இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

செவ்வாய், 1 ஜூன், 2021

மிளகாய்ப்பூண்டு

                மூலிகைப் பெயர்.........................மிளகாய்ப் பூண்டு

                மாற்றுப் பெயர்................................இரயிவே பூண்டு

                தாவரவியல் பெயர்.........................................................

                ஆங்கிலப் பெயர்..............................................Ban Tulsi

 

        ===============================================


01.   மிளகாய்ப் பூண்டுச் செடியின் இலைகளைப் பறித்து அரைத்து இடுப்பு வலியுள்ள இடத்தில் பற்றுப் போட்டு வந்தால் இடுப்பு வலி குணமாகும்.

 

02.   மிளகாய்ப் பூண்டு இலையைப் பறித்து கசாயம் வைத்து மூன்று வேளை சாப்பிட்டால் கை, கால் இடுக்குகளில் நெறிகட்டியதால் வந்த சுரம் குணமாகும்.  (1542)

 

03.    மிளகாய்ப் பூண்டு இலையைக் கீரை போல் வதக்கி சோற்றில் பிசைந்து சாப்பிட்டால் மலச் சிக்கல் தீரும்.  (1546)

 

04.    மிளகாய்ப் பூண்டு இலைக் கசாயம் மூன்று வேளைகள் குடித்தால் கட்டிகள் கரையும்.  (1547)

 

05.    மிளகாய்ப் பூண்டு விதையில் எண்ணெய் தயாரித்து இரண்டு துளிகள் எண்ணெய் எடுத்து சர்க்கரை சேர்த்து காலை, மாலை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், பாரிசவாயு, பக்கவாதம், இழுப்பு, இளம்பிள்ளை வாதம், முகவாதம் ஆகியவை குணமாகும்.  (1108) பக்கசூலை குணமாகும்.  (1544)  (1583)

 

06.    மிளகய்ப் பூண்டு வேரினை எடுத்து நீர்விட்டுக் கசாயம் வைத்து இரண்டு வேளை குடித்து வந்தால் வாதநோய், வாத வீக்கம் ஆகியவை குணமாகும்.   (1543)


=======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

============================================ 

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை,

[தி.பி:2052,விடை(வைகாசி )18]

{01-06-2021}

============================================



மிளகாய்ப்பூண்டு

மிளகாய்ப்பூண்டு

மிளகாய்ப்பூண்டு



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக