இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

புதன், 26 மே, 2021

பூவரசு

 

      மூலிகைப் பெயர்.............................................பூவரசு

               மாற்றுப் பெயர்கள்........................பூளம், புவிராசன்

               தாவரவியல் பெயர்...........THESPESIA POPULNES

               ஆங்கிலப் பெயர்................................PORTIA TREE

               சுவை................................................துவர்ப்பு, கைப்பு

               தன்மை...........................................................வெப்பம்

 

===================================================


01. ஈட்டி முனை போன்ற, அரச இலையை ஒத்த  ஒற்றை இலைகளும், மஞ்சள் நிறப் பூவும், கொட்டைப்பாக்கு அளவுள்ள காய்களும் உடைய மர வகை பூவரசு.

 

02. பூவரசு மரத்தின் இலை, பூ, விதை, பட்டை, வேர் ஆகியவை மருத்துவப் பயன் உடையவை.

 

03. நூறு ஆண்டுகளுக்கு மேல் வயதுடைய பூவரசு மரத்தின் வேர், நாட்பட்ட பெருநோயைப் போக்கும். பழுப்பிலை, பூ, விதை, காய், பட்டை முதலியவை புழுத்த புண், சிறுபாம்புக்கடி, குத்தல், பெருவயிறு, வீக்கம், கரப்பான், சிரங்கு, வெள்ளை இவைகளைப் போக்கும்

 

04. பூவரசு  இலையை அரைத்து வெதுப்பி வீக்கங்களின் மீது கட்டலாம். பூவரசம் பூவை அரைத்துச் சிரங்குகளின் மீது பூசி வந்தால் சிரங்குகள் தீரும். .

 

05. பூவரசங் காயிலிருந்து  உண்டாகும் ஒரு வித மஞ்சள் நிறமுள்ள பாலைத் தோலில் உண்டாகும் நோய்களுக்குத் தடவலாம்.

 

06. பூவரசங் காயிலிருந்து வெளிவரும் மஞ்சள் நிறப்ம்பாலை  எச்சில் தழும்புகளில் பூசினால் குணமாகும். மூட்டு வீக்கங்களுக்குப் பூச, வீக்கம் கரையும்.

 

07. பூவரசங் காயையும் பட்டையும் எண்ணெய் முறைகளிற் சேர்த்துக் காய்ச்சி மேற்கூறிய நோய்களுக்குப் பயன்படுத்தலாம்.

 

08. பூவரசம் பட்டை எண்ணெயினால் வெள்ளை நோயும், தோலைப் பற்றிய நோய்களும் போகும்.

 

09. பூவரசங் காயின் எண்ணெயினால் பெருவயிறு, குன்மநோய் முதலியன தீரும்.

 

10. பூவரசு மரத்தின் முதிர்ந்த பட்டையின் சதையைச் சிதைத்துப் பிழிந்த சாற்றை வாயிலிட்டுக் கொப்பளித்துக் கொண்டே விழுங்கிவிடின் கழிச்சலை உண்டாக்கும். இவ்வாறே  பல நாட்கள்  செய்து வந்தால், உதட்டில் வரும் வெண்புள்ளி (வெண்குட்டம்) போகும்.

 

11. பூவரச மரத்தின் பழுப்பு இலையில் இரும்புச் சத்து நிரம்ப உள்ளது. பழுப்பு இலை 2 எடுத்து அத்துடன் ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து அரைத்துக் குடித்தால், மஞ்சள் காமாலை தீரும்.

 

12. பூவரசுப் பழுப்பு இலை 2 , காய் 4 , பூவரச மரப் பட்டை ஒரு துண்டு, சீரகம் 2 தேக்கரண்டி, சோம்பு ஒரு தேக்கரண்டி, கீழா நெல்லி ஒரு கைப்பிடி, சின்ன வெங்காயம் 4 , சிறு நெருஞ்சில் 5 கிராம், ஆகியவற்றைச் சேர்த்துச் சிதைத்து 3 கோப்பை நீரில் போட்டு அரைக் கோப்பையாகக் காய்ச்சி அருந்தி வந்தால், கல்லீரல் பலப்படும்; கை,கால் நடுக்கம் குறையும். மஞ்சள் காமாலை நெருங்காது.

 

13. பூவரசு இலைகளை அரைத்து  நல்லெண்ணையில் வதக்கிக் கட்டி வந்தால் வீக்கம் குறையும்.  (1021) (1494)

 

14. பூவரசு பழுப்பு இலைகளை வெயிலில்காய வைத்து கருக்கி அந்த சாம்பலை தேங்காய் எண்ணெயில் கலந்து தடவினால் ஊரல், அரிப்பு ஆகியவை குணமாகும்.  (1493) சொறி சிரங்கு குணமாகும்.  (1502) (454)

 

15. பூவரசங் காயை உடைத்தால் மஞ்சள் நிறத்தில் பால் வரும். இந்தப் பாலை எடுத்து படர் தாமரை மேல் தடவி வந்தால், விரைவில் குணமாகும்.  (1495)

 

16. பூவரசு மரம் ( 100 ஆண்டு  பழைமையான மரம் ) மருத்துவப் பயன் மிக்கது. இம்மரத்தின் பூ, காய், பட்டை ஆகியவற்றை எடுத்து இடித்து சூரணமாக்கி, காலை மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட தோல் நோய்கள் குணமாகும்.  (1026) (1496)

 

17. பூவரசு மரத்தின் வேர், பட்டை ஆகியவற்றை எடுத்து நீரில் இட்டுக் கசாயம் செய்து  வாய் கொப்பளித்து வந்தால், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீரும்.  (068)


18. மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:- அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள புத்தகத்திலிருந்து எடுக்கப்பெற்றவை.

.=======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

 

 =================================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை முகநூல்.

[தி.பி,2052,விடை(வைகாசி )12]

{26-05-2021} 

==================================================




பூவரசு பூவும் காயும்

பூவரசங்காய்

பூவரசு இலை

பூவரசம்பூ

பூவரசு

பூவரசம்பூ





 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக