மூலிகைப் பெயர்..........................................பேய்மிரட்டி
மாற்றுப் பெயர்கள்..................................வெதுப்படக்கி,
.........................இரட்டைப்பிரமட்டை,
பெருந்தும்பை
.............................இரட்டைப் பேய்மருட்டி, வைசாசம்
....................................................... எருமுட்டைப் பீ நாறீ,
தாவரவியல் பெயர்..............ANISOMELES
MALABARICA
ஆங்கிலப் பெயர்...........................MALABAR
CAT - NINT
சுவை..............................................................................கைப்பு
தன்மை.......................................................................வெப்பம்
===================================================
01. பேய்மிரட்டி என்பது எதிர் அடுக்கில் அமைந்த, வெளிரிய வெகுட்டல் மணமுடைய நீண்ட இலைகளையும் வெளிரிய கருஞ்சிவப்பு மலர்க் கொத்தினையும் உடைய செடி.
02. சற்று வட்டமான இலைகளை உடைய இனம் ஒற்றைப் பேய் மிரட்டி என அழைக்கப்படுகிறது.
03. வெதுப்படக்கி என்பது பேய் மிரட்டிச் செடிக்கு வழங்கப்படும் மிகவும் பிரபலமான இன்னொரு பெயர்.
04. பேய்மிரட்டிச் செடி முழுமையும் மருத்துவப் பயன் உடையது.
05. பேய்மிரட்டிச் செடியானது பசி மிகுத்தல், குடல் வாயு அகற்றல், வியர்வை பெருக்குதல் ,காய்ச்சல் தணித்தல், சதை நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச்செய்தல், இசிவு தணித்தல் ஆகிய குணங்களை உடையது.
06. பேய்மிரட்டி இலையைக் கொதிக்க வைத்து வேது பிடித்தால், விடாத வாத சுரம் நீங்கும். (201) (1511)
07. பேய்மிரட்டி இலைச்சாற்றை 5 துளி வெந்நீரில் குழந்தைகளுக்குக் கொடுக்க, பல் முளைக்கும்போது ஏற்படும் வயிற்றோட்டம் தீரும். (263) (1512)
08. குழந்தைகளுக்குப் பல்
முளைக்கும் போது ஏற்படும் காஸம், மாந்தம் ஆகியவை குணமாக, மிளகு ஓமம் இரண்டையும் மண் சட்டியில் போட்டு வறுத்துக் கொண்டிருக்கும் போது அத்துடன் நீர்
விட்டு, ஒரு கொதி வருகையில் பேய் மிரட்டி இலைகளை அதில் போட்டு, சுண்டக் காய்ச்சி, இரு வேளைகள் சிறிதளவு உள்ளுக்குக் கொடுக்க வேண்டும். (222)
09. பேய்மிரட்டி இலையை நீரில் கொதிக்க வைத்து காலை மாலை குடித்து வந்தால் குளிர் சுரம், வாத சுரம், முறைச் சுரம்,
மலக் கழிச்சல் ஆகியவை தீரும். (1524)
10. ஒரு பிடி நெற் பொறியுடன் பேய்மிரட்டி இலைகள் இரண்டு எடுத்து நீரில்
இட்டுக் காய்ச்சி மணிக்கு ஒருமுறை ஒரு முடக்கு கொடுத்து வந்தால் காலரா தீரும்.
11. பேய்மிரட்டி இலையைக்
கஷாயமிட்டுக் கொடுக்க வாந்தி பேதி, குளிர்சுரம், கோரசுரம், முறைக்காய்ச்சல், இருமல்
ஆகியவைக் குணப்படும்.
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
===================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam77@gmail.com]
ஆட்சியர்,
தமிழ் மூலிகை வலைப்பூ,
[தி.பி:2052,விடை(வைகாசி
)13]
{27-05-2021}
===================================================
பேய்மிரட்டி |
பேய்மிரட்டி |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக