இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

வெள்ளி, 30 ஏப்ரல், 2021

ஈஸ்வரமூலி

     மூலிகைப் பெயர்..............................................ஈஸ்வரமூலி

     மாற்றுப் பெயர்கள்..........பெருங்கிழங்கு, பெருமருந்து

      ...............................................தராசுக்கொடி, தலைச்சுருளி

      ............................................................ஆடுதீண்டாப்பாளை ?

     தாவரவியல் பெயர்.......................ARISTOLOCHIA INDICA

     ஆங்கிலப் பெயர்..................................INIAN BIRTH WORT

     சுவை..............................................................................கைப்பு

     தன்மை.......................................................................வெப்பம்

 

 ===============================================

 

1)  நீண்ட மாற்றடுக்கில் அமைந்த இலைகளையும் பச்சை வெள்ளை குழல் வடிவ மலர்களையும் கொண்ட ஏறு கொடி வகை.

 

2)  ஆடுதீண்டாப் பாளைக்கு ஈஸ்வர மூலி என்றும் ஒரு  பெயர் உண்டு என்று தெரிகிறது. பல்பொருள் ஆங்கிலத் தமிழ் அகரவரிசை  பக்கம் 84  INDIAN BIRTHWORT காண்க.

 

3)  மிகவும் கசப்புச் சுவை உடையது. இலை வேர் ஆகியவை மருத்துவப் பயன் உடையவை.

 

4)  ஈஸ்வரமூலி மாதவிடாய் தூண்டியாகவும், தாது பலப் படுத்தியாகவும், உடல் வெப்பு உண்டாக்கி, முறை நோய்களை அகற்றும் மருந்தாகவும் செயல்படும்.

 

5)  ஈஸ்வரமூலி வேரை 40 கிராம் சிதைத்து, அரை லிட்டர் நீரில் போட்டு எட்டில் ஒரு பங்காகக் காய்ச்சி 30 மி.லி வீதம் 3 வேளையாகக் கொடுக்க உதிரச் சிக்கல் தீரும். பாம்புக்கடி, தேள் கடி விஷம் நீங்கக் கடிவாயில் இலையைக் கசக்கித் தேய்க்கலாம்.

 

6)  ஈஸ்வரமூலி வேரைத் தேனில் உரைத்து ஒரு கிராம் வீதம் உள்ளுக்குக் கொடுத்து வர வெண்குட்டம், சோகை நீங்கும்.(563)

 

7)  ஈஸ்வரமூலி இலையை உலர்த்திப் பொடி செய்து 3 கிராம் வீதம் காலை மாலை கொடுத்து வர அக்கினி மந்தம், பேதி, சுரம், படர் குட்டம், இருதய நோய், பாண்டு, சோவை, சொறி, சிரங்கு, முதலியன போகும்.

 

8)  ஈஸ்வரமூலி இலைச் சாறு அல்லது இலை, எல்லா நஞ்சையும் போக்கும் குணம் உடையது.

 

9)  பாண்டகற்றும் மெய்யில் படர்குட்ட நோய்விலக்கும்

     நீண்ட இருதயநோய் நீக்கும்காண்தாண்டதப்பை 

     முன்னே ஒழித்துவிடு மூவாத் தலைச்சுருளி

      என்னே உலகில் இசை.  (வெண்பா)


===========================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்,  பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

  சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க ! 

================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,மேழம்(சித்திரை)17]

{30-04-2021}


================================================


ஈஸ்வரமூலி

ஈஸ்வரமூலி



 


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக