மூலிகைப் பெயர்.............................................ஆல்
மாற்றுப் பெயர்கள்..................காமரம், கோளி
.................................தொல்மரம்,பழுமரம், பூதம்
....................................................வடம்,வானோக்கி
தாவரவியல் பெயர்..........FICUS BENGALENSIS
ஆங்கிலப்பெயர்............................BANYAN
TREE
சுவை..........................................................துவர்ப்பு
தன்மை.....................................................குளிர்ச்சி
====================================================
1)
மாற்றடுக்கில்
அமைந்த அகன்ற இலைகளை உடைய பெரு மரம். கிளைகளில் இருந்து விழுதுகள் வளர்ந்து ஊன்றி மரத்தைத் தாங்கும் அமைப்பு உடையது. சாறு பால் வடிவாக இருக்கும். இலை, பழம், விதை, பால், பட்டை, விழுது ஆகியவை மருத்துவப் பயன் உடையவை.
2)
ஆலமரப்
பட்டை, வேர்ப் பட்டை, மொட்டு, கொழுந்து, பழம், விழுது ஆகியவை வகைக்கு 40 கிராம் எடுத்து, சிதைத்து, இரண்டு லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி, தினந்தோறும் காலை மாலை குடித்துவர மேக எரிச்சல், மேகப்
புண்,
மேக ஒழுக்கு (
white discharge) தீரும்.
3)
ஆலம்பால்
20 துளி சர்க்கரை சேர்த்துக் காலையில் சாப்பிட்டு, புளி காரம் நீக்கி உண்ண ஒரு மண்டலத்தில் கொறுக்கு ( குறட்டை ) தீரும்.
4)
ஆலம்பாலைக்
காலை மாலை தடவி வர, வாய்ப்புண், நாக்கு, உதடு ஆகியவற்றில் வெடிப்பு, கை கால் வெடிப்பு,
பல் ஆட்டம் ஆகியவை தீரும்.
5)
ஆலமரப்
பட்டை, வேர்ப்பட்டை வகைக்கு 200கிராம் சிதைத்து நான்கு லிட்டர் நீரில் இட்டுக் காய்ச்சி காலையில் மட்டும் ஒரு குவளை குடித்து வரலாம். நான்கு நாட்களுக்கு ஒரு முறைத் தயாரித்துக் கொள்ளலாம். 1 முதல் 4 மண்டலம் வரை
சாப்பிட நீரிழிவு நோய் நீங்கும்.
6)
ஆலம்
பழம், விழுது, கொழுந்து சம அளவு அரைத்து எலுமிச்சை அளவு காலை மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர 120 நாள்களில் விந்து அணுக்கள் உற்பத்தி ஆகும்.
7)
ஆலம்விழுது
துளிரையும் விதையையும்
அரைத்து 5 கிராம் அளவுக்குக் காலையில் மட்டும் பாலில் கொடுத்துவரத் தாய்ப்பால் பெருகும்.
8)
துளிர்
இலைகளை அரைத்து 5 கிராம் அளவுக்குத் தயிரில் கலந்து கொடுத்து வர இரத்த பேதி நிற்கும்.
9)
ஆலமரத்தின்
விழுதைக் கொண்டு
பல் துலக்கி வரப் பற்கள் உறுதிப் படும்.
10)
ஆலம்
விழுது சூரணம், மாவிலை சூரணம், இவைகளுடன் சிறிது உப்பும் சேர்த்து பற்பொடியாக்கிப் பல்
துலக்கி வந்தால் பல் ஆட்டம் நிற்கும். பற்கள் உறுதி பெறும். (265)
11)
ஆலம்
விழுதைச் சாம்பலாக்கி நல்லெண்னெயில் குழைத்துத் தடவி வந்தால் அக்கிப் புண் குணமாகும். (1003)
12)
ஆலம்
விழுது, நாவல் பட்டை, மருதம் பட்டை ஆகியவற்றைச் சேகரித்து கசாயம் செய்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மதுமேகம் (நீரிழிவு) குணமாகும்.(1466)
13)
ஆலமரக்
கொழுந்து, அரசமரக் கொழுந்து, அத்திமரக் கொழுந்து மூன்றையும் சேர்த்து நீர் விட்டுக் காய்ச்சிக் கசாயம் செய்து வடிகட்டி சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரத்த பேதி குணமாகும்.(368)
14)
ஆலமரத்தின்
இளம் கொழுந்துகளை எடுத்து வந்து மைய அரைத்து கோலிக் குண்டு அளவுக்கு எடுத்து, பசும்பாலில் கலந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் விந்து கெட்டிப் படும்.(484)
15)
ஆலம்
விதை, வெற்றிலைக் காம்பு, இலவங்கம் ஆகியவற்றைச் சம அளவு எடுத்து பால் கலந்து அரைத்து சூடக்கி, நெற்றிப் பொட்டிலும், உச்சந் தலையிலும் தடவினால் தலைவலி குணமாகும். (402)
16)
ஆலமரத்தின்
கிளைகளில் உள்ள குச்சிகளைத் துண்டுகளாக்கி, நீரில் இட்டுக் காய்ச்சி, வடிகட்டி, தேன் கலந்து குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள பித்தம் குறையும். (539)
17)
ஆலமரத்தின்
இளம் பிஞ்சு, ஆலங்காய், ஆலம்வேர், செம்பருத்திப் பூ ஆகியவற்றை எடுத்து இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் போட்டுக் காய்ச்சி இறக்கி, நான்கையும் அதிலேயே ஊறவிட்டு, தலைக்குத் தேய்த்து வந்தால் முடி கறுப்பாக வளரும்.(918)
18)
ஆலமரப்
பட்டை, ஆலமரத்தின் வேர்ப்பட்டை. ஆலமர மொட்டு, ஆலங் கொழுந்து ஆலம் பழம், ஆலம் விழுது ஆகியவற்றை வகைக்கு 40 கிராம் எடுத்து 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராக வரும் வரைக் காய்ச்சி காலை மாலை இருவேளை குடித்து வந்தால் மேக
எரிச்சல், மேகப் புண், வெள்ளை படுதல் ஆகியவை குணமாகும்.(613)
19)
ஆலமரப்
பட்டையைப் பட்டுப் போல் பொடி செய்து நீரில் இட்டுக் கொதிக்க வைத்து கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் மேகரோகம் குணமாகும்.(626)
20)
ஆலமரப்
பட்டையை பட்டுப் போல் அரைத்து வடிகட்டி, சர்க்கரை கலந்து பருகி வந்தால் நோய் எதிர்ப்பு ஆற்றல் கூடும். (755)
===========================================================
மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்” என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ் அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள் மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam77@gmail.com]
ஆட்சியர்,
தமிழ் மூலிகை வலைப்பூ,
[தி.பி:2052,மேழம்(சித்திரை)17]
{30-04-2021}
ஆலம் பழம் |
ஆல மரம் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக