இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

வெள்ளி, 30 ஏப்ரல், 2021

அவரி.

                         மூலிகைப் பெயர்..................................................அவரி

                   மாற்றுப் பெயர்கள்.............நீலி, நிறமாற்றி, அவுரி

         

                   தாவரவியல் பெயர்............INDIGOFERA TINCTORIA


                  ஆங்கிலப் பெயர்...................................INDIGO PLANT

         

                   சுவை.................................................................... கைப்பு

         

                  தன்மை.............................................................. வெப்பம்

               

 

    ===================================================          

 

01. கறும்பச்சை இலைகளை உடைய சிறு செடியினம். நீல நிறச் சாறு உடையது என்பதால் நீலி எனவும் அழைக்கப்படுகிறது.

 

02. எல்லாப் பாசாணங்களையும் சுத்தி செய்ய வல்லது. இலை, வேர் ஆகியவை மருத்துவப்  பயனுடையவை.

 

03. வேர் நஞ்சு முறிக்கும் மருந்தாகவும், இலை வீக்கம், கட்டி ஆகியவற்றைக் கரைக்கவும், நஞ்சு முறிக்கவும், நோய் நீக்கி உடல் தேற்றியாகவும், மலம்  இளக்கியாகவும், புத்துணர்ச்சி அளிக்கும் மருந்தாகவும் பயன்படும்

 

04. அவரி இலைக் கொட்டைப் பாக்கு. அளவு அரைத்து 250 மி.லி வெள்ளாட்டுப் பாலில் கலக்கி வடிக்கட்டி, அதிகாலையில் மூன்று நாள் கொடுக்க மஞ்சள் காமாலை, அந்திமாலை தீரும்.

 

05. அவரி இலைகளை அரைத்து சுண்டைக் காய் அளவு சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் நோய் குணமாகும். உப்பு, புளி சேர்க்கக் கூட்து. (009)

 

06. அவரி வேர் 20 கிராம், அறுகம்புல் 30 கிராம், மிளகு 3 கிராம் மையாய் அரைத்து கோலிக்குண்டு அளவு காலை மாலை சாப்பிட்டு, இச்சா பத்தியம் இருக்க மருந்து வேகம் அனைத்தும் தீரும். இம்மருந்தை நாள்தோறும் 3 வேளை உப்பு, புளி நீக்கிச் சாப்பிடப் பாம்பு, தேள், பூரான், செய்யான் ஆகியவற்றின் நஞ்சு நீங்கும்.

 

07. அவரி வேர் 20 கிராம், பெரு நெருஞ்சில் இலை 50 கிராம் அரைத்து எலுமிச்சை அளவு மோரில் கொடுக்க வெள்ளை தீரும்.

 

08. அவரி வேர் ஒரு துண்டும், சுக்கு  சிறிதும் எடுத்து, இரண்டையும் நசுக்கி, 200 மி.லி.நீரில் இட்டு 50 மி.லி யாகக் காய்ச்சி  ஒருவேளை உள்ளுக்குக் கொடுத்தால் காய்ச்சல் உடனடியாக நீங்கும்.

 

09. ஒரு பிடி அவரி இலை, 2 சிட்டிகை சீரகம், பொரித்த பெருங்காயம், மிளகு சமனெடை சேர்த்து அரைத்து, சுண்டைக்காய் அளவு மாத்திரை செய்து ஒரு நாளைக்கு 3 வேளையாகக் கொடுத்துவர நரம்புச் சிலந்தி, கீல் வாதம் ஆகியவை நீங்கும். உப்பில்லாப் பத்தியம் இருக்க வேண்டும்.

 

10. .அவரி வேர் 20 கிராம், மிளகு 10  கிராம் அரைத்து சுண்டைகாய் அளவு காலை மாலையாய் 10 வேளை கொடுக்க எட்டி, வாளம், கலப்பைக்கிழங்கு, நாவி, அலரி வேர் ஆகியவற்றின் நஞ்சு தீரும்.

 

11. அவரி இலைகளை எடுத்து தேங்காய் எண்ணெயில் போட்டு நசுக்கி,  கலக்கி வடிகட்டி, தலைக்குத் தேய்த்தால் தலை வலி தீரும்.(417)

 

12. அவரி இலைகளை எடுத்து உலர்த்தி தூளாக்கி தினம்மும் ஐண்ட்து கிராம் அளவுக்கு எடுத்து உணவுக்குப் பின் சாப்பிட்டு வந்தால் உடல் நிறம் பள பளக்கும்.(823)

 

13. அவரிவேர் 20 கிராம், பெரு நெருஞ்சில் இலை 50 கிராம் எடுத்து அரைத்து எலுமிச்சங் காய் அளவு மோரில் கலந்து கொடுத்து வந்தால், வெள்ளைபடுதல் குணமாகும். (608)

===========================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்,  பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

  சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க ! 

================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,மேழம்(சித்திரை)17]

{30-04-2021}

================================================


அவரிச்செடி

 

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக