மூலிகைப் பெயர்..............................அவரை
மாற்றுப் பெயர்.................சிம்பை, சிக்கிடி
..............................................நகுலி, நிட்பாவம்
தாவரவியல் பெயர்............
ஆங்கிலப் பெயர்.............................. LABLAB
01. அவரை என்பது கொடி வகையைச் சார்ந்தது ஆகும். ஒரு கம்பில் மூன்று இலைகளை உடையது.
02. அவரையின் பூ ஊதா நிறத்தில் இருக்கும். வெள்ளை நிறத்தில் பூக்கும் அவரையும் உண்டு.
03. அவரைக் காய் 100 மி.மீ நீளம் வரை இருக்கும். காய்களுக்குள் விதைகள் இருக்கும். விதைகள் கறுப்பு கலந்த ஊதா நிறத்தில் இருக்கும்.
04. அவரை இலைகளைப் பறித்து 25 மி.லி அளவுக்குச் சாறெத்து அதில் 50 மி.லி பசுந்தயிர் சேர்த்துக் கலக்கி, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சீதபேதி குணமாகும்.(090)(103)(702)
05. அவரைப் பிஞ்சு, நாவற்பழம். பாகற்காய் ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் நீரிழிவு உள்ளவர்களுக்கு நல்ல பயன் தரும்.(341)
06. அவரைக்காய், காரட், பீட்ரூட், வாழைத்தண்டு ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால், மஞ்சள் காமாலை வராது.(106)
07. அவரைக் காய் சாறினை சொறி சிரங்கின் மீது தொடர்ந்து பூசி வந்தால். சொறி சிரங்கு விரைவில் மறைந்து விடும்.(458)
08. அவரைக்காய், தேன், பச்சைக் காய்கறிகள், பச்சைப் பட்டாணிப் பருப்பு, முழுத் தானியங்கள், பால், மோர் ஆகியவற்றை உணவுடன் அடிக்கடி சேர்த்து வந்தால், உயிர்ச்சத்து “பி” குறைவினால் வரும் நோய்கள் அணுகாது.(761)
===========================================================
மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்” என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ் அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள் மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
===============================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam77@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்மூலிகை வலைப்பூ,
[தி.பி:2052,மேழம்(சித்திரை)17]
{30-04-2021}
===============================================
அவரை |
அவரை |
அவரைப் பூ |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக