு லிட்டர் நீரில் போட்டு 8-ல்
ஒன்றாய் காய்ச்சி (தூதுவேளைக் குடிநீர்) ஒரு மணிக்கு ஒருமுறை 5 மி.லி
முதல் 10 மி.லி வரை கொடுத்து வரக் கப
வாதச் சுரம் (நிமோனியா) சன்னி வாதச் சுரம் (டைபாய்டு) குறையும்.
18) தூதுவேளை
இலையில் ரசம் வைத்துச் சாப்பிடலாம். தூதுவேளை தோசை சாப்பிடலாம். தூதுவேளை கசாயம் குடிக்கலாம்.
19) தூதுவேளை, கண்டங்கத்திரி, திப்பிலி, இண்டு
வேர் சேர்த்து 500 மி.லி தண்ணீர் ஊற்றி 100
மி.லி
ஆக சுண்ட வைத்துச் சாப்பிட்டால் ஆஸ்துமா
குணமடையும்.
20) தூதுவேளை
உடல்வலிக் கோளாறு, நுரையீரல் கோளாறுகளைக் குணப்படுத்தும்.
21) தூதுவளையின்
மருத்துவ குணங்கள் மிகவும் சக்தி வாய்ந்தது. இது சயரோகம், பிரைமரி காம்ளக்ஸ், ஆஸ்துமா, டான்சிலிட்டீஸ், தைராய்டு
கட்டிகள், வாயில், கன்னத்தில் ஏற்படும் கட்டிகளுக்கும் காதில்
ஏற்படும் எழுச்சிக் கட்டிக்கும் பயன்படுகிறது.
சளியைக் கரைக்கும் தன்மைக்கு முதலிடம் பெறுகிறது. தைராய்டு
கட்டிகள் தோன்றியவுடன் தூதுவளையைப் பயன்படுத்தினால் நிரந்தரத் தீர்வு காணலாம்.
22) தூதுவேளை இலையை
சேகரித்து சுத்தம் செய்து, பதினைந்து முதல் ஐம்பது கிராம் வரை எடுத்து, ஊற வைத்த அரிசி
சேர்த்து அரைத்து ரொட்டியாகத் தயாரித்து காலை உணவாக மூன்று ரொட்டிக்குக் குறையாமல்
இரண்டு மாதங்கள் சாப்பிட்டால், புற்று நோயிலிருந்து பூரண குணம்
ஏற்படும். முதல் பதினைந்து தினங்கள் முதல் தொண்டைவலி குறைய ஆரம்பிக்கும். பிறகு
படிப்படியாக நோய் நிவாரணம் அடையும்.
23) தூதுவேளை இலை 15 கிராம் அளவில்
சேகரித்து 500 மில்லி தண்ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 முதல் 40 மில்லி வரை ஒரு
நாளைக்கு மூன்று வேளை இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால், இருமல், இரைப்பு, சளியுடன் கூடிய காய்ச்சல், சயரோகக் காய்ச்சல் குணமாகும்.
24) இருபது கிராம்
தூதுவேளை இலையை நெய்யில் வதக்கி துவையலாகவோ, சட்னியாகவோ, பச்சடியாகவோ
தயாரித்து பயன்படுத்தினால், மேற்கண்ட நோய்கள் குணமாகும். இப்படி தயாரித்த துவையலை
சாப்பிடும்போது காலை, மதியம், இரவு நேர உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் நல்ல பலனை
உடனே காண முடியும்.
25) இவ்வாறு வாரத்தில்
இரண்டு தினங்களாவது சாப்பிட்டு வந்தால் நோய்த் தடுப்பாகவும், நோய் தீர்க்கவும்
பயன்படும். இம்முறையில் பயன்படுத்தினால் நுரையீரல்
நோய்கள் வராமல் நுரையீரல் பாதுகாக்கப்படும். ஆஸ்துமா, ஈசனோபீலியா நோய் வராமல்
தடுப்பு மருந்தாகவும், வந்தபின் நோய் நீக்கவும் பயன்படுகிறது. தூதுவேளையைப்
பயன்படுத்துவதால் மூளை நரம்புகள் வலிமையடைகின்றன. இதனால் நினைவாற்றல் பெருக
உதவியாக இருக்கிறது.
26) தூதுவளங்காயைச்
சேகரித்து மோரில் ஊற வைத்து வற்றலாகக் காயவைத்து வைத்துக் கொண்டு பனி மற்றும்
மழைக்காலங்களில், எண்ணெயில் பொரித்து ஆகாரத்தில் சேர்த்துக் கொண்டால் ஆஸ்துமா நோய் தணியும். நுரையீரல் வலுவடையும்.
27) தூதுவேளை இலையைப்
பொடி செய்து வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம். இப்பொடியை உபயோகிப்பதால் சளி, இருமல் நீங்குகிறது. பசியை உண்டாக்குகிறது.
ஆஸ்துமா நோயாளிகள் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம். இப்பொடியை தொடர்ந்து
சாப்பிட்டு வந்தால், நீரிழிவு கட்டுப்படும்.
28) தூதுவேளை இலைப் பொடியுடன்
திப்பிலிப் பொடியை சமமாக சேர்த்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால், இருமல் உடனே நின்று விடும்.
29) பசும்பாலில்
தூதுவேளை இலைப் பொடியைச் சேர்த்து சாப்பிட்டால் பித்த நோயால்
ஏற்படும் மயக்கம் தீரும். இப்பொடியை எருமை மோரில்
கலந்து சாப்பிட்டால் இரத்த சோகை நீங்கி இரத்த
விருத்தி உண்டாகும்.
30) தூதுவேளை இலைப்
பொடியைத் தண்ணீரில் கலந்து சாப்பிட்டால் செய்யான் கடி
விஷம் தீரும். தூதுவளை இலையை நெய்யில் வதக்கி, துவையல் செய்து
வாரத்தில் இரண்டு நாளாவது பயன்படுத்தினால் வாயுவைக்
கண்டிக்கும். உடல் வலிமை ஏற்படும். மூலரோகப் பிணிகள் குறையும். தாம்பத்ய உறவு
மேம்படும்.
31) ஆஸ்துமா நோயாளிகள், காலை வேளையில்
வெறும் வயிற்றில் தூதுவேளைச் சாறு 50 மில்லியளவு சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமாவினால் ஏற்படும் சளி, இருமல் கபம் நீங்கும்.
32) தூதுவேளை இலைச்சாறு 100 மில்லி, பசு நெய் 30 மில்லி, இரண்டையும் சேர்த்து
தூள் செய்து, கோஷ்டம் 5 கிராம் சேர்த்து, பதமாய்க் காய்ச்சி
வைத்துக் கொண்டு, இதில் ஒரு தேக்கரண்டியளவு எடுத்து தினம் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் சாதாரண இருமல் முதல் கக்குவான்
இருமல் வரை குணமாகும். குழந்தைகளுக்கும் கொடுக்கலாம், பத்தியமில்லை.
33) தூதுவேளையை அடிக்கடி
பயன்படுத்தினால் புற்று நோய் வராமல் தடுக்கலாம். தொண்டைப்
புற்று, கருப்பை புற்று, வாய்ப்புற்று ஆகிய வற்றிற்கு தூதுவேளை மருந்து மிக்க நல்ல பலன்
கொடுத்துள்ளது. ஆய்வு மூலம் தொண்டைப்புற்று, வாய்ப்புற்றுக்கு
நல்ல மருந்தென நிரூபிக்கப்பட்டுள்ளது.
34) புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்றவற்றின்
பின் விளைவுகளான புற்றுநோய் எனக் கண்டறியப்பட்டால்
ஆரம்ப நிலையிலே தூதுவேளை இலையைப் பயன்படுத்தி, பூரண நலத்தைச் சில
மாதங்களிலே மீண்டும் பெற்று விடலாம்.
35) சித்த வைத்திய
முறையில் தயாரிக்கப்படும் தூதுவேளை நெய் பல
நோய்களுக்கு நிவாரணமளிக்கிறது. தூதுவளை நெய்யை 1 முதல் இரண்டு
தேக்கரண்டியளவு சாப்பிட்டால், எலும்புருக்கி நோய்கள், ஈளை இருமல், கபநோய்கள், மேக நோய்கள், வெப்பு நோய்கள், இரைப்பு, இளைப்பு இருமல்
நோய்கள், வாய்வு, குண்டல வாயு முதலியன தீரும்.
36) தூதுவேளை உடல்வலிக் கோளாறு, நுரையீரல் கோளாறுகளைக்
குணப்படுத்தும். தூதுவேளைப் பூவை உட்கொண்டால் உடல் பெருக்கும் , ஆண்மை பெருகும் வலிவு
கிடைக்கும்.
37) தூதுவேளைக் காயை உலர்த்தி தொடர்ந்து சாப்பிட்டு வர குடல் நோய்கள் தீரும்.அழற்சி தீரும் .வாயு தொந்ததரவு தீரும்.
38) தூதுவேளைப் பழம் மார்பில்
இறுகிய சளியை நீக்கும். பித்தம், வாதம், சிலேத்துமம் ஆகிய
மூன்று தோஷம். நீக்கும். பாம்பின்
நஞ்சு நீக்கும். .தூதுவளையை மிக எளிய முறை உபயோகத்திலேயே பல நன்மைகளை
அடைய முடியும்.
39) தூதுவேளைக் காய் ஊறு காய் செய்து சாப்பிட்டு வந்தால் கண்களில்
ஒளி பெருகும். (017)
(1128)
40) தூதுவேளைக் காயைப் பறித்து உலர்த்தி தயிரில் போட்டு உப்பும் தேவையான அளவு
சேர்த்து ஊற வைத்து பின்பு வெயிலில்
உலர்த்தி, எண்ணெயில் வறுத்து உண்டு வந்தால் பைத்தியம்
தெளியும். (1408) இதய பலவீனம் குணமாகும். (1418)
41) தூதுவேளை சமூலத்தை ( இலை, தண்டு, பூ, காய், வேர் ஆகியவை) எடுத்து சுத்தம் செய்து நீர்
விட்டுக் கசாயம் செய்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் இரைப்பு குணமாகும். (1457)
42) தூதுவேளைப் பூ 10 எண்ணிக்கை எடுத்து பாலில்
போட்டுக் காய்ச்சி, சர்க்கரை சேர்த்து அருந்தி
வந்தால் உடல் பலம் பெறும். (1419)
43) தூதுவேளைப் பூ 10 எடுத்து பாலில் போட்டுக்
காய்ச்சி, சர்க்கரை சேர்த்து 48 நாட்கள் அருந்தி வந்தால், முக அழகும் வசீகரமும் பெறலாம். (1433)
44) தூதுவேளைப் பழங்களை எடுத்து உலர்த்தி, தூளாக்கி வைத்துக் கொண்டு, ஆடாதோடையின் காய்ந்த இலையில்
வைத்து, சுருட்டுப் போல் செய்து புகை பிடித்தால் ஆஸ்துமாவினால்
ஏற்படும் மூச்சுத் திணறல் சரியாகும். கபத் தொந்தரவு நீங்கும். (1069)
45) தூதுவேளைப் பழங்களை எடுத்து உலர்த்தி, தூளாக்கி வைத்துக் கொண்டு, தணலில் இட்டு, அதிலிருந்து வரும் புகையை உள்ளுக்கு
இழுத்தால், ஆஸ்துமாவின் கடுமை குறையும். சளி விலகும். (1084)
46) தூதுவேளை இலைச் சூரணம், முசு முசுக்கை இலைச் சூரணம்
ஆகியவற்றை தலா ஒரு கிராம் எடுத்து ஒன்றாகக் கலந்து தேனில் குழைத்து சாப்பிட்டு
வந்தால் என்புருக்கி நோய் நீங்கும். (365)
47) தூதுவேளைச் சாறு இரண்டு சொட்டுகள் காதில் விட்டு வந்தால் காது அடைப்பு நீங்கும். காதுக்குள் கட்டிகள் ஏதும் இருந்தாலும் குணமாகும். (056) (1134)
48) தூது வேளைக் கீரையை உண்பதால் மூச்சு வாங்குதல், காது அடைத்தல், காது மந்தம் ஆகியவை விலகும். (080) (117) (1295) (1786)
49) தூதுவேளை இலைப் பொடியுடன் மிளகுப்பொடி சேர்த்து தேன் அல்லது பாலில் கலந்து
அருந்தினால், தும்மல் நிற்கும்.. (145) (1123)
50) தூதுவேளை, கண்டங்கத்தரி, பற்படாகம், விஷ்ணுகிராந்தி ஆகியவை சம அளவு எடுத்து நீரில் இட்டு, சுண்டக் காய்ச்சி, ஒரு மணிக்கு ஒரு முறை பத்து மி.லி வீதம் மூன்று வேளைகள் கொடுத்து வந்தால் டைபாய்டு
காய்ச்சல், சன்னி சுரம் ஆகியவை குணமாகும். (197)
(1434)
51) தூது வேளை இலைகளுடன் வல்லாரை இலைகளையும் சேர்த்து அரைத்து பாலில் கலந்து
சாப்பிட்டு வந்தால் நுரையீரலில் உள்ள சளிக் கட்டு
நீங்கும். (209)
52) தூதுவேளை இலைகளுடன் அம்மான் பச்சரிசி இலைகளையும் சேர்த்து சமையல் செய்து
உணவுடன் உண்டு வந்தால், உடல் பலம் பெறும். (757)
53) தூதுவேளைச் சமூலம் எடுத்து சுத்தம் செய்து இரசம் வைத்து, மதியம் சோற்றில் பிசைந்து உண்டு வந்தால் ஜலதோஷம்
குணமாகும். (1127) (1782)
=======================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam77@gmail.com]
ஆட்சியர்,
தமிழ் மூலிகை வலைப்பூ,
[தி.பி:2052,விடை(வைகாசி
)09]
{23-05-2021}
தூதுவேளைக் கொடி |
தூதுவேளைப் பூவும் காயும் |
தூதுவேளைப் பழம் |
தூதுவேளை |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக