இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

வியாழன், 27 மே, 2021

பெருங்காயம்

           மூலிகைப் பெயர்..................................பெருங்காயம்

        மாற்றுப் பெயர்.................................................................

        தாவரவியல் பெயர்........................................................

        ஆங்கிலப் பெயர்........................................ASAFOETIDA

 

==================================================

 

01.  ஈரான் போன்ற நாடுகளில் வளரும்  ஒருவகை  மரத்தின் தண்டிலிருந்து வடியும் பாலைக் கொண்டு   பெருங்காயம் தயாரிக்கப்படுகிறது. இந்தப் பாலை அரிசி மாவுடன் கலந்து  தூள் பெருங்காயமும்,  கோந்துடன் கலந்து  கட்டிப் பெருங்காயமும் தயாரிக்கப்படுகிறது


02. பெருங்காயத்தைப் பொரித்து தேங்காய் எண்ணெயில் சிறிது நேரம் ஊற வைத்து, அதில் இரு துளிகள் காதில் விட்டால் காதுவலி நிற்கும்.  (058)

 

03.   பெருங்காயம், கற்பூரம், வெள்ளைப் பூண்டு ஆகியவற்றை  நல்லெண்ணையில் போட்டுக் காய்ச்சி  தினசரி 3 வேளைகள் 2 சொட்டு வீதம் காதில் விட்டு வந்தால் எப்படிப் பட்ட காது வலியும் குறையும். (062)

 

04.   பெருங்காயம் 2 கிராம் எடுத்து 20 மி.லி நல்லெண்ணையில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி ஓரிரு துளிகள் காதில் விட்டால் காது வலி தீரும்.  (071)

 

05.   பெருங்காயம் சிறிது எடுத்து வெந்நீரில் கரைத்து, தெளிந்த  பின், அந்த நீரை குழந்தைகளுக்கு வேளைக்கு 10.மி.லி வீதம்  கொடுத்து வந்தால் தொடர் இருமல் நீங்கும்.  (158) (185)

 

06.   பெருங்காயம் அரை கிராம் எடுத்து பொறித்து சிறிது வெல்லம் சேர்த்துச் சாப்பிட்டால், வயிற்று வலி, வயிற்றுப் பொருமல் ஆகியவை தீரும். (734)

 

07.   பெருங்காயம் குடலில் உள்ள வாயுவை முறிக்க வல்லது; உடலில் உள்ள நச்சை நீக்க வல்லது.  (767)


08. மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:- அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள புத்தகத்திலிருந்து எடுக்கப்பெற்றவை.

.=======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

 

===================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,விடை(வைகாசி )13]

{27-05-2021}

===================================================


கட்டிப் பெருங்காயம்

தூள் பெருங்காயம்

பெருங்காய மரம்

பெருங்காய மரம்

பெருங்காய மரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக