இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

வெள்ளி, 30 ஏப்ரல், 2021

அல்லி

 

                   மூலிகைப் பெயர்.................................... அல்லி

                மாற்றுப் பெயர்கள்..............குமுதம், ஆல்பம்

                ..................................................... கைரவம், மலரி

                தாவரவியல் பெயர்.................................LILIUM

                ஆங்கிலப் பெயர்........................................LILLY


================================================

     


           

01. அல்லி இதழ்களை மட்டும் சேகரித்து அதனுடன் 200 மி.லி நீர் விட்டுக் காய்ச்சிப் பாதியாக வற்றியதும் குடித்து வர நீரிழிவு நோய் கட்டுப்படும்.

 

02. அல்லி இதழ்களை அரிந்து கண்களின் மீது வைத்து கட்டி வர கண்சிவப்பு, எரிச்சல், நீர் வடிதல் இவற்றுக்கு நல்ல குணம் கிடைக்கும்.

 

03. அல்லி இலையை நிழலில் உலர்த்திப் பொடி செய்து பால் அல்லது தேனில் கலந்து உட்கொண்டு வர அடிக்கடி ஏற்படும் கருச்சிதைவைத் தடுக்கலாம்.

 

04. வெள்ளை அல்லி இதழ்கள் 100 கிராம் அளவு எடுத்து அதே அளவு ஆவாரம்பூவை சேர்த்து ஒரு லிட்டர் நீர் விட்டு காய்ச்சி அரை லிட்டராகச் சுண்டியபின் அதனை வடிகட்டி அதனுடன் அரை கிலோ சர்க்கரையை கலந்து நன்கு காய்ச்சி பாகு பதத்தில் எடுத்து பத்திரப்படுத்திக் கொள்ளவும்.இதில் 30 மி.லி அளவு எடுத்து அதை 100 மி.லி பசும் பாலில் கலந்து தினமும் இருவேளை குடித்து வர உடல் வெப்பம் தணியும். இரத்தக் கொதிப்பும், நீரிழிவு நோயும் கட்டுப்படும். வெள்ளை நோய், மேகவெட்டை குணமாகும். உஷ்ணத்தால் ஏற்படக் கூடிய கண் நோயும் தீரும்.

 

05. அல்லி இலையும் அவுரி இலையும் சம அளவில் எடுத்து அரிசி கழுவிய நீரில் அரைத்துப் பூசினால் கோடைக் காலத்தில் உஷ்ணத்தினால் குழந்தைகளுக்கு உண்டாகும் கட்டிகள் உடைந்து குணமாகும். அவுரி இலைக்குப் பதில் ஆவாரைக் கொழுந்தைச் சேர்த்து அரைத்துப் பூச அக்கிக் கொப்புளம் தீரும்.

 

06. அல்லி இதழ்களை நீரிலிட்டுக்  காய்ச்சி  கசாயமாக்கிப்  பாலுடன் கலந்து பருகி வர நாவறட்சி, தீராத தாகம், சிறுநீர் எரிச்சல் குணமாகும்.

 

07. அல்லி விதையைச் சேகரித்துத் தூளாக்கிப் பாலுடன் கலந்து குடித்து வரத்  தாதுவிருத்தி உண்டாகும். கல்லீரலும் மண்ணீரலும் பலமடையும்.

 

08. அவுரி இலைச் சாறு, மருதாணி இலைச் சாறு வகைக்கு 100 மி.லி அளவு எடுத்து 500 மி.லி தேங்காய் எண்ணையில் கலந்து, அதில் 100 கிராம் அல்லிக் கிழங்கும், 35 கிராம் தான்றிக் காயும் அரைத்துக் கலந்து காய்ச்சிப் பதமுடன் இறக்கி வடிகட்டி வைத்துக் கொள்ளவும். இதை தலைக்குத் தேய்த்து வர இளநரை மறையும். முடி கருத்து தழைத்து வளரும். அத்துடன் பித்தம் தணியும்.

 

09. சிவப்பு அல்லி இதழ்களுடன் செம்பருத்திப் பூ இதழ் சேர்த்து காய்ச்சிக் கசாயம் ஆக்கி குடித்து வர இதயம் பலமடையும். இதய படபடப்பு நீங்கும். ரத்தம் பெருகும்.

 

10. அல்லி விதையுடன் சம அளவு ஆவாரம் விதை சேர்த்துப் பொடியாக்கி 1-2 கிராம் அளவு பாலில் கலந்து சாப்பிட்டு வர வெள்ளை நோய் குணமாகும். நீரிழிவு நோய் தீரும். ஆண்மை பெருகும்.

 

11. அல்லி இதழ்களை சந்தனத்துடன் சேர்த்து அரைத்து வழுக்கைத் தலையில் தடவி இரண்டு மணி நேரம் கழித்து குளித்து வந்தால், வழுக்கை மறைந்து முடி வளரும்.(858)

 

12. அல்லி இதழ்களை சந்தனத்துடன் சேர்த்து அரைத்துஇரவில்முகத்தில் தடவி, காலை எழுந்தபின் முகத்தை அலம்பி வந்தால் முகப் பருக்கள் நீங்கும்.(1111)

 

13. ஆம்பல் (அல்லி)  கிழங்கை காய வைத்து இடித்து தூள் செய்து வைத்துக் கொண்டு தினசரி ஒரு தேக்கரண்டி தூள் எடுத்து பசும் பாலில் சாப்பிட்டு வந்தால்  ஆண் உறுப்பு உறுதிப்படும்.(510)

 

===========================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்,  பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

  சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !  

============================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,மேழம்(சித்திரை)17]

{30-04-2021}

=============================================



அல்லி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக